Followers

Tuesday, March 23, 2021

ஊருக்கு உபதேசம்

 


ஒரு கிராமத்திலே சிறந்த  கல்விமான் இருந்தார். முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அவரை பேச அழைப்பது  வழக்கம் .இப்படியாக ஒரு நாள்  மாலை ஒரு கூட்ட்துக்கு அழைப்பு வந்தது அவரும் சென்று தனதுநேரம் வரும் போது  உரையாற்ற தொடங்கினார்.உரையின் இடையே  வாழ்க்கையிலே  உண்மை நேர்மையாக இருக்க வேண்டும் . பிறர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது .  என  பல வாறு பேசினார்.  ஆகா என் கணவர்  நேர்மையானவர்.  தெரியாமல் அற்ப ஆசையில் பக்கத்து வீட்டு சேவலை பிடித்து அடைத்து   வைத்து விட்டார் என்று எண்ணி னார் .   

இந்தக் கூட்ட்த்துக்கு அவர் மனைவியும்  இவருக்கு தெரியாமல்  என்ன நடக்கிறது என  விடுப்பு பார்க்க போயிருந்தார். அவர் வீடு வருவதற்கு முன்பே  இவர் வந்து கூடைக்குள் ஒழித்து வைத்த பக்கத்து வீட்டு சேவலை  திறந்து   விட்டு  விடடார் ...சற்று இருள் தொடங்க இவர் கணவன்  வீட்டுக்கு வந்தார் . மனைவியை அழைத்து  வீட்டுக் வேலைக்கார பையனிடம் சொல்லி  அந்த சேவலை  உரித்து  சமைத்து வை  நான் குளித்துவிட்டு வருகிறேன் என்கிறார்.  மனைவியோ  அலங்க மலங்க விழித்தார் . அடி பேதைப்பெண்ணே ஏன் திருட்டு முழி  முழிக்கிறாய் என  ஏசினார்.  அவள் அழுகையுடன் நடந்ததை சொன்னாள். கல்விமானுக்கு கோபம்.குளிக்க சென்று  விடடார் .


  பின் இரவு உணவுக்ககாக மேசையில் அமர்ந்தவருக்கு சுடச்சுட   கோழிக்கறி உணவு பரிமாறினார். சாப்பிட்டு ஏப்பம் விடட படி   "எங்கே இருந்து கோழிக்கறி வந்தது" என கேடடார் . அயல் வீட்டு காரர் தமது  ஊர் மேயும் கோழி அடிக்கடி  காணாமல் போகிறது. . இன்று  மாலையில் எங்கிருந்தோ  வந்து விட்ட்து. மீண்டும் காணாமல் போக கூடாது என  எண்ணி  சமைத்து தாங்களும் உண்டு எங்களுக்கும் தந்தார்கள். என்றார். கோழிக் கறி  உண்ட களையுடன் உறங்க சென்று விடடார் . அடுத்த நாள் அவர் நல்ல மன நிலையில்  மனைவியிடம் ..".ஊருக்குத் தான் உபதேசம் உனக்கில்லையடி பெண்ணே " என்றார். மனைவி மெல்ல சிரித்தார். அயல் வீட்டுக்கு  பையனை அனுப்பி காசு கொடுத்து  ஒரு கோழியை  சமைத்து தரும் படி கேடட ரகசியம்  மனைவிக்கு மட்டுமே தெரியும்.

No comments: