பருவத்தே செய்யும் பயிர் ..............
அன்று ஞாயிறுமாலை, ஆதவன் கடற்கரையோரமாய் அமர்ந்திருந்தான் .
எண்ண அலைகள் தாயகம் நோக்கி செல்ல தொடங்கியது. கல்வியின் உயர் தரம் முடித்து பெறுபேறுகளுக்காக காத்திருந்த நேரம் .ராணுவஅட்டகாசங்கள் கட்டு மீறி செல்ல தொடங்கியிருந்தது .. ஆதவனின் அப்பாவும் அம்மாவும் இவனை லண்டனுக்கு அனுப்ப முடிவு செய்தனர் .அதற்கான ஒழுங்குகள் ஏற்கனவே அங்கு இருந்த மாமாவால் செய்யபட்டு ,காணி பூமி ,அக்கா கெளசலா திருமணத்திற்கென வைத்திருந்த உடமை எல்லாம் பணமாகி ,அவன்
லண்டனை அடைந்தான் . மூன்று மாதங்கள் மாமாவீடின் சுகம் பிரிவை
கொஞ்சம் தணித்து மெல்ல மெல்ல வேறிடம் பார்கவேண்டியதேவை ,
மாமா உணர்த்த ,அவன் இடம் மாறினான் .
சிலமாதங்கள் ஆக பெற்றவரிடமிருந்து இருந்து கடன் பத்திரத்தை மீட்க பணம் அனுப்பும் படி கடிதம் வந்தது . இவ்வாறு அவன் அனுப்பும் செலவை மீத படுத்த மூன்று மாத காசை ஒரே தடவையில் அனுப்பினான் .காசை எப்படி உழைத்தான் என்பது வேறுகதை ,படிப்பில் ஆர்வமுள்ள அவன கஷ்டத்தின் மத்தியிலும் படித்தான் , இரவில் வேலையும் , பகலில் படிப்பும் ,ஆகி ,நித்திரை குறைய
உடல் சோர தொடங்கியது ,இதற்கிடையில் கெளசலா வின் கலியாணம் நடந்து முடிந்தது , தம்பியின் காசில் கோலாகலமாக் கலியாணம் . மாறிய கடன் கட்ட இரண்டாவது வேலை தொடங்கினான் . காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடியது
தகப்பனும் இளைப்பாறி ,தாயக கெடுபிடியால் அவர்கள் மருமகனின் துணையுடன் கொழும்புக்கு இடம் மாறினார்கள். அதற்கும் ஒரு பெரிய தொகை நண்பர்களிடமும் ,முதலாளியிடமும் உருட்டி பிரட்டி அனுப்பி வைத்தான் , காலம் தன் கடமையை செய்ய அவனும் முப்பது வயதானான் . தந்தையின் ஓய்வு ஊதியப் பணம் போதாது என்றும் மாதம் மாதம் அனுப்பும் படியும் கடிதம் மேல் கடிதம் வரும் சிலசமயம் மேசையில் உள்ள கடிதம் திறக்க படாமலே இருக்கும் கெள சலாவும் இரு பெண் குழந்தைகளுக்கு தாயாகி ,வாழும் காலத்தில் , ஆதவனை பற்றி , அவன் உணர்வுகளை பற்றி சிறிதும் எண்ணவில்லை ,தந்தையாரும் காலமானார் .
பதின் மூன்று வருடங்காளாகின.... ஒரு நாள் அதிகாலை , டெலிபோன் (தொல்லை பேசி ) சிணுங்கியது ,உடன் தங்களுக்கு அழைக்கும் படி .... சேதி இது தான் ............ அக்கா மகள் பெரியவளாகி விடாள் . ஆதவன் மனம் வேதனையால் துடித்தது. இவர்களுக்கு எந்நேரமும் காசு .....காசு என்று , நான் என்ன காசு காய்க்கும் மரமா ? கோடியில் வெட்டி அள்ளியா காசு வரும் . எதோ கடமைக்காக அனுப்பி வைத்தான். மறு மாத மடலில் அவனது ,முகம் தெரியா மருமகளின்
வித விதமான் போட்டோக்கள் (நிழல்படம் ) அன்றைய தபாலில் வந்திருந்தன . இன்னும் காலம் கடமையை செய்யா ,அவன் வந்து பதினாறு வருடங்கள்
ஆயின . வயதும் முப்பதியாறானது . இப்போதெலாம் சாராசரி வாழ்கை காலம் அறுபது என்பார்கள் .அதில் முப்பத்தி ஐந்தில் மாரடைப்பு வருவது ,விதி விலக்கு வாழ்கையின் மூன்றில் இரண்டு பகுதியை , இழந்து விட்டான் .அக்காவோ அம்மாவோ அவனை பற்றி சிந்திபதாயில்லை . உறவினர் கேட்டாலும் ,
கடன் பிரச்சனை என்று சமாளித்து விடுவான் .
காலம் கரைந்து கொண்டேயிருந்தது . கடற்கரை இருள் சூழ்ந்து கொண்டது .
தாயக சேதிகளை கேட்கும் அவன், மீண்டும் தாயகத்தில் , தனது அயல வீட்டு நண்பனை ....,இரண்டு மாதங்களுக்கு முன் மாவீரனான கேசவனை, நினைத்து கொண்டது .அவர்களின் குடும்பம் தற்போது வவனியாவில் .இருந்தனர்.
தன்வீடு நோக்கி செல்லும் அவனின் எண்ணத்தில் ,கேசவனின் அக்காவையும் குடும்பத்தினரையும் , இந்தியாவுக்கு வரும்படி தொலை பேசியில் அழைத்து சொல்லவேண்டும் ........,கேசவனின் அக்காவுக்கு வாழ்கை கொடுக்கவேண்டும் என்று சிந்தித்தவாறு வீட்டு தொலை பேசியை சுழற்றினான் .
காலம் இனிதாக கை கொடுக்க இன்று அவன் ஒரு வழி காட்டியாக ......................
Followers
Subscribe to:
Post Comments (Atom)
-
மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்...
-
என் இதயம் கவர்ந்தவளே கண்கள் கண்டதால் கவரபட்டதால் காதல் கொண்டதால் கருத்து ஒன்றி அதனால் இணைந்து கொண்ட இருவர் கருத்து வேறு பட்டாலும் ...
-
அஸ்தமனத்தில் ஓர் உதயம் ............. அதிகாலை பனிக்குளிர் மெல்ல வாட்ட .........இன்னும் சற்று நேரம் உறங்கலாம் போலிருந்தது ராஜரத்னம் ஐயாவுக்க...
6 comments:
அருமையான கதை, கதை சொல்லும் விதம் நன்று.. தொடருங்கள்...
சந்துரு .......உங்கள் வரவுக்கும்பதிவுக்கும் நன்றி...........நிலாமதி
இன்றைய இளைஞர்களின் வாழ்வை தொட்டு காட்டியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
நன்றி உங்கள் வரவுக்கும் பதிவுக்கும்.நட்புடன் நிலாமதி
//ஆதவன் மனம் வேதனையால் துடித்தது. இவர்களுக்கு எந்நேரமும் காசு .....காசு என்று , நான் என்ன காசு காய்க்கும் மரமா ? //
துணை இல்ல வழக்கை வெறுப்பு தட்டித்தான் போகும்....
"பருவத்தே செய்யும் பயிர் ............"
தலைப்பும், கதையும் அருமை....
சீமான் கனி உங்க வரவுக்கும் பதிவுக்கும் நன்றிங்க.
Post a Comment