நிரா எனும் நிரஞ்சலா அழுது வீங்கிய கண்களுடன். காணப் பட்டாள் . என்னம்மா நடந்தது என்று மாமியார் வினவ விம்மலும் விக்க்லுகுமிடையில் இதோ சொல்கிறாள் கேளுங்கள். கவலையிலாமல் துள்ளி திரிந்த பள்ளிப்பருவம் ,நிராவையும் சுகந்தனையும் காதலர்கள் ஆக்கியது . இளமை வேகம் , பயமறியாத பருவம். ஒருநாள் நிரா வீட்டை விட்டு சுகந்தனை நம்பி வந்து விடாள். அப்போது சுகந்தன் உயர்கல்வி வகுப்பு படித்து கொண்டிருந்தான் . பகுதி நேரமாக் ஒரு கடைத்தொகுதியில் சிறு வேலையும் செய்து கொண்டு இருந்தான்.அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நண்பர்களின் உதவியுடன் பத்தொன்பது வயது நிராவும், இருபத்தியொரு வயது சுகந்தனும் பதிவு திருமணம் செய்து கனடா நாடில் ஒரு சிறு நிலக் கீழ் குடியிருப்பில் வாழ்கையை தொடங்கினர். சுகந்தன் இரு சகோதரிகளுக்கு அண்ணன். அவனது தாய் தந்தையரும் பெண் வீடாருக்கு பயந்து ஏற்றுக்கொள்ள்வில்லை. கடைசியில் சுகந்தனின் தந்தையின் அனுமத்யுடன் , சுகந்தனின் தாய் அவர்களது வீடில் ஒரு அறையில் வசிக்க அனுமதித்தாள். மீளவும் வாழ்கை தொடங்கியது இருவரும் படிப்பை நிறுத்தி விட்டனர் .
. ஒரு நாள் நிரா அவனது தங்கையுடன் , ஒரு கலை விழா பார்க்க ஆசை பட்டாள் சுகந்தன் தனக்கு வேலை என்றும் தங்கையுடன் அனுப்பி வைத்தான். அங்கு சுகந்தனின் நண்பனொருவனை கண்டனர். அவன் இன்னும் சிலருடன் காண ப்பட்டான் அவன் வந்து இவர்களுடன் உரையாடினான். அதில் ஒருவன் "குட்டி யாரடா .......வளைச்சு பார்க்கலாமா ? என்று கேட்க சுகந்தனின் நண்பன் அவள் தன் நண்பனின் மனைவி என்று கூறினான்.
சில் வேடிக்கை நிகழ்வுகளை பார்த்து விட்டு அத்தோடு விழா நிறைவுற்று அவர்கள் வீடு வந்தார்கள். சுகந்த்னின் நண்பன் நடந்தவற்ரை .சுகந்தனை கண்ட போது கூறி விடான். தொடங்கியது பிரளயம் ...நிராவுடன் வாக்கு வாதப பட்டான் , அன்று சற்று மதுவும் அருந்தி இருந்தான் . காரணம் அவள் கையிலாத சட்டை யும் ஜீன்சும் அணிந்து இருந்தாள். அந்த விழாவுக்கு. நீ ஏன் அவ்வாறு போனாய் .........என்று அவன் கேட்க
நீ என்னை பார்த்த அதே ஆடைகள் தான். நான் கவ்ர்சியாக், எதுவும் புதிதாக வாங்கஇல்லை என்றும் வாதிட்டாள் சுகந்தன் கோவத்தின் உச்சத்தில் அவளை அறைந்து விடான். அதனால் தான் அவள் அழுது கொண்டு இருந்தாள். பக்குவமடையாத மனம் , இளம் வயது , சகிப்பு தன்மையற்ற குணம் இந்த இளம் தம்பதிகளை வேதனையில் ஆழ்த்தி விட்டது. அறியாத வயது புரியாத் உறவு பிஞ்சிலே பழுத்த வெம்பல்கள்.
வாழ்க்கை இலகுவானதல்ல. எதிர் நீச்சல் போட்டு வாழவேண்டும். அது ஆயிரங்காலத்து பயிர். ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி நின்று நிலைத்து நீண்ட காலம் வாழவேண்டும்.
பள்ளி வயதிலே பருவ வெறியிலே
துள்ளி வருவது துன்பம் தருவது காதல். .
மனமும் உடலும் பக்குவ பட்டு
திருமணத்தில் முடிய வேண்டும் காதல்.
காலமெல்லாம் காதல் வாழ்க .
11 comments:
காதலிப்பது மட்டுமல்ல வாழ்க்கை, புரிந்துணர்வோடு வாழ்வதே வாழ்க்கை என்பதையுணர்த்திய கதை
அருமை வருவதை எதிர் கொள்வதுதான் வாழ்க்கை
யோ .........இப்போது தான் எழுதினேன். என்பதிவுகளை தேடி வாசிக்குமுங்களுக்கு
என் உள்ளத்தால் நன்றி.......
தியா ..உங்களுக்கு என் நன்றிகள். சவாலைசந்தித்து ..எதிர் நீச்சல் போட காத்திருக்கும் உங்களுக்கு என் பாராட்டுக்கள்.
//சுகந்த்னின் நண்பன் நடந்தவற்ரை .சுகந்தனை கண்ட போது கூறி விடான்//
இந்தப் பகிர்தல்தான் பல பிரச்சனைகளுக்கு விதையாகிறது
கதிர் நீங்கள் சொல்வதும் உண்மை.........வரவுக்கும் பதிவுக்கும் நன்றிகள்.
அறியாமையில் அரும்புவதே விடலைக் காதல்! அந்த காதலே அனுபவங்களை தரும்..... அனுபவங்களே அறிவின் ஆசான்!
ஆயிரம் அறிந்து சொன்னாலும் ’அவர்கள்’ அனுபவித்தே அறிய விளைவார்கள்....
அப்புறம்...அழகாய் சொல்லவந்ததை சொல்லியுள்ளீர்கள்....என்னையும் ரொம்ப எழுத வைத்துவிட்டீர்கள்...
அன்ரோ ....வருகைக்கு மிக நன்றி ...என்கதைக்கு உங்களை அதிகம் எழுத வைத்தால் அதுவே என் கதைக்கு வெற்றி .என் கதை உங்களையும் வாசித்த அனை வரையும் சிந்திக்க வைத்துள்ளது . உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் பாராட்டுகள்.
இது உண்மையா அல்லது புனைவா ??
அர்த்தமுள்ள வார்த்தைகள்!
மயக்குகிறது உங்கள் சிறுகதை
தொடர் பதிவு எழுத உங்களை அழைத்து இருக்கிறேன் நீங்களும் எழுதுங்க பாஸ் ..
http://ennaduidu.blogspot.com/2009/09/2.html
Post a Comment