Followers

Tuesday, November 10, 2009

கடைசி வரை யாரோ ?

  நாட்டின்   தலை  நகரில் ஒரு பிரபல் மருத்துவமனை . அந்த மருத்துவ மனைக்குரிய தோற்று நீக்கி நெடி ......மருத்துவமனையின் நடை பாதையில் மனிதர்களின் நடமாட்டம். ..எல்லோரும் பரப்பரபாக் ஓடிக்கொண்டும் நடந்து கொண்டும் இருந்தனர் ....வைத்தியர்கள் .. தாதியர்கள். நோயாளர் காவு வண்டிகள். சக்கர நாற்காலியில் சிலர். ..நோயாளரைக் காண வரும் உறவுகள் பலர் . பார்வையாளர் நேரத்தில் வரும்  சிலரை வேடிக்கை பார்த்த வண்ணம் அவர் இருந்தார். .ஞானரட்ணம் ஐயாவுக்கு மட்டும் யாரும் பார்க்க வருவதாயில்லை .

அவரது நினைவலைகள் பின்னோக்கி சென்றன. அவர் தலை  நகரில் ஆடை தைத்து கொடுக்கும் ஒரு நிறுவன் மேர்பார்வையாளராக் இருந்தார். காலக்கிரமத்தில் அவர்க்கும் திருமணம் நடந்தது . மனைவி இரு குழந்தைகள். இவர் விடுப்பு கிடைக்கும் போதெல்லாம்  வந்து ஊரில் இருக்கும் மனைவி பிள்ளைகளை பார்த்து செல்வார். ஏனோ சில் காலமாக் அவர் வரவு குறைந்தது .......கணவன் மனைவிகிடையில் பிரச்சினை என்று பேசிக்கொண்டார்கள். இருவரும் ஆண் குழந்தைகள். அவர்கள் கல்வியிலும்  சிறந்து விளங்கினார்கள். மனைவியே தாயாகவும் தந்தையாகவும் இருந்து வளர்த்தெடுத்தாள்.

அவர் வரவு இல்லாவிடாலும் மாதாந்தம் அவள் பெயருக்கு காசோலை வரும் . சில பள்ளி விழாக்களில் , அறிவு தெளிந்த மூத்தவன் கவலைப்படுவான் மற்ற் பையன் களுக்கு அப்பா வருகிறார் . எனக்கு அப்பா  வருவ தில்லையே   என்று . ஊராரும் கேட்டு களைத்து விடார்கள். அவருக்கு வேறு பெண் இருப்பதாகவும் பேசிக் கொண்டார்கள். ஆரம்ப கல்வி முடிந்ததும் பெரியவன் மேற்படிப்புக்காக் அயலிலுள்ள , நகரத்துக்கு படிக்க சென்றான். அவன் அங்கேயே தங்கி படிப்பதால் , மேலதிக செலவை தகப்பனிடம் கடிதம் மூலம் கேட்டு வாங்கினான். வருட இறுதி , நீண்ட நாள் விடுமுறை வரும் போது , தம்பியையும் அழைத்து கொண்டு தலை  நகருக்கு தந்தையிடம் போய் விடுவான். ஒருவாறு , மேற்படிப்பும் முடிந்து ,தலைநகரில்  ஒரு வேலையும் பெற்றான். இப்படி இருக்கும் காலத்தில் அவன் நண்பர்கள் வெளி நாடு சென்றனர். அதற்கும் , தந்தையிடம் கேட்டு , பணம் பெற்று , வெளி நாடு சென்று விடான்.

அண்ணவை தொடர்ந்து தம்பியும் சென்று விடவே .ஊரில் தாயார் தனித்து விடபட்டார்.  காலகிரமத்தில் அண்ண தான் விரும்பிய் பெண்ணயும் கலியாணம் செய்து குடியும்  குடிதனமும் ஆனான். இளையவன் தாய் மீது மிகுந்தா  பாசம் உள்ளவன்.  காலக்கிரமத்தில் இளையவன்  பல சிரமத்துக்கு மத்தியில் தாயாரை தன்னுடன் அழைத்து கொண்டான். எல்லோரும்  வாழ்க்கையில் , வளமாகவும் நலமாகவும் வாழ்ந்தனர். சில வருடங்கள் செல்ல தந்தை நோய் வாய் பட்டார். அவரது சேமிப்பு செலவழிந்தது . இப்போது பிரச்சினை தலை  தூக்கியது.  நோய் வாய்ப்பட்ட  தந்தையை யார் கவனிப்பது. ? இதற்கிடையில் , இளையவன் தன் குடும்பத்துடன் தந்தையை பார்க்க சென்ற போது . அவருக்கு சொந்தமாக் இருக்கும் தலைநகரத்து வீட்டை  தன் பெயருக்கு எழுதி கொண்டான். அண்ணா தம்பியருக்கிடையில் பிரச்சினை .யார் தந்தையை பார்ப்பது என்று. தாயை நான் பார்க்கிறேன் நீ தந்தையை பார் என்று தம்பியும்..........உனக்கு தான் வீடு தந்தார் நீ தான் பார்க்க வேண்டுமென்று அண்ணாவும் சண்டை........ஒருவாறு , உறவினர்கள்  சமாதானம் செய்து இருவரும் தந்தையை ஒரு தூரத்து உறவினர் உதவியுடன்,  சிறிது பணம் அனுப்பி ........ஒரு  நோயாளர் பராமரிப்பு இல்லத்தில் சேர்த்து விட்டனர்.

ஐயா ஞானரட்ணம் , பார்த்து கொண்டிருக்கிறார். தன் தள்ளாத  வயதிலும் மூத்தவன் வரானா? இளையவன் வரானா? என்று ......பெற்ற  தந்தையை , பிள்ளைகள்  படுத்தும் பாடு .......வெளி நாட்டு வாழ்க்கை .....அன்பு இல்லாத மனைவி .......முதியோர் இல்லங்களில் , பெற்றவர் வாடுவது நோய் துன்பத்தால் மட்டும்  மல்ல அன்பு அற்ற  , பாசம இல்லாத  பிள்ளிகளின் மனப் போக்காலும் தான் ...இவர்கள் முதுமை அடையும் போது ( பிள்ளைகளாய் இருந்தர்வர்கள் ) இவர்கள் நிலை என்னவோ ?.........வீடு வரை உறவு  ...வீதி வரை மனைவி ....காடு வரை பிள்ளை ....கடைசி வரை யாரோ ? ..

8 comments:

சீமான்கனி said...

haiya....
me the 1 st:))))...
உங்கள் தமிழ் வித்யாசமாய் அழகாய் இருக்கு அக்கா...
மீண்டும் ஒரு அருமையான பதிவு நிலா அக்கா நாட்டில் முதியோர் இல்லம் எப்போது இல்லாமல் போகிறதோ அன்றுதான் பாசம் என்ற சொல் செல்லுபடியாகும்...அதுவரை பாசம் வெறும் செல்ல காசுதான்...வாழ்த்துகள்

நிலாமதி said...

நன்றி நண்பா ...எங்கே நீண்ட நாட்களாக் காணோம .
வேலைப்பளுவா ?

thiyaa said...

நல்ல கதை
நல்ல படிப்பினை
வாழ்த்துகள்
என்ன நீண்டநாள் பதிவில்லை ????/

Admin said...

அடிக்கடி இப்படியான பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.பகிர்வுக்கு நன்றிகள்.

தமிழ் அஞ்சல் said...

அக்கா நானும் வந்துட்டேன்..!

நிலாமதி said...

தியா ..சந்துரு......திருப்பூர் மணி உங்களுக்கு ........நன்றி

கலகலப்ரியா said...

நல்ல இடுகை நிலாமதி..!

பா.ராஜாராம் said...

நெகிழ்வான பதிவு நிலாமதி.உங்களை எனக்கு அறிமுகம் செய்து தந்ததில்,நிறைய சந்தோசம்.தெளிவான நடை.