நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Sunday, July 12, 2009

பரிசு ..............

பரிசு ..............

அந்த சிறு கிராமத்தில் . வாழ வந்தவள் தான் , சாவித்திரி . தபாற்காரன் சோமுவுக்கு மனிவியாக , இனிதே இல்லறம் நடத்தி வந்தாள் . மூத் தவள் , .சோபனா , சுதா ..இருவரும் படிப்பில் கெட்டிகாரி கள். . கணவனின் வருமானத்துக்கேற்ப செலவு செய்து . தானும் தன பாடுமாக வாழ்ந்து வந்தாள் . சோமுவும் கம்பீரமான தோற்றம் கொண்டவள். அந்த ஊர் மக்களால் மிகவும் விரும்ப பட்டவன் . காதலர்களுக்கு தெய்வமானவன். வழியில் மறித்து தபாலை பெற்று கொள்ளவதில் அந்த ஊர் இளையவர்கள் பலே கிலாடிகள். வீடில் வந்து எதுவுமே சொல்லமாட்டான்.அந்த ஊரில் தபால் அதிபர் , இருவருடதுக்கு ஒரு முறை மாற்றம் பெறுவார்கள். இடையில் அவர்களது குடும்பத்துக்கு மளிகை பொருட்கள் வாங்கவும் அனுப்ப படுவான் . காலையில் , காக்கி சட்டையுடன் புறப்படும் அவன் . மாலையில் சிலசமயம் மதியமே வீடு வந்து விடுவான். ரயில் வர தாமதமாகும் நாட்களில் அவனும் வீடு திரும்ப நேரமாகும் . தபால் கந்தோருக்கு வரும் பென்சன் காரருக்கும் மிக நட்பானவன். அந்த ஊரில் பதின் நான்குக்கும் பதின் ஆறுக்கும் இடையில் வரும் ஒரு வேலை நாளில் ஓய்வூதியம் கொடுப்பார்கள் . வாசிக்க சாலை பெரியவர்கள் இவனை கண்டால் " சோமு எப்பவாம் இந்த முறை பென்சன் " என்பார்கள். அவனுக்கு தெரிந்தால் அந்த நாளை சொல்வான்.

அந்த ஊரில் விசில் சத்தம் வீட்டு காரரை வாயிலுக்கு அழைக்கும். கடிதம் விநியோகத்துக்காக . இனிமையாக போய் கொண்டிருந்த அவர்கள் வாழ்வு ஒரு நாள் இருண்டு விட்டது ...ஒரு நாள் சோமு கடித பரிமாறல் செய்து கொண்டிருக்கும் ஒழுங்கையால் வந்து திரும்பும் போது , எதிரே வந்த லாரி யை ( கன ஊர்தி ,கன ரக வாகனம் )) கவனிக்க வில்லை இவன் மீது மோதி விட்டது சைக்கிள் (மிதி வண்டி ) ஒரு புறம் ....சிதறிய தபால் பொதிகள் ஒரு புறம் ரத்தவெள்ளத்தில் கிடந்தான் . பின்பு அம்புலன்சு ......பொலிசு ( நகர் காவலர் ) ......விசாரணை என்று எல்லாம் முடிய அவனது உயிரற்ற உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது .......ஊரவர்கள் எல்லோரும் கண்ணீர் மல்க விடை பெற்றான் இரு பெண்குழந்தைகள் பத்து ..ஒன்பது அனாதைகளாக விடப்பட்டனர். கையில் இருந்தவற்றை கொண்டு காலத்தை ஓட்டினாள்.எல்லாம் முடிய அவனது பென்சன் , பணத்துக்காய் பார்த்து கொண்டு இருந்தாள் ....அது வர மிக தாமதமாகியது ....கூலி வேலைக்கும் சென்றாள். ,,,,பிள்ளைகளும் வளர்ந்து மூத்தவள் பெரியவ ஆனாள் .அத்தோடு ....அவள் பாடசாலை இடை நிறுத்தபடார். இளையவள் ...சிலகாலம் படித்தும் ...முடியவில்லை. ..அவளுக்கு ஆங்கில அறிவும் குறைவு . தபால் அதிபர் ...மேலதிகாரிகள் என்று எல்லாரிடமும் பேசி பார்த்தாள். இவள் கோலத்தை கண்டு யாரும் மதிக்கவில்லை. ...கையூட்டு கேட்பவராக் இருந்தனர். இதன் போது தான் அந்த ஊர் " கந்தோர் கந்தசாமி "....அறிமுகமானார். இவள் தன பிரச்சினையை சொல்லி கேட்டால் ஆங்கிலத்தில் கடிதம் எழுத அடிக்கடி இவள் வீடுக்கு வருவார். பெஞ்சனியராக் இருந்தாலும் கம்பீரமான இருப்பார் . இரு மகன் கள் பெரியவர்கள் ....வெளி நாடில் இருந்தார்கள். மனைவி சாரதாம்பாள் எந்நேரமும் கோவில் குளம் என்று திரிவாள். பணியாட்களை கொண்டு பூக்களை கட்டி கோவிலுக்கு ..சிலைகளுக்கு அணிவிப்பாள் . ,விரதம் இருப்பது என்று . எந்நேரமும் சமய அலுவல் செய்வாள். கந்தோர் கந்தசாமியார் சாவித்திரி வீட்டுக்கு போய் வருவது ...ஊரவர்களால் தப்பாக பேசபட்டது இது சாரதாம்பாளுக்கும் காதில் எட்டவே கணவனை கண்டித்தாள். சிலர் மாலை மங்கும் நேரங்களிலும் போய் வருவதாக சொன்னார்கள். ..

