Followers

Tuesday, September 22, 2009

பாடம் சொன்ன பாப்பா .....(குழந்தை ).

 பாடம் சொன்ன பாப்பா (குழந்தை )

      வாயிலில் தந்தையின் மோட்டர் வண்டியின் ஒலி கேட்கவே குட்டி அக்ஷயா , ஓடோடி சென்று வாயில் கதவை (கேட்) திறந்து விடாள். பின் தந்தையின் மடியில் உட்கார்ந்த அந்த சிறு  இடை வெளியில்பயணம் செய்தாள். சத்தம் கேட்ட லக்ஸ்மி , வாயிற் படிக்கு செல்லவும் குட்டி அக்ஷயா தாவி , தோள் மீது உட்கார்ந்து கொண்டாள். . வேலைக்களையால் வந்த மாதவன் , குளித்து வரவும் , அப்பாவின் தேநீருக்கு பங்கு க்கு நின்றாள் தானும் ஒரு மிடறு குடித்து சுவைப்பதற்காக என்று . மூன்று வயதான் அக்ஷயா , நல்ல அழகான் பெண் அலை போன்ற அழகான் கேசம், முத்து பற்கள். நீலக்கண்கள் என்று எல்லா அழகையும் சேர்த்து பிறந்திருந்தாள். வீடிலே எல்லோருக்கும் அவள் செல்ல பிள்ளை . தேநீர் வேலை முடிந்த்ததும் , லக்ஸ்மி இரவு உணவு தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தாள். மாதவன் அன்றைய தினசரியில் மெய் மறந்திருந்தான்.

        சிறுமி அக்ஷயா , தனது விளையாட்டு பொருட்களுடன் விளையாடிக்கொண்டு இருந்தாள். அவளது அப்பப்பா , பின் வீட்டு தோட்டத்தில் இருந்து நாளை சமையலுக்கு தேவையான , காய் கறிகளை ஆய்ந்து கொண்டு வந்திருந்தார். விளையாட்டு பொருட்கள் சலித்து போகவே  , மூணு சில்லு  சைக்கிள் வண்டியை உருட்டிகே கொண்டு இருந்தாள் .
சிறிது நேரம் செல்லவே அதிலும் சலித்து போய் . படுக்கையறைக்குள் சென்று விடாள்.வாயிலில்  மணிச் சத்தம்கேட்கவே ..........மாதவன் சென்று பார்த்தான்.

வீடுகாரர் எல்லோரும் தங்கள் வேலையில் மும்முரமாக்  இருந்தனர். அவளது பாட்டி தனது பழைய சீலைகள் உள்ள பெட்டியை திறந்து ,  அதை ஒழுங்காக அடுக்கி கொண்டு இருந்தார். சிறுமி அக்ஷயாவைகானவே இல்லய் .திடீரென , மாதவன் தன் குழந்தை நினைவு வந்தவனாய் , படுக்கை  அறையில் சென்று பார்த்தான் . அவன் கண்ட காட்சி அவனை  அதிர்ச்சிக்குள்ளாக்கியது .........குட்டி அக்ஷயா ..........கண்ணாடி முன் நின்று ,கண்ணில் தந்தையின் கூலிங் கிளாசும் , கையில் குழாய் போல (சிகரட் ) சுருட்டிய வெண் பெப் பர் , வாயில் வைப்பதும் எடுபப்துமாக  அப்பா போல பாவனை செய்து கொண்டிருந்தாள்.
மாதவன் ரகசியமாக் அவளை குழப்பாமல் , வீட்டார் அனை வருக்கும் காட்டினான் . மாதவனுக்கு அன்று இரவு ஒரே குழப்பமாக் இருந்தது .தன்னை  பார்த்து தன் மகள் செய்து விடாளே என்ற கவலை ......காலயில்  கண் விழித்ததும் தீர்மானித்தான் ஆரம்பத்தில் கஷ்டமாக் தான் இருந்தது . தான் விடா முயற்சியால் கொஞ்சமாக் குறைத்து பின்பு  ஒரு நான்கு மாதத்தில் முற்றாக விட்டு விடான்.

தந்தைக்கு பாடம் சொல்லி தந்த குழந்தை ...

..( கதை உண்மை) புகை பிரியர்கள் மன்னிக்கவும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை.

13 comments:

thiyaa said...

முயன்றால் முடியாதது எதுவுமில்லை.

ஈரோடு கதிர் said...

எளிமையான கதை

//புகை பிரியர்கள் மன்னிக்கவும்//
இது ஏன்?

யோ வொய்ஸ் (யோகா) said...

படிப்பினையான கதை

Elanthi said...

குட்டியா நல்ல கதை. மிகப்பெரிய கருத்து.. நல்லாயிருக்கு.
முன்னைய பதிவில் கவிதை படித்தேன். அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.
தமிழ் கொண்டு கூடுவோம்.. தமிழராய் வாழ்வோம்..

நிலாமதி said...

கதிர் ....உங்கள் வரவுக்கு நன்றி..புகைப்பிரியர்கள் தங்களுக்கு புத்திசொல்ல வந்துடா எவா அவா ...என்று சண்டைக்கு வந்துடுவார்கள். சிலருக்கு பிடிக்காது புகையை குறைக்கும் படி கேட்டால். நெஞ்சு வலியால் இருமும் போது புரியும்.

நிலாமதி said...

குட்டியா ?....எமது பேச்சுவழக்கில் குட்டிப்பொண்ணு என்று அழைப்போம்.இதயத்திலிருந்து,உங்களுக்கு என் நன்றிகள்.

நிலாமதி said...

தியா உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி....

நிலாமதி said...

யோ உங்கள் பதிவுக்கு நன்றி.

சீமான்கனி said...

நிலா அக்கா...கதை அருமை நல்ல கருத்து சொல்லிஇருகிங்க வாழ்த்துகள்...
தொடர்ந்து வரமுடியாததற்கு மன்னிக்கவும்....கொஞ்சம் வேலை....

நிலாமதி said...

பதிவுக்கு நன்றி வெற்றிகரமாய் பணி முடித்துவருக. நன்றி

நிலாமதி said...

வினையூக்கி உங்கள் வரவுக்கு
நன்றி ......

அன்புடன் மலிக்கா said...

முயற்ச்சி உடையோர் இகழ்ச்சியடையார்,

நல்ல சிந்தனை நிலாமதி

நிலாமதி said...

மாலிக்கா உங்கள் வரவுக்கு நன்றி....