கால ஓட்டத்தில் பிறந்தது கார்த்திகை .........
மழைக்கால ஆரம்பம் ,மண் மீது தூறல்கள்
ஒவ்வொரு இதயத்திலும் இனம் தெரியாத சோகங்கள்.
மத நம்பிக்கையில் கார்த்திகை மறைந்தவர்களுக்கானது
ஈழத்து மக்களின் , வீர வேங்கை களின் நினைவுகளும்
பிறந்த தினமும் ஒரு சேர மகிழ் வுற்றா ஒரு பொழுதும்
மண் ண்ணில் விதைத்த மா வீரருக்காய் ,
என் இதய மெளனங்கள் கண்ணீர் சிந்தும் ஒரு நொடி.
எத்தனை எதிர் பார்ப்புக்களுடன் மண் சென்ற வீரர் ...
கார்த்திகை தோறும் கல்லறைத் தீபங்கள்.
மலர்களுடன் , கண்ணீர் அஞ்சலிகள்
இறுதிப் போரிலே , மண் சென்ற மக்களே
சிந்திய குருதியாறே..சீறிப் பாய்ந்த கந்தக குண்டுகளே ....
சிந்துகின்றோம் கண்ணீர் , சிந்தையிலே துன்பங்கொண்டு
மண்ணுக்காய் மரணித்த மக்களிற்கு நித்திய சாந்தி கொடு ........
ஐயோ என்ற அவலைககுரலை ஐ நாவும் கேட்கவில்லை
ஆறுதலும் தரவில்லை , அயவலன் கூட அடக்க ஆள் அணி
கொடுத்தானே ஒழிய யாருமே ஏனென்று கேட்கவில்லை ..
எங்களை வைத்து அரசியலா? அனாதையாய் போனதா தமிழ் இனம்.
நெஞ்சு நிறைந்த சோகமும் ,நிம்மதியற்ற வாழ்வும்
சமூக சீரழிவும் , அகதி வாழ்வும் தான் எஞ்சியதோ ?
மீளுமா தமிழ் இனம் , தளிர்க்குமா எம் இனம்?
Followers
Subscribe to:
Post Comments (Atom)
-
மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்...
-
என் இதயம் கவர்ந்தவளே கண்கள் கண்டதால் கவரபட்டதால் காதல் கொண்டதால் கருத்து ஒன்றி அதனால் இணைந்து கொண்ட இருவர் கருத்து வேறு பட்டாலும் ...
-
அஸ்தமனத்தில் ஓர் உதயம் ............. அதிகாலை பனிக்குளிர் மெல்ல வாட்ட .........இன்னும் சற்று நேரம் உறங்கலாம் போலிருந்தது ராஜரத்னம் ஐயாவுக்க...
12 comments:
//மீளுமா தமிழ் இனம் , தளிர்க்குமா எம் இனம்? //
கடவுள் இருக்குமானால்
கருணை இருக்குமானால்
கனவு நனவாகும்,
கலங்காதீர், கலங்காதீர்.
பிரபாகர்.
நிச்சயம் மறைந்தவர் எம் நெஞ்சிலே தீபத்தால் ஆராதிகபடுவர்
கவிதை நடையில் எழுதயுளது நன்றாக உளது
short and sweet
பிடித்தது , பிடிக்காதது என்கிற தொடர் விளையாட்டில் ஆட உங்களை அழைத்து உள்ளேன், கண்டிப்பாக கலந்து கொள்ளவும் .
எக்காரணம் கொண்டும் விதையாக ஊன்றப்பட்டோர் தியாகம் வீணாகக்கூடாது என்பதே பிரார்த்தனை...
நல்லது நடக்கும் நிலா...
கண்டிப்பாக!!!
நமக்கும் விடிவு கிடைக்கும் என்று நம்பிக்கை கொள்வோம்
உணர்வுப்பூர்வமாக இருக்கிறது...
வெட்டிவிடினும் நிச்சயம் துளிர்க்கும்.
பிரபாகர் உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி
கவிககிளவன் .........கதிர் உங்களுக்கு என் நன்றிகள். நல்லதே நடக்கநினைப்போம்.எதிர்காலத்திலாவது.
அன்புடன் மணிகண்டன் .....சந்துரு .....அகல் விளக்கு ..நம்பிக்கை
தான் வாழ்க்கை எதிர் கால சந்ததிக்காவது கிடைக்கட்டும். உங்களுக்கு என் நன்றிகள்.
வணக்கம் தோழி,
இன்று தான் உங்கள் வலை பக்கம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.சிந்தனை பகிரல்களை செறிவாக முன் வைத்துள்ளீர்கள்.
லட்சாதி லட்சம் முன்னோர் சென்ற மாவீரர் வழியே லட்சியத்தீயை வென்றெடுப்போம். வாழ்த்துக்கள்.
வணக்கம் அடலேறு உங்கள் முதல் வரவுக்கும பதிவுக்கும் நன்றி ........
Post a Comment