.இப்படி பல மாதங்கள் சென்றன. ஒரு நாள் ....அந்த ஊரில் உள்ள ஒருவருக்கு ரண்டாந்தாரமாக் மூத்த பெண்ணை கேட்டனர். அயல் ஊரில் இருந்தவர்கள். மகளுக்கு சிறியவயது என்று தட்டிக்களித்து விடாள்.ஒரு நாள் ....வழமையாக கூலி வேலைக்கு செல்லும் அவள் வேலைக்கு வராததால் .....அந்த ஊர் பெரியவர் ஒருகூலி ஆளை அனுப்பி சென்று கூப்பிடு பார்த்த போது . அவள் இல்லை. ...பிள்ளைகள் இரண்டும் . தூரத்து கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்று விடார்கள் வந்து பார்த்தபோது .........சாவித்திரி ...வீட்டின் முகட்டின்

சீலை இல் தொங்கி கொண்டு இருந்தாள் .........பாவம் அந்த சாவித்திரி க்கு ஊர் கொடுத்த் பரிசு .......நடத்தை. கெட்டவள். i

விலைமாதர் ...........விபச்சாரிகள் ....நடத்தை கெட்டவர்கள்.... அவர்களாக பிறப்பதில்லை .......உருவாக படுகிறார்கள்.

This post has been edited by நிலாமதி: Yesterday, 11:09 PM

4 comments:

VISA said...

நிறைய எழுத்து பிழைகள் இருக்கின்றனவே. ஆனால் உற்சாகமான விறுவிறுப்பான எழுத்து நடை. தொடருங்கள்

Kavi kilavan said...
This comment has been removed by a blog administrator.
Kavi kilavan said...

பிரச்சனைகளை உருவாக்குவதும் சமுகமே
பிரச்சனை கொடுப்பதும் சமுகமே
பிரச்சனையாய் இருப்பதும் சமுகமே
பிரச்சசனை இருப்பதும் சமுகத்திலே
பிரச்சனைக்கு தீர்வும் சமுகத்திலே

சமுகத்தின் வர்க்கங்களை சிந்திக்வைக்கும்

இலங்கையில் இருந்து யாதவன் தம்பி

நிலாமதி said...

தம்பி யாதவா ........மிக்க மகிழ்ச்சி உன் பதிவு கண்டு வலை உலகுக்கு நானும் புதிது ,குறை நிறை சுட்டிக்காட்டி என்னயும் உங்களுடன் இணைத்துசெல்லுங்கள். பதிவுக்கும் கருத்துக்கும் நன்றி .தொடர்ந்து இருங்கள்