நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Tuesday, September 1, 2009

பெரிய பண்ணை யின் வளர்ப்பு நாய் .......

பெரிய பண்ணை யின் வளர்ப்பு நாய் ............

அந்த ஊரிலே , மிகவும் மிடுக்காகவும் , அதிகாரத்துடன் ஒருவர் நடந்து போனார் என்றால் அவர் பெரிய பண்ணையாராக தான் இருக்கவேண்டும் .அவ்வளவு அதிகாரங்களை  இந்த பெரிய பண்ணயார்கையில். அந்த ஊர் மக்கள் எல்லோரும் , அவரின் சொல்லுக்கு கட்டு பட்டு தான் நடப்பவர்கள். அவரின் வீடு அந்த ஊரின் மத்தியில் அமைந்து இருந்தது . அந்த வீதியின் எல்லயில் இருப்பது தான் முத்துவின் சிறு குடிசை.

பண்ணை  வீட்டுக்கு  போகும் பிரதான நீர் வழங்கல்  குழாயின் ஒரு சிறு பகுதி இணைப்பு அவரின் சுற்று மதில் வீட்டின் மூலையில் அமைந்து இருந்தது . முத்துவின் மனைவி மீனா , தன் கடைக்குட்டியை , நல்ல குடி தண்ணீர் பிடித்து வ்ரும் படி அனுப்பினாள். கடைக்குட்டி யும் தன் குடத்தை எழுத்து கொண்டு , போக அவன் வீடு  பெட்டை  நாய் ஈன்ற குட்டிகளில்  ஒன்று தானும் தானும் என்று , அவன் பின்னே துள்ளி யும் ஓடியும் சென்றது .அவ்வழியால் போவோருக்கு பண்ணை வீட்டு  காவல் நாய்களுக்கு பயம். அவைகளின் தோற்றமும் , கத்தும் (குரைக்கும்) தொனியும் திகிலூட்டும். அவைகளை   கூட்டை விட்டு இரவில் திறப்பார்கள் அதிகாலை  ஆறு மணிக்கெல்லாம் , அடைத்து வைப்பார்கள். யாரும் உள் செல்வதென்றால் காவலாளியிடம் நாய் கூடுக்குள் நிற்கிறதா என்று கேட்டு விட்டு தான் உட் செல்ல முடியும்.

கடைக்குட்டி குடத்தில் நீரை நிரப்பி , தான் தலை மீது வைக்கவும் , நாய்களின் குரைப்பு கேட்கவும் குடத்தை  கீழே போட்டு விட்டு ஓடத்தொடங்கினான். குட்டி நாயும் வேகமாக ஓடத்தொடங்கியது .அவர்களின் கஷ்ட காலம் அன்று நாய்கள் கூட்டுக்குள் அடைக்கவில்லை. ஒரே ஒரு கவ்வி உதறலுடன் குட்டி நாய் , கதறலுடன் இறந்து விட்டது .பெரிய நாய் தன் இனம் என்று கூட சிந்திக்கவில்லை.(ஐந்து அறிவு படைத்தஜீவ்ன் எங்கே அறிவு ) பின்னல் துரத்தி வந்த காவலாளி , அவைகளை கட்டுக்குள் கொண்டு வந்தான்.

கடைக்குட்டி வீட்டில்  போய் நடந்ததை சொன்னான். வலிமை படைத்தவனின் நாய் கூட , ஏழை களின் நாயை குதறி விட்டன.சில  நாடுகளின் அதிகாரவார்க்கம் , சிறுபான்மையினத்தை கொன்று ஒழிப்பது போல  பண்ணை வீட்டு நாய்க்கும் ஏழை வீட்டு நாய்க்கும் நடந்த கதை  .

 ஒரு  நாட்டில் பெரும் பான்மை இனம் சிறு பான்மை இனத்தை சில வலிமையானவர்களின் உதவியோடு ஒழித்து கட்டுவது என் நினைவுக்கு வருகிறது.

நாய்களுக்கே  இந்தகதி என்றால் மனிதர்களுக்கு .............(என்னை சிந்திக்க வைத்த நிகழ்வு )

16 comments:

seemangani said...

ஐ ....பாஸ்ட்...
//போக அவன் வீடு பெட்டை நாய் ஈன்ற குட்டிகளில் ஒன்று தானும் தானும் என்று , அவன் பின்னே துள்ளி யும் ஓடியும் சென்றது//

அருமையான வரிகள்....நிலா அக்கா....
என்னையும் சிந்திக்க வைத்து விட்டது உங்கள் எழுது...

நிலாமதி said...

வரவுக்கும் பதிவுக்கும் நன்றி. நாய் இன மானாலும் பண்ணயார் வீட்டு நாயாக பிறக்கணும்.

பிரியமுடன்...வசந்த் said...

ப்ச்...

:(

ராஜராஜன் said...

//ஒரு நாட்டில் பெரும் பான்மை இனம் சிறு பான்மை இனத்தை சில வலிமையானவர்களின் உதவியோடு ஒழித்து கட்டுவது என் நினைவுக்கு வருகிறது//.

அவ்வளவும் உண்மையே ...

நிலாமதி said...

பிரியமுடன் வசந்த .........உங்க வரவுக்கு நன்றிங்கோ

நிலாமதி said...

வணக்கம் ராஜராஜன்..உங்கள் வரவுக்கு என் நன்றிகள் ஈழத்தமிழர்களின் வலி உணர்ந்த உங்களுக்கு என் இதயம் கூறும் , நட்பு நிறைந்த நன்றிகள் . தொடர்ந்து இணைந்து இருங்கள்.

சப்ராஸ் அபூ பக்கர் said...

///கடைக்குட்டி வீட்டில் போய் நடந்ததை சொன்னான். வலிமை படைத்தவனின் நாய் கூட , ஏழை களின் நாயை குதறி விட்டன.சில நாடுகளின் அதிகாரவார்க்கம் , சிறுபான்மையினத்தை கொன்று ஒழிப்பது போல பண்ணை வீட்டு நாய்க்கும் ஏழை வீட்டு நாய்க்கும் நடந்த கதை .///

நல்ல படிப்பினை மிக்க கதை அக்கா....

அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்...

நிலாமதி said...

அபூ.........உங்க வரவுக்கும் பதிவுக்கும் நன்றிகள்.

KISHORE said...

அதிகார வர்கத்தின் சுபாவம் ... அவர்கள் வீட்டு நாய்களுக்கும் உண்டு.. அருமை தோழி...

யோ வாய்ஸ் said...

நல்ல கதை வாழ்த்துக்கள்

Shan Nalliah / GANDHIYIST said...

Greetings from Norway!

கதிர் - ஈரோடு said...

//பெரிய நாய் தன் இனம் என்று கூட சிந்திக்கவில்லை//

இதுதான் கொடுமை

நிலாமதி said...

கிஷோர் உங்கள் வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும்,மிக்க நன்றி.

நிலாமதி said...

யோ.........உங்களுக்கு என் நன்றிகள்.

நிலாமதி said...

ஷன் நல்லையா ...........,உங்கள் வரவுக்கு என் நன்றிகள்.

நிலாமதி said...

மனிதனை மனிதன் கொடுமைப்படுத்தும் செயல் ,மனிதன் மிருக நிலைக்கு சென்று விட்டான் என எண்ண தோன்றுகிறது,.உங்கள் பகிர்வுக்கு என் நன்றிகள்.