இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள்.
அழகான தேம்சு நதியின் காற்றுக்கு பெயர் போன அந்த நரகத்தில் முன்பே குடியேறிய ஒரு குடும்பத்துக்கும் அண்மையில் புலம் பெயர்ந்த வசதியுள்ள அந்த குடும்பத்துக்கும் இனணைப்பு பாலமாக அமைந்தது அந்த சம்பந்தம். நடராஜா வாசுகி தம்பதிகளுக்கு சுகித்தா அருமையான செல்லப்பெண் . சமையல் தவிர அத்தனை கலைகளும் அவளுக்கு இருந்தன . ஆடுவாள் பாடுவாள் , கூடவே செல்வ செழிப்பும் இருந்ததால்நன்றாக படித்து படமும் பெற்று க்கொண் டாள் . தந்தைக்கு செல்ல பெண்ணாய் இருந்ததால் அவளுக்கு வேண்டுமளவு சுதந்திரமும் கொடுத்தார். சில் வருடங்களுக்கு முன்பே குடியேறிய ரங்க நாதன் சாவித்திரி குடும்பத்துக்கு தூரத்து உறவு . இவர்களுக்கு மூன்று ஆண் மக்கள். புலம் பெயர்ந்து சென்று இருந்தார்கள். நாடுப்;பிரச்சனையால். அடிக்கடி நடராசாவும் ரங்கநாதனும் சந்தித்து கொள்வார்கள். காலபோக்கில் நட ராஜ பெண்ணுக்கு மாபிள்ளை தேடுவதில் மும் முரமாய் இருந்தார்.பேச்சு வாக்கில் , சாவித்திரி ஏன் தூரத்துக்குள் போவான். நம்ம் பையன் சுதாகரை , கட்டி வைக்கலாமே என்று ஆசையுடன் கூறினாள். ரங்கநாதனுக்கும் இது சரிஎனபடவே. நட ராஜனிடம் ஒரு நாள் இதைக் காதில் போட்டு வைத்தார். இரு குடும்பமும் பேச்சு வாக்கில் ஒத்து போகவே நட ராஜனின் ஒரே ஒரு செல்லப பெண்ணுக்கும் ரங்கநாதனின் மூத்த மகன் சுதாகருக்கும் மிகவும் கோலா கலமாக திரு மணம் இனிதே நிறைவேறியது .
நாட்களும் சொல்லிக்கொள்ளாமல் ஓடிச்சென்றன. ஆனால் இருவரின் மனங்களும் ஒன்றிணைய வில்லை. சுகியும் விட்டுக்க்கொடுபதாயில்லை அவளின் போக்கு , ஆங்கிலப்படம் ....டான்ஸ் , பார்டி களில் ஈடுபட்டது. கணவனை யும் அழைப்பாள். அவனுக்கு இது விருப்பமற்ற செயல் . அவள் நண்பிகளுடன் கிளம்பி விடுவாள். சில சமயம் கணவன் வீடுக்கு வந்தால் இவள் ஒரு குறிப்பு எழுத்தை வைத்தது விட்டு கார் எடுத்து கொண்டு நண்பிகளிடம் போய்விடுவாள். இதற்கிடையில் அவள் கருத்தரித்தாள்.
இதையறிந்ததும் ரங்க நாதன் குடும்பம் மிகவும் ஆவலுடன் தங்கள் பேரபிள்ளையை எதிர்பார்த்தார்கள். ஆனால் அவள் சுகி இப்போது தேவையில்லை என்று கலைக்க முயற்சித்தாள். டாக்டாரிடம் சென்ற போது நாட்கள் தள்ளி போனதால் கலைக்க முடியாது என்று சொல்லி விடார்.. வேண்டாத கருவாக சுகி கருவைச் சுமந்து ஒரு ஆண் குழந்தையை பெற்று எடுத்தாள். அதன் பின்பும் அவள் மாற வில்லை. குழந்தையை தன் தாயிடம் பராமரிக்க விட்டு விட்டு தன் எண்ணம் போல திரிந்தாள். அவள் கணவன் சுதாகருக்கு சகித்து கொள்ள முடியவில்லை. அவர்களுள் லேசான பிளவு ஏற்பட தொடங்கியது கணவனுக்கு சமைத்து வைக்க மாடாள். அவன் பாதி நாட்கள் தாய் வீடுக்கு சென்று விடுவான். நடராஜனுக்கு செல்ல பெண்ணை கண்டிக்க முடியவிலை. சுகி இன்னும் , பொறுப்பு அற்றவளாகவே இருந்தாள். சுதாகருக்கும் வாழ்கை கசந்து விட்டது இரண்டு வருடங்கள் சென்றன . சுகி தாயுடனும் சுதாகர் தன் தாயிடமும் வாழத்தொடங்கினர்.
