Followers

Monday, November 23, 2009

தாயக கனவுடன் சாவினை தழுவிய ....

தாயக கனவுடன் சாவினை தழுவிய .....
..
கார்த்திகை இருபத்தியேழு  மாவீரர் தினம்.
மெளனமாய் அஞ்சலிப்போம்.....

முப்பது வருடங்களுக்கு மேலாக
எம்மை நாமே ஆளவேண்டும்
சகல உரிமையுடன் வாழ் வேண்டும்
என்னும் உன்னத நோக்கதுகாய்
"தமிழர் தாயகம் தமிழ் ஈழம்"
என்னும் தாரக மந்திரத  தோடு
சாவினை தழுவிய மா வீரர்களே

இறுதி போரிலே , கந்தக குண்டுகளின்
குண்டு மழையிலே சிதறுண்ட மக்களே
குற்றுயிரும் ..குறை உயிருமாய்
புதைக்க பட்டவ ர்களே ...நீங்கள்
மண்ணுக்காய் விதைக்க பட்டவார்கள்
விழி நீர் மழை சொரிய ,  நினைக்கின்றேன்
எத்தனை கனவுகள் ஆசைகள்
விருப்பங்கள் என்பவற்றை
மண்ணுக்காய் துறந்த மாவீரர்களே.
தாயாய் தந்தையாய் சகோதரியாய்
மனைவியாய்  மகளாய் மகனாய்
விதைபட்டவர்களே ஆறாது எம் துன்பம் ,

நீவிர் இலட்சியதுகாய் இறந்தவர்கள்
வல்லரசுகளின் உதவியாலும் வான் மீது
குண்டுகளாலும்அயல உறவு
குள்ள நரிகளின் தந்திரத்தாலும்
இலட்சியம் திசை மாற்ற பட்டாலும்
வீழாது ஒரு போதும் ஈழத்தமிழனின் உறுதி
காலங்கள் மாறும் காட்சிகளும் மாறும்
என்றோ ஒரு நாள் தோன்றும் தமிழ் ஈழம்
இது  மாவீரரின் ரத்தப் பழி .ஈழ மக்களின்
இலட்சிய கனவுகளின் கோட்டை
நிறைவாகும் ஒரு நாள் சத்தியம் உமது  கல்லறை மீது

9 comments:

சீமான்கனி said...

//வீழாது ஒரு போதும் ஈழத்தமிழனின் உறுதி
காலங்கள் மாறும் காட்சிகளும் மாறும்
என்றோ ஒரு நாள் தோன்றும் தமிழ் ஈழம்
இது மாவீரரின் ரத்தப் பழி .ஈழ மக்களின்
இலட்சிய கனவுகளின் கோட்டை
நிறைவாகும் ஒரு நாள் சத்தியம் உமது கல்லறை மீது //

உணர்வு பூர்வமான வரிகள் அக்கா...விடியும் என்ற நம்பிக்கையோடு அஞ்சலில் கலப்போம்...நன்றி அக்கா...

நிலாமதி said...

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி நண்பா.

thiyaa said...

நினைவழியாப் பொழுதுகள் இவை

ஈரோடு கதிர் said...

தியாகச் சுடர்களின் கனவுகள் ஒருநாள் வெல்லட்டும்

கவிதை மனதை கனக்க வைக்கிறது நிலா

அகல்விளக்கு said...

இரத்த நாளங்களை வீரியமாக்கும் கவிதை.

நிச்சயம் மீள்வோம் ஒருநாள்.

tamiluthayam said...

இளமை நாளின் கனவை எல்லாம் எருவாய் மண்ணில் புதைத்தவர்கள்... போர்க்களம் படைத்து தமிழ் இன கருத்தில் நெருப்பை விதைத்தவர்கள்..

நிலாமதி said...

நன்றி.....தியா ...கதிர் ....தமிழ் உதயம்......அகல்விளக்கு. .

Admin said...

அவர்களின் கனவுகள் நனவாகும். சரித்திரம் இவர்களின் பெயர் சொல்லும்.
மாவீரர்கள் புதைக்கப்பட்டவர்கள் அல்ல விதைக்கப்பட்டவர்கள். விருட்சமாய் மீண்டும் எழுவார்கள்.

நேசமித்ரன் said...

பெயர் சொல்லும் பதிவு வரிகள்