நம்பிக்கை .........
குழந்தைகள் என்றாலே எனக்கு நல்ல விருப்பம் .நேற்று மாலை எனது கணவரின் மூத்த சகோதரி என் வீடுக்கு வைத்திருந்தார்.அவருக்கு மூன்று மக்கள். மூத்தவள் பெண் மற்றைய இருவரும் ஆண் குழந்தைகள் மூத்தவன் யுனியிலும். இரண்டாமவன் கல்லூரியிலும் படிக்கிரார்கள் . அவருடைய மகள் வழி பேரன் மூன்று வயது .இவருடன் வாழ்கிறான். இவனது தாய் விரைவில் குழந்தை கிடைக்கக் இருக்கிறாள். பேரனும் இவரும் நல்ல நெருக்கம். கிழமை நாட்களில் பகுதி நேர பள்ளிக்கு செல்வான். பின் பு அம்மம்மாவுடன் ஒரே கொண்டாட்டம்.
அன்று காலையில் இவனை பள்ளிக்கு அனுப்பும் அலுவலில் இருந்திருக்கிறார் . இவன் காலயில் டி வீ யில் சிறுவர் நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருகிறான். சிறிது நேரத்தில் டி வீ தடைபடவே . அம்மம்மா .........My T.V is not working ...........கொஞ்ச நேரம் காத்திரு என்று இவர் சொல்லி இருக்கிறார். மீண்டும் நஞ்சரித்து இருக்கிறான் . வழக்கமாக் "தடங்கலுக்கு வருந்து கிறோம் " என்று ஆங்கிலத்தில் போடுவார்கள் ஆனால் அன்று போடவில்லை. குழந்தை எழு நிமிடமாக் காத்திருந்து விட்டு .........மீண்டும் அம்ம்மாம்மா ..............வொர்க் பண்ணவில்லை என்று சொல்லியிருக்கிறான். அவரும் வேலையாக் இருந்தவர ஜீசஸ் இடம்கேளு என்று சொல்லியிருகிறார். சில நிமிடங்கள் சத்தத்தை காணவில்லை...........
அவர் வீட்டில் இருந்த பூஜை அறையில் இவன்.....கண்களை மூடியவாறே .......jesus give my t.v. back ........jesus give my t.v back ..இருகரங்க்கூப்பியவாறே ......திடீரென டி வீ வேலை செய்ய தொடங்கி விட்டது .......அம்மம்மா .............my t.v is back.........அம்மம்மாவுக்கு சிரிப்பு தாங்க வில்லை. அவனது நம்பிக்கையும் வீண் போகவில்லை...........
...இவன் வீடில் தமிழ் கதைத்தாலும் அங்குள்ள் பெரியவர்களுக்கு ஆங்கிலம் புரியும் என தெரியும் ஆங்கிலத்திலே தான் உரையாடுவான். சில சமயம் அரைத் தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசுவான். . எப்டியாவது தனக்கு தேவையