நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Thursday, July 30, 2009

அப்பா வருவாரா?

அப்பா வருவாரா?

வாழ்க்கையின் இன்னுமொருநாள் மெல்ல உதயமாயிற்று , நித்திலா எழுந்ந்து ,காலைக்கடன் முடித்து , அடுப்பை பற்றவைத்து ,பிள்ளைகளுக்கு ,தேனிர் தயாரிக்க ஆயத்தமானாள் .. நிகிலாவும் நித்தியனுமாக இரு பிள்ளைகளுடன் , புலம் பெயர்ந்து யாழ் நகரத்துக்கு வந்து இரண்டே மாதங்கள் . நிதிலாவும் கணவன் ராகவனும் ,பிழைப்பு தேடி ,ஈழத்தின் ஒரு தீவிலிருந்து வந்திருந்தார்கள்.

ராகவன் எற்கானவே ஆட்களை வைத்து கடற்தொழில் செய்தவன், காரைநகர் நேவியின் அட்டகாசத்தால் ,தொழில் செய்யமுடியாத நிலையால் ெட்டும் பட்டணம் போ என்பதற்கிணங்க இரு மாதங்களுக்கு முன் தான் வந்திருந்தனர்.

யாழ் கத்தோலிக்க தேவாலயம் அருகே ஒரு குடிசை கிடைத்து ,பிள்ளைகளையும் அருகிலிருக்கும் கன்னியர் மட பாடசலையில் சேர்த்துவிட்டு ,கணவன் மனைவி இருவரும் வேலை தேடி ,புறப்பட்டார் கள் . கடைசியாக ஒரு முதியவர் இரங்கி ,ஒரு சைக்கில் கடையில் திருத்துனராக் ,வேலை கிடைத்தது. ராகவன் பள்ளி காலத்தில் ்வீட்டுக்கு அருகாமையில் இருந்த மணியம் சையிக்கில் கடையில் தனது ஓய்வு நேரத்தை செலவிட்டமை ,இப்பொது கை கொடுத்தது, கடந்த இரு வாரங்களாக அவன் வேலைக்கு செல்கிறான் , வீட்டிலும் ஏதோ குடுமபத்துக்கு ,அரை வயிறு உணவாவது கிடைக்கிறது போதும் என்ற மனம் கொண்ட அவர்கள் வாழ்வு இனிதே ஓடிக்கொண்டு இருந்தது.

அதிகாலை ஆறு மணிக்கே ,வேலைக்கு செல்லும் அவன் போய்விட்டதும் எட்டு மணிக்கு பிள்ளைகளை அனுப்பிவிட்டு , அருகில் இருந்த வயதான மூதாட்டிக்கு ஏதும் சரீர உ தவி செய்து கொடுப்பாள்,அவவும் சமையலுக்கு தேவையான் பொருட்கள், சிறு பண மும் கொடுப்பார். இது அவர்ளது படிப்பு செலவுக்கு உதவியது.

சிலசமயம் கடையில் அன்றாட தேவைக்கு பொருட்கள் கிடைக்கும் சிலசமயம் பொருட்கள் யானை விலை விற்கும் அன்றாடம் காய்ச்சியான அவர்கள் வாழ்வு, ஓரளவு ஓடிக்கொண்டு இருந்தது. ஒன்பது வயதேயான நிகிலாவும் ஆறுவயது நித்தியனும் நன்றாக படிப்பார்கள். வானில் வட்டமிடும் எதிரி வல்லூருகலுக்கும் , படையினரின் கெடுபிடிக்கும் மத்தியில் எங்கே விளையாட்டும்,பொழுது போக்கும். அருகில் உள்ள கன்னியர்மட கோவிலுக்கு சென்று வழிபாடுகளில் கலந்துகொள்வர், ஒரு நாள் ஒரு துறவி இவர்கள் துன்பத்தை கேட்டு பிள்ளைகளுக்கு வீட்டு பாடத்தில் உதவி செய்வதாக் சொன்னார் ,நிகிலா அமைதியானவள், நித்தியன் சற்று துடினம் சித்திரையில் பிறந்த உத்தம புத்திரன். அவனுக்கு எதிலும் வேகம், பிடிக்கும், ஒருநாள் சைக்கில் பழகி,விழுந்து காலில் காயப்படான், வைத்திய சாலைக்கு போகமுடியாத நிலையில்,கன்னியர் மடத்தில் காயத்துக்கு கட்டு போட்டு,முதலுதவி செய்தனர்.

இப்படியான ஒரு காலை பொழுதில் அவர்களது குடும்ப அமைதியை குழப்ப ஒரு சம்பவம் நடந்தது , வழக்கம் போல ராகவன் வேலைக்கு செல்லும் போது ,வெள்ளை வான் காரர், மறித்து விட்டனர் , தீவிலிருந்து ஏன் இங்கு வந்ததென்றும்,சந்தேகம் இருப்பதாக கூட்டி சென்றவர்கள் விடவே இல்லை .

கடைக்கார முதியவரும் அன்று மதியம் வேலைக்கு வரவில்லை ,விரைவில் முடித்து கொடுக்கவேண்டிய வேலை உள்ளது என்று வீடு தேடி வந்த பின் தான் தெரிந்தது நித்திலாவுக்கு ,ராகவன் பிடிபட்டவிடயம். அவளும் எல்லா இடமும் தேடி அலைந்து ,வேண்டியவர்களுக்கு விண்ணப்பமும் கொடுத்து விடாள் . இன்னும் ராகவன் வரவேயில்லை. நித்தியனும் தந்தையின் அருகாமையில் படுப்பவன் ,அப்பா
எப்ப வருவார் ? என்று கேட்டு ,களைத்து ,இப்போதெலாம் அப்பா வருவாரா? என்கிறான். ஊரவர்களும் பல கதைகளை சொல்லி அவள்மனம் ,வேதனையில் ,துடிக்கிறது, அவன் வருவானா? எங்கேயிருக்கிறான். ஏதும் , உடலம் கிடப்பதாக கேள்விப்பட்டால் ,
சென்று பார்க்கிறாள் அது அவனாக இருக்ககூடாதென்று. அவன் வருவானா ?

அப்பாவருவாரா ? ......எல்லாம் தெரிந்த அந்த ஆண்டவனுக்கு தான் புரியும். .

8 comments:

கவிக்கிழவன் said...

நன்றி உங்கள் கருத்துகளுக்கு

ராகவன் எற்கானவே ஆட்களை வைத்து கடற்தொழில் செய்தவன், காரைநகர் நேவியின் அட்டகாசத்தால்

யாழ் கத்தோலிக்க தேவாலயம் அருகே ஒரு குடிசை கிடைத்து ,பிள்ளைகளையும் அருகிலிருக்கும் கன்னியர் மட பாடசலையில் சேர்த்துவிட்டு ,

வாசிக்கும்போதே மனம் ஏங்குது ஊருக்கு போவோமா
கவிக்கிழவன்

நிலாமதி said...

"நாங்கமட்டும் உலகத்திலே நாடு திரும்ப முடியமுடியவில்லை "...
தாயக நினைவு சோகம் தான். நன்றி கவிகிழவன் .........

சந்ரு said...

நல்லதொரு இடுகை தொடருங்கள் வாழ்த்துக்கள்....

யோ (Yoga) said...

வாழ்த்துகள் சகோதரி மிகவும் சிறப்பாக எழுதுகிறீர்கள்

நிலாமதி said...

நன்றி சந்துரு ........உங்கள் வரவுக்கும பதிவுக்கும்.

நிலாமதி said...

நன்றி யோ ..........உங்கள் வரவுக்கும் என்னை ஊக்க படுத்து தலுக்கும்.நட்பை பற்றிய உங்கள் பதிவு அருமை. தொடருங்கள் வாழ்த்துக்கள்.

VISA said...

நிலாமதி உங்களிடம் உணர்ச்சி வீச்சு நிறையவே இருக்கிறது. நேர்த்தியாக சொல்ல நினைக்கும் உணர்ச்சியை எங்களுக்கு உணர்த்திவிடுகிறீர்கள். வாழ்த்துக்கள். ஆனால் சில இடங்களில் தோய்வு இருக்கிறது. பழக பழக வந்துவிடும். நிறைய புத்தகங்கள் படியுங்கள். நன்றி
விசா.

நிலாமதி said...

விசா ..........உங்கள் வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி . உங்கள் கருத்தை மனதில் இருத்தி செயல் படுகிறேன்.