நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Monday, October 26, 2009

ரயில் பயணத்தில் .... ......

ரயில் பயணத்தில் ..........

குறிப்பு :.....  சில வாரங்களாக எதுவுமே எழுத முடியவில்லை. உறவுக்குள் ஒரு இழப்பு அயல் ஊர் ...பயணங்கள் ...பின்பு அன்பான் சில பொறுப்புகள்.   வீடில் சில் அலுவல்கள் என்று வலைத் தள பக்கம் வரவேயில்லை. வந்தாலும் ஒரு சிலதை வாசித்து விட்டு  போய் விடுவேன் இன்று ஏதும் எழுதனும் என்று தோன்றவே ஒரு சிறு பதிவு . உங்களுடன்........

செந்தூரன் அன்று காலை அவனது ஊர் நோக்கிய பயணம். பயணப்பை டிக்கட் எல்லாம் சரி பார்த்தபின் டாக்க்சி பிடித்து ரயில் நிலையம் வந்தடைந்தான். மூன்று வருடங்களுக்கு பின் , ஊர் நோக்கி புறப்டுகிறான். இது வரையில்  படிப்பு கலாசாலை  விடுதி என்று இருந்தவன் கடைசியாக  புரபசராக பதவி கிடைத்தபின் .........இப்போது ஊர் நோக்கி .............

செந்து .......எனும் செந்தூரனுக்கு பெண் பார்த்து , பெற்றார்கள்  அவனை இந்த முறையாவது ஊருக்கு  தீபாவளிக்கு வரும்படி வற்புறுத்தி அழைத்து இருந்தார்கள். ஒரு வார விடுப்பில் செல்கிறான். அன்று திங்கள் கிழமை . முதல் வகுப்பில் புக் செய்து இருந்தான். கிழமை நாள் என்பதால் அதிக சனக்கூட்டம் இல்லை. தன் சீட் தேடி அமர்ந்தான். சுற்று முற்றும் பார்த்தான் யாரும் தெரிந்தவர்கள் இல்லை . கையில் ஒரு புத்தகத்தை எடுத்து , வாசிக்க ஆரம்பித்தான். சடேன்று ஒரு வயதான அம்மாளுடன் ஒரு இளம் பெண் , அவனது இருக்கைக்கு முன் இருக்கையில் அமர்ந்தாள். அந்த அம்மாள் அவள் தங்கி இருக்கும் வீடுக்காரியாக இருக்க வேண்டும்., என்பது பேச்சு வாக்கில் புரிந்தது . அவள் விடை பெற்றதும்  சற்று நேரத்தில் ரயில் புறப்பட ஆரம்பித்து. அவசரமாக் தன் பயணப் பையை தலைக்கு   மேல் உள்ள பலகையில் பொருத்த  முயன்றாள் முடியவில்லை. மீண்டும் முயற்சிக்கையில் இவன் ..... May I help you .?........yes please. ..thanks. இதன் மூலம்  அவர்களது பரீட்சயம் ஆரம்பமாகியது. மாதங்கி தனது கல்லூரிப்படிப்பு முடிந்து  தனது ஊர் நோக்கி செல்கிறாள். பரீட்சை முடிவுக்காக காத்திருபவள். தனது ஊர் நோக்கி செல்வதாகவும் , தான் ஒரு உறவுக்கார அம்மாவின்  வீடில் தங்கி இருந்து படித்த  தாகவும் பேசி கொண்டதில் இருந்து தெரிந்தது.   சிறிது நேரம் பேசிக் ்கொண்டு இருந்தவள் தன் புத்தகத்தில் மூழ்கினாள். அது ஒரு எட்டு மணி நேரப்பயணம். காலை  எழு மணிக்கு புறபட்ட்வர்கள். மாலை  நான்கு , நாலரை மணியாகும்  அவர்கள் பயணம் முடிய . ... அவனது ஊருக்கு ....முன்னிய தரிப்பில் அவளது தரிப்பு ...அவள் இறங்க வேண்டி வரும்.அழகான் படித்த பெண் . இனிமையாக் பேசுகிறாள்.வீடில் பெண் பார்க்கிறார்கள். இவளை போல் ஒரு பெண் அமைந்தால்...........ரயிலின் தாலாட்டு .அவனை சற்று உறங்க செய்தது .........

