நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

திங்கள், 16 ஜனவரி, 2012

தை மகளே வா


புதுப்பானையில் புத்தரிசியிட்டு
சுவையோடு சக்கரை சேர்த்து
பால் பழமும், இன்முகம் கொண்டு
வரவேற்கிறோம் ,தை மகளே வா.

பழையன கழிய வேண்டும்
புதியன பல புக வேண்டும்
இன்பம் தரவா..இன்னல் தீர்க்க வா
ஈழத்து மக்களுக்கு விடிவு கொண்டு வா

பசித்தவனுக்கு  உணவளித்த கூட்டம்
பசிப்பிணியால் வாடுகிறது
ஆட்சி பீடத்தில் போலி வாக்குறுதி
 கால இழுத்தடிப்புக்களும்   தாராளம்

வெளிநாட்டு உதவியில் உண்டு
கொழுக்கிறது  பெரும்பான்மையினம்
உதவிக்கரங்கள் உரியவ்ரகளை
உரிய வேளையில்  போய்  சேர்வதில்லை

கலப்பை மறந்த பூமியில்
காலத்தின் தேவை கருதி
காலமெல்லாம்  சிறக்க
உழவுத்தொழில் மலர வேண்டும்

6 கருத்துகள்:

விமலன் சொன்னது…

க்லப்பயை மட்டும் மற்றவில்லை.அதை சுமந்த மனிதர்களையும் மறாந்து போனோம்.அதனால்தான் இத்தனையும்/உழவுத்தொழில் வளர வேண்டும் என்பதுவே சரி.

தமிழ்த்தோட்டம் சொன்னது…

சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள் அக்கா

செய்தாலி சொன்னது…

தை திருநாளிற்கான கவி அருமை
என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோ

என் சுய தர்மசங்கட கவிதை வரிகளுக்கு
ஆறுதல் வரிகளில் அன்புகாட்டிய உங்கள் அன்பிற்கு
என் மனமார்ந்த நன்றிகள் சகோ

அம்பலத்தார் சொன்னது…

உங்களுக்கும் உங்க குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய பொங்கல்ல்ல் வாழ்த்துக்கள். உங்கள் ஆதங்கத்துடன் புரிகிறது.

கலை சொன்னது…

super akkaa....

unmaithaan....

happy pongal akkaa ungalukkum ungal veetil ullavargalukkum

♔ம.தி.சுதா♔ சொன்னது…

புது வழி கொண்டுவந்த தைத்திருநாளில் வாழ்த்தி மகிழ்வடைகிறேன் அக்கா...