Followers

Wednesday, August 26, 2009

பேனாவின் சிவத்த மை ....

பேனாவின் சிவத்த மை .........

அமைதியான அந்த கிராமத்தில் சுந்தரதாரின் கடைக்குட்டி சாதனா , பத்தாம் வகுப்பில் படித்து கொண்டிருந்தாள் . அக்காலம் மிக மிக சாதாரணமாகவே இருந்தது , கைதுகளும் குண்டுமழையும் ... இடப்பெயர்வுகளும் ...இல்லாத காலம் . தெளிந்த நீரோடை போன்று , மக்களும் ,வாழ்கையும் ஓடிக்கொண்டு இருந்தது . கோவில் ,பாடசாலை ,விளையாட்டு என்று சமுதாயம் அமைதியாக வாழும் காலத்தில் ,முதலாம் முறை ,பத்தாம் வகுப்பு கோட்டை விட்டதால் ஏனைய தோழிகளுடன் பதினோராம் வகுப்பு செல்ல முடியவில்லை .முக்கியமான கணிதபாடம் தவற விட்டு விட்டாள் , வீடிலும் நல்ல வசை மாரிகள் ,அதனால் இரண்டாம் வருடம் முழு மூச்சாக படித்து கொண்டிருந்தாள்.


போதாக்குறைக்கு பெரியண்ணாவின் கண்டிப்பு வேறு . பாடசாலையும் பிரத்தியேக (.tuition ..)வகுப்புமாய் ,இருந்தாள். வருட இறுதியும் வந்தது .
தனது திறமையெல்லாம் திரட்டி சோதனையில் வெற்றி பெற்று விட்டாள்.
நான்கு டீ தரத்திலும் நான்கு சி தரத்திலும் சித்தியடைந்து விட்டாள் . பெரியன்னாவுக்கும் ,பெரிய பட்டணத்துக்கு அம்மாவின் கடிதத்துடன்
அவளும் கடிதம் எழுதினாள் . அவளின் பெரியண்ணா மூணு
மாதமொருமுறை ,மூன்று நாள் விடுமுறை கிடைக்கும் போது
தான் வருவார்.

அண்ணாவின் பதிலுக்காக நாளும் பொழுதும் பார்த்து கொண்டு இருந்தாள். அடுத்த வகுப்பு க்கு அக்கிராமத்தில் வசதி குறைவு என்பதால் யாழ்பாணத்தில் இருந்து ப்டிக்க, ஒழுங்கு களை பெற்றவர் ஆயத்த படுத்திக்கொண்டு இருந்தனர் மூன்று வாரங்களால் ,பெரியண்ணாவின் கடிதம் அவள் பெயருக்கு ,
திருத்தி திருப்பி அனுப்பப்பட்டது . ஆங்கில எழுத்துகளை சுற்றி சிவப்பு வட்டங்களுடன்....... " கடிதம் ஒரு மொழியில் எழுதப்பட வேண்டும் " .....

இறுதியில் அடுத்த வாரம் போயா விடுமுறையுடன் ,ஊருக்கு வருவதாகவும் ,
மீதி நேரில் என்று . அந்த கடிதம் அவளுக்கு சம்மட்டி போன்று இருந்தது.
பரிசை எதிபார்த்து , சந்தோஷத்தில் துள்ளி குதித்த அந்த சிட்டின் மனம்
நொந்து விட்டது ஏமாற்றத்தால் . அந்த சொற்கள் (...Distintion, Credit, Bus, traveling,tuition fees ,......)போன்றவை . அவள் மனம் .....இவர் "பெரிய "....
சட்டம்பியார் போல ...என்று திட்டி கொண்டது .

அந்த நாளும் வந்தது , மாலைபொழுது இருளாகிய நேரம் வந்தார் பெரியண்ணா. வீடுக்கதைகள் ,பேசியபின் ,சாதனாசிட்டு ,பெரியண்ண வுடன் ,கோபமாகவே இருந்தது. மறுநாள் காலை ,அவள் ப்டிக்கும் மேசையில் , ஒரு நூறு ரூபா நோட்டு (தாள்) காற்றில் பறக்காமல் புத்தகத்தின் கீழ் இருந்தது. பிரபலமான கண்டோஸ் சொகோலேட் உடன் . .அண்ணா மீண்டும் பெரியபட்டண்ணம் சென்று விட்டார் .

நம்ம கதாநாயகி ,உயர் தரம் முடித்து ,கோப்பாய் பயிற்சி கூடம் முடித்து காலப்போக்கில் சர்வகாசாலையில் தமிழ் விரிவுரையாளர் ஆகினார் . .
சில வருடங்கள் உருண்டோடின ,பெரிய அண்ணாவும் குழந்தை குட்டிகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தார் . சாதனாவும் இயற்கை சக்கரத்தில் சுழன்று , தாயாகி தொடர்ந்தும் வேலையில் இருந்தாள் .

வரலாறு மீண்டும் எழுதப்படும் என்பது போல , பெரிய அண்ணாவின் மகனும் பல்கலை கழகம் வந்தான் , ஒரு நாள் அவனது குறிப்புகள் திருத்தும் போது அவனின் புத்தகத்தில் பிழைகளை சுற்றி வட்டம் போடும் போது ,எங்கோ சென்றுவிட்ட , பழைய நினைவுகள் ,மீட்ட பட , நொந்த அவள் இதயத்தில்
இருந்து கண்ணீர் துளிகளாய் .... இரண்டு சொட்டுகள் அவன் புத்தகத்தில் விழுந்தன . அவளது திருப்பி அனுப்ப பட்ட கடிதம் நன்றாக மனத்தை பாதித்து இருந்தது . . .

(அண்ணா சட்டம்பியாராக இல்லாமல் , பாசத்துடன் சொல்லி திருத்தி இருக்கலாம் தானே .அன்று மனம் நோகாதிருந்தால் .......இன்று நான் எழுதியிருக்க மாட்டேன் )

யார் சொன்னது இது கற்பனை .............என்று

13 comments:

யோ வொய்ஸ் (யோகா) said...

வாழ்த்துக்கள் அக்கா

ஈரோடு கதிர் said...

கற்பனை என்று
கண்ணீர்த் துளிகளை எப்படி சொல்ல முடியும்.

தவறுதலாக என் நன்றியில்
இரண்டு முறைகள் வந்துவிட்டீர்கள்
நிலா

நிலாமதி said...

யோ...........உங்கள் வரவுக்கு நன்றி.

நிலாமதி said...

என் கதையை உள்ளபடியே விளங்கி கொண்ட உங்களுக்கு என் இதயத்தால் நன்றி....பரவாயில்லை அன்போடு என் பெயரை இரண்டு தடவை பதிந்தீர்கள். நானும் பகிடியாக தான் சொன்னேன்.பெரிது பண்ண வேண்டாம்.தொடர்ந்து என் தளத்திலும் இணைந்து இருங்கள். நிறைமட்டுமல்ல அன்பான திருத்தல்களுமிந்த நிலா ஏற்றுக்கொள்ளும்.

பழமைபேசி said...

வணக்கமுங்க...

சீமான்கனி said...

யாரும் சொல்லவில்லை இது கற்பனை என்று ....

வாழ்த்துக்கள் அக்கா...

ilangan said...

தொடருங்கள் வாழ்த்துக்கள்

நிலாமதி said...

சீமான் கனி .....உங்கள் வரவுக்கும பதிவுக்கும் நன்றி.

நிலாமதி said...

இளங்கன்..உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி.ஏனைய பதிவுகளையும் பாருங்கள். நட்புடன் நிலாமதி

குடந்தை அன்புமணி said...

தோல்விகள்தானே வெற்றியின் படிக்கட்டு. வாழ்த்துகள்.

நிலாமதி said...

குடந்தை அன்பு மணி .........உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் என் நன்றிகள். .

thiyaa said...

நல்ல சிறுகதை
உண்மைகள் என்றும் கற்பனைகள் ஆகாது
வாழ்த்துகள் அக்கா

நிலாமதி said...

வணக்கம் தியா .உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றிகள்.