.திடீரென டிக்கட் பரிசோதகர் .தட்டிஎழுப்பவும் . தனது இருக்கையில் இருந்து  எழுந்து தனது . டிக்கட்டை காடினான். இதன் பிறகு   அவன் உறக்கம் கலைந்து விட்டது.....மாதங்கி தொடர்ந்து படித்து கொண்டே இருந்தாள். அடுத்த தரிப்பில் மதிய உணவு வேளையாதலால் சற்று நீண்ட நேரம் இருந்தது ரயில் புறப்பட . அவன் எதாவது சாப்பிட வாங்க வேண்டி புறப்பட்ட வேளையில்,  இறங்க தலைபட்ட்வனை  அந்த குரல்  அழைத்து ..........பிளீஸ் .........எனக்கும் ஒரு தண்ணீர் போத்தல் வாங்கி வருவீர்களா? மறுப்பு சொல்லாமல் , இறங்கினான் காசு கொடுக்க முற்பட்டவளை தடுத்தான்.இறங்கி சென்றவன்.   தனக்கு இரண்டு பண்ணும் ஒரு சோடாவும் வாங்கி கொண்டான். அவளுக்கு தண்ணீர்  போத்தலுடன் வந்தவன் அதை கொடுத்தும்,  நன்றி சொல்லி வாங்கி கொண்டாள்.
நேரமும் விரைவாக ஓடிக்கொண்டே இருந்தது . வெளியில் செல்லும் போது வாங்கிய அன்றைய தினசரியை புரட்டி கொண்டு இருந்தான். அடுத்ததாக ,   அவளும்  இறங்க வேண்டிய, நிறுத்தம் வந்தது . அவள் இறங்கி  நன்றி தெரிவித்த போது மீண்டும் ஒரு பொழுதில் சந்திப்போம் என்றாள். சற்று நிமிடங்கள் ஓடின அவன் நினைவு மட்டும் அவளையே சுற்றி சுற்றி வந்தன. இறுதியாக அவனது ஊருக்கான தரிப்பு வரவே அவன் இறங்கி கொண்டான். வீட்டை அடைந்தவன் சென்று கால் முகங்கழுவி ,தேநீருக்காக தயாரான போது , அம்மா சில படங்களுடன் வந்தாள். படங்களை பார்த்தது ம அவனுக்கு அதிர்ச்சி .. அவளது படமும் இருந்தது . அவளுக்கு தெரியாமல் அவளது தந்தை அவளுக்கு திருமணப்பேச்சில் ஈடுபட்டிருந்தார். எனபது . ......அவள் வீட்டை  அடைந்ததும் தான் தெரியவரும். .இரு குடும்பமும் பேச்சு வார்த்தை நடத்தி செந்து ........மனம் கொண்ட அதே பெண் மண மகளாக  வாய்த் தாள் . திருமணம் இனிதே நிறைவடைந்தது .

ரயில் பயணம் (சிநேகம் ) பாதி வழியில் முடிந்து விடும் என்பார்கள். ஆனால் இவர்களையும் இணைத்து வைத்தது அந்த ரயில் பயணம் (சிநேகம்) தான்.

5 comments:

தியாவின் பேனா said...

வாங்கோ கண்டு கனநாள்

நிலாமதி said...

வணக்கம் தியா....என் குறிப்பு பார்த்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.
நலம் விசாரிப்புக்கு நன்றி

கதிர் - ஈரோடு said...

ரயில் சிநேகம் இப்படியும் வாய்க்குமா என்ன?

முன்பின் அறியாத பெண்ணுக்கு காசு பெறாமல் தண்ணீர் போத்தல் வாங்கித் தருகிறானே... எல்லாப் பெண்ணுக்கும் இப்படித்தான் அவன் செய்வானோ என்ற சந்தேகம் அவளுக்கு வராதா?

(எப்பூபூபூபூபூடியெல்லாம் யோசிக்கிறோம்!!!!)

நிலாமதி said...

ஒரு புரபசர் ஒரு தணீர் போத்தல் வாங்கி கொடுத்தால் அப்படி என்ன குடி முழுகிடுமா.....அதிக விலை இல்லயே ஒரு போத்தல் தணீர். இங்கு வெளி நாடில் ஒரு டாலர் தான். ஒரு ரூபா வருமா ஒரு போத்தல் தண்ணீர்? தாகத்துக்கு தண்ணீர் கோடி புண்ணியம்.

யோ வாய்ஸ் (யோகா) said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களது பக்கம் வருகிறேன் அக்கா. தொடர்ந்து எழுதுங்கள்.

வாழ்த்துக்கள்