காலம் உருண்டோடியது .இரண்டு வருடங்களான. இரு குடும்பங்களிடையே .பழைய உறவு அற்று போய் இருந்தது ஒரு நாள் சுகிக்கு தபாலில் , விவாகரத்துக்கான கடிதம் வந்தது . இருவரும் , சுய விருப்பத்தின் பேரில் விவாகரத்து பெற்றனர். குடும்பங்களை இணைக்கும் எனற , இணைப்பு ப்பாலம் , இரு மனங்களையும் இணைக்க வில்லை .
காலப்போக்கில் அவனுக்கு( சுதாகர் ) கீழ் உள்ள தம்பி மாருக்கு திருமணம் செய்ய விருப்பதால் , அவனும் இளம் வயது என்பதாலும் , அவன்இணைய மூலம் ஒரு பெண்ணை தேடி மணம் முடித்தான். அவள் ,தான் சாரங்கி , அவள் எல்லா விதத்திலும் இவனுக்கு பொருத்தமானவளாய் இருந்தாள். குடும்பம், சந்தோஷமாய் இருந்ததில் , ஏனைய அவன் தம்பி மாருக்கும் காலா காலத்தில் திருமணம் நடந்தது. அவர்களின் , அன்பான் விடுக்கொடுபுள்ள உறவில இரு வருடந்தில் ஒரு பெண் குழந்தை வதனாவை பெற்று எடுத்தனர்.சுகி திருந்திய பாடாய் இல்லய். அத்தனை கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையாய் இருந்தாள் . அவளது போக்கின் காரணமாக தந்தை நட ராஜன் நோய் வாய்பாட்டு , இறந்து போனார்.
ரங்க ராஜன் குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்ந்தது. ஒரு தடவை , அவர்கள் ஒரு திருமண விழாவுக்கு சென்று திரும்பும் வழியில் , மழை வேறு , பொழிந்து கொண்டு இருந்தது . வழியில் ஒரு கார் பெரிய மரத்துடன் மோதிக் க்கானபட்டது . சுதாகர் இறங்கி பார்த்தபோது அது .........சுகி என்று உணர்ந்தான். உடனே அவன் வாகனத்தை திருப்பி , அவளை ஏற்றிக்கொண்டு வைத்தயசாலையில் சேர்த்தான். அவள் அளவுக்கு மீறிய போதையில் இருந்தாள்.பிடரிப்பக்கம் பலமாக அடிபட்டு இருந்ததால் சிகிச்சை பயனற்று ,இறந்து விடாள். சுதாகர் அவள் நிலையை எண்ணிக் கவலைப்பட்டான்.
காலம் வேகமாக சென்றது. சம்பவம் நடந்து ஐந்து வருடங்களாகி விட்டன. சுதாகரின் செல்லமகள் வதனாவுக்கு மூணு வயதாகி விட்டது . அவளது பிறந்த நாளுக்கு சில பொருட்கள் வாங்கி விட்டு வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான். அப்போது ஒரு சிறுவன் பாடசாலை பையுடன் மரத்தின் கீழ் அமர்ந்து இருந்தான் அழுது கொண்டு.
நேரம் மாலை நேரம் இரவை அண்மித்து கொண்டு இருந்தது ........அந்த சிறுவனை தனியே கண்டதும் சுகுமாருக்கு தன் மகன் எண்ணம் வந்தது . காரை நிறுத்தி அண்மையில் சென்று பார்த்தான். என்ன ஆச்சரியம் .........அது அவனது மகன் கோகிலன்.சுகுமாருக்கு தாங்க முடியாத துயரம்...........சிறுவன் அழுது கொண்டு தனக்கு அம்மாவும் இல்லய் அப்பாவும் இல்லய் ..........அம்மம்மாவீடுக்கு போக பிடிக்க வில்லை என்று அழுது கொண்டே சொன்னான். இறுக கட்டி அணைத்து முத்தமிட்டு தன் வீடுக்கு கூட்டி வந்தான். தன் மாமியாருக்கு தகவல் அனுப்பினான். முறைப்படி கோர்ட்டு உத்தரவுடன் மகனை பெற்றுக்கொண்டான்.
