ப ரந்த வெளியிலே
ஒற்றை மரமாய்
தனித்து நின்றாலும்
இரைதேடும் பட்சிகளுக்கு
தங்குமிடமாகிறது
மேற்கே மறையும் சூரியனும்
தெளிந்த நீரோடையும்
மெல்லென் தழுவிச்
செல்லும் காற்றும்
நீரிலே தோன்றும்
சூரிய ஒளியும்
இரவை நோக்கி
நகர்ந்து சென்று
விடிவு என்னும் உதயம்
உனக்கும் எனக்குமாய்
ஆழ்ந்த நம்பிக்கையோடு
நிச்சயம் பிறக்கும்
24 comments:
Me the 1st...(இத இன்னும் விடலையா???)
விடிவின் நம்பிக்கை கவிதை அருமை நிலாக்கா...வாழ்த்துகள்...
நிச்சயம் பிறக்கும் :-))
விடிவு என்னும் உதயம்
உனக்கும் எனக்குமாய்
ஆழ்ந்த நம்பிக்கையோடு
நிச்சயம் பிறக்கும்
...... Being positive! நம்பிக்கையூட்டும் கவிதை, அருமை!
அழகான கவிதை!
நம்பிக்கையே வாழ்வின் வெற்றி தோழி.அழகான வரிகள் கவிதையில்.
"இந்தக் கவிதை பிரசவித்த போதே .... உதயமும் பிறந்தாச்சு பின்னே என்ன??"
நம்பிக்கைக் கவிதை அருமை
இன்றைய விடியலில் விடிவு பிறக்கும் என்ற இயல்பான நம்பிக்கை... நிறைவேற வாழ்த்துக்கள்..
நம்பிக்கையை விதைத்தது... கவிதை.
நிச்சயம் விடிவு பிறக்கும் தோழி....
ஆழகான வரிகள்
http://marumlogam.blogspot.com/2010/11/blog-post_08.html
நம்பிக்கை ஊட்டும் கவிதை அழகு
நம்பிக்கை தானே வாழ்க்கை. நிச்சயம் விடிவு பிறக்கும். நல்ல கவிதை சகோ.
அக்காச்சி கவிதையும் நல்லா எழுதுறா வாழ்த்துக்கள்
நம்பிக்கையூட்டும் கவிதை
விடிவு பிறக்கும் தோழி
அழகிய படம்.
அதைவிட அழகானது கவிதை.
அருமையான கொண்டாட்டமாக இருந்திருக்கிறதே.
நம்பிக்கையை விதைக்கும் வரிகள்! அருமை!
விரைவில் விடிவு நிச்சயம். நிலாமதி உங்களுக்கு எனது உளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்
அன்புடன் மங்கை
அழகான வரிகள்!
வாழ்த்துக்கள்
எவ்வளவு நீண்ட இரவானாலும் விடியல் என்பது நிஜம் என்ற நம்பிக்கையை விதைக்கிறது.
வாழ்த்துக்கள்..
//விடிவு என்னும் உதயம் உனக்கும் எனக்குமாய் ஆழ்ந்த நம்பிக்கையோடு நிச்சயம் பிறக்கும் //
தன்னம்பிக்கையூட்டும் வரிகள்..தொடருங்கள்...
//விடிவு என்னும் உதயம்
உனக்கும் எனக்குமாய்
ஆழ்ந்த நம்பிக்கையோடு
நிச்சயம் பிறக்கும்//
நிச்சயம் பிறக்கும்
காலம் கண்டிப்பாக பதில்சொல்லும்
அருமையானது நிலா அக்கா
ஃஃஃஃஃநீரிலே தோன்றும்
சூரிய ஒளியும்
இரவை நோக்கி
நகர்ந்து சென்றுஃஃஃஃ
அருமையான வரிகள் அக்கா...
Post a Comment