Followers

Thursday, August 20, 2009

பட்டுச்சட்டையும் பழைய சாதமும் ....

பட்டுச்சட்டையும் பழைய சாதமும் ..........

அந்த நகரத்தின் எல்லையில் ஊரில் அமைந்து இருந்தது ஒரு கன்னியர் மட விடுதி. அங்கு தான் நம்ம கதா நாயகியை சந்திச்சேன். பெயர் தனேஸ்வரி ....அநேகமாக் ஈஸ்வரி என்று தான் அழைக்க படுவாள். நகர கட்டிட மேற்பார்வையாளர் கனகாம்பரதுக்கும் மனைவி கோமதிக்கும் பத்து வருட தாம்பத்திய வாழ்வுக்கு பின் தவமிருந்து பெற்ற பிள்ளைதான்
ஈஸ்வரி ..ஆரம்பத்தில் அவள் சாதாரண குழந்தையாகவே இருந்தாள்.
காலம் தான் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே

சில நாளாக அவள் மந்த புத்தி உள்ளவளாக பாடசாலை போகமனம் அற்றவளாக எதையும் விளங்கி கொள்ளாத தோற்றம் உள்ளவளாக விளங்கினாள். அழைத்து சென்று காடாத வைத்தியரில்லை . . நீண்ட நாட்களின் பின்பு தந்த பிள்ளை பாக்கியமும், இப்படியா போகவேண்டும். கவலையில் ஓவசியர் கனகாம்பரமும் கண் மூடி விடார். மனைவி கோமதி அவர் மீதம் வைத்த சொத்தை கொண்டு காலம் ஓட்டினாள் . பின் வருவதை உணர்ந்தோ என்னவோ தன் வீட்டை மகள் பெயருக்கு உயில் எழுதி வைத்தாள். குமரிப்பருவத்தை யடைந்த ஈஸ்வரி சிறு பையன் களுடன் விளையாடுவாள். ஏனைய பருவ பெண் போல இருக்கமாடாள். உடல் வளர்ச்சி இருப்பினும் , புத்தி மந்த நிலையிலே இருந்தது

காலம் தான் பங்குக்கு ஓடிக்கொண்டே இருந்தது . கனகாம்பரம் செத்த பின் கோமதியின் உறவுகள் ஒட்டிக் கொண்டனர். தான் இல்லாத காலத்தில் தன் மகளை யார் கவனிப்பார் என்ற கவலையும் அவளை ஆட்கொண்டது . தன் இளைய தம்பி மாணிக்கத்தை மட்டும் நம்பி எல்லாக் காரியத்தையும் செய்வாள். ஆனால் அவன் மனைவி மரகதம் மிகவும் கொடியவள் . ஈஸ்வரியின் கஷ்ட காலம் தாய் கோமதி , தந்தை இறந்த மூணு வருடத்தில் தானும் போய் சேர்ந்து விடாள். இந்த தருணத்துக்காக காத்திருந்தவள் போல மரகதம் கணவனை நச்சரிக்க தொடங்கினாள். ஈஸ்வரியின் கையெழுத்துடன் வீட்டை தான் பெயருக்கு மாற்றும் படி , கணவன் மாணிக்கமும் அவள் சொல்கேட்டு மனைவி பெயருக்கு மாற்றினான். ஒரு நாள் காலை ஈஸ்வரிக்கு அழகான் பட்டுச்சட்டை போட்டு , காலையில் அவளுக்கு விரும்பிய பழைய சாதமும் கொடுத்து , பெருவிரலிலே மை பூசி பத்திரங்களிலே கை நாட்டு (கையெழுத்து ) பெற்று பின் ஊர்சுற்றி பார்க்கவென அழைத்து சென்றனர். அவளுக்கு தெரியாது அந்த இடம் தான் தான் வாழ் நாள் அஸ்தமிக்கும் இடம் என்று .

ஒரு கன்னியர் நடத்தும் விடுதிக்கு அழைத்து சென்று , இவளை பாரம் கொடுத்தனர். மாதாமாதம் பணம் அனுப்புவதாகவும். உறுதி கூறினார். இப்படியே ஒரு வருடம் நடந்தது முன்பு மாதம் ஒரு முறை வந்து பார்ப்பவர்கள் வருடத்து கொரு முறை வந்து ஈல்வரியை பார்த்தனர். பின் பு முற்றாகவே நின்று விட்டது. அந்த கன்னியர் மட நிர்வாகம்விசாரித்த போது அவர்கள் வீட்டை விற்று வேறு நாடுக்கு சென்று விட்டதாக ஊரார் பேசிக்கொண்டனர். அன்று தொட்டு அங்கு அவள் அனாதையானாள். ஆனால் கன்னியர் அவளை கவனமாக் கண்காணித்தனர்.

எனது ஆரம்ப வேலை யாக சிறுவர் பராமரிப்பு பள்ளியில் துணை ஆசிரியராக கிடைத்து . அங்கு சில காலம் விடுதியிலும் இருந்தேன். ஈஸ்வரியை முற்றாக உணரக் கிடைத்து. விசேட காலங்களில் ஒன்று கூடல் நடக்கும் அப்போது சிறார்கள் கலை நிகழ்ச்சி நடக்கும் . இறுதியில் இவளை போன்றவர்களின் நிகழ்வும் நடக்கும் இவளை போல உடல் நல குறை பாடு உள்ளவர்கள் பலர் இருந்தார்கள் அந்த கன்னியர் விடுதியில். . இவளது முறை வரும் போது எழுந்து நின்று "அமுதை பொழியும் நிலவே " என வானத்தை சுட்டு விரலால் காட்டி அபிநயம் செய்வாள் .

பெயரில் உள்ள தன ஈஸ்வரிக்கு ......தனம் சம்பத்து இல்லாவிடாலும் ..பாது காப்பான இல்லிடமாவது கிடைத்தது .......

.உலகம் இப்படித்தான்

7 comments:

GEETHA ACHAL said...

படிக்கவே மிகவும் வருத்தமாக இருக்கு...

நிலாமதி said...

கீதா உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி ........

சீமான்கனி said...

ஆம் நெஜமாவே....உலகம் இப்படித்தான்....

நிலாமதி said...

சீமான் கனி உங்க வரவுக்கும் பதிவுக்கும் நன்றி.

Admin said...

உங்கள் பதிவுகள் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்.. தொடருங்கள்...

நிலாமதி said...

வேலைப்பளு மத்தியிலும் உங்க வரவுக்கும் பதிவுக்கும் நன்றி .........

பூச்சரம் said...

பூச்சரம்

இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS

பூச்சரத்தில் இணைந்து முழு இலங்கை பதிவரிடையே உங்கள் எழுத்துக்களை பிரபலப்படுத்துங்கள்.