கோகிலனுக்கு வத்னாவை மிகவும் பிடித்து கொண்டது ....... வதனா கோகிலன், இணை பிரியாத சகோதரர்களாக விளையாடுவதை ......சாரங்கா பார்த்து ரசித்தாள். .பிறந்த நாட பரிசாக தன் அண்ணா தனக்கு கிடை த்ததை எண்ணி .மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்.
இணைத்து வைத்த திருமணக்களால் இணைந்து போக முடியாத உள்ளங்கள் ....பிரிந்து விடுகின்றன. சில விட்டுக்கொடுப்புகளுடன் சமுதாயத்துக்காக வாழ்கின்றன. ..இரு மனங்களும் இணயாத விட்டுக் கொடுப்பற்ற உறவுகளால் எத்தனை குடும்பங்கள் சீர் குலைகின்றன......
Followers
Subscribe to:
Post Comments (Atom)
-
மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்...
-
என் இதயம் கவர்ந்தவளே கண்கள் கண்டதால் கவரபட்டதால் காதல் கொண்டதால் கருத்து ஒன்றி அதனால் இணைந்து கொண்ட இருவர் கருத்து வேறு பட்டாலும் ...
-
அஸ்தமனத்தில் ஓர் உதயம் ............. அதிகாலை பனிக்குளிர் மெல்ல வாட்ட .........இன்னும் சற்று நேரம் உறங்கலாம் போலிருந்தது ராஜரத்னம் ஐயாவுக்க...
9 comments:
//இணைத்து வைத்த திருமணக்களால் இணைந்து போக முடியாத உள்ளங்கள் ....பிரிந்து விடுகின்றன. சில விட்டுக்கொடுப்புகளுடன் சமுதாயத்துக்காக வாழ்கின்றன. ..இரு மனங்களும் இணயாத விட்டுக் கொடுப்பற்ற உறவுகளால் எத்தனை குடும்பங்கள் சீர் குலைகின்றன...... //
இல்லறம் எனும் மாண்பினை பேணாவிட்டால் இது போல் தான் நடக்கும் என்பதற்கு இது ஓர் நல்ல உதாரணம்... பத்தி பத்தியாய் பிரித்திருந்தால் படிக்க இன்னமும் ஏதுவாய் இருக்கும். அருமையாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்..
பிரபாகர்.
அருமையான இடுகை
மனதுதான் எல்லாவற்றிக்கும் முக்கைய காரணம்
நிலா...
50 இடுகை
50 தொடருவோர்
வாழ்த்துகள்
:))
நல்ல படிப்பினையான கதை. உண்மைக் கதையா தோழி. அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
நன்றி பிரபாகர் உங்கள் வருகைக்கும் பதிவுக்கும்.இனி வரும் காலங்களில். மேலும் திருத்தி பந்தி பிரித்து எழுத முயற்சிக்கிறேன்.
நன்றிங்க கதிர் ....உங்களதும், உங்களை போன்ற நல்ல ஊக்குவிக்கும் நட்புகளால் தான் நான் மேலும் எழுதுகிறேன். நட்புடன் நிலாமதி
யோ .........நன்றிகள்.
நன்றி ஜெஸ்வந்தி....உண்மை கலந்த ஒரு சிறு மாற்றம் செய்ய பட்ட கதை.....
"இரு மனங்களும் இணயாத விட்டுக் கொடுப்பற்ற உறவுகளால் எத்தனை குடும்பங்கள் சீர் குலைகின்றன"
[i][/i]விட்டுக்கொடுப்பு இல்லாமல் நம்மவர்களில் பலரின் வாழ்வு இப்போ திசைமாறி செல்கின்றது.
இது உங்கள் 50வது பதிவு என்று நினைக்கின்றேன்.வாழ்த்துக்கள்.
Post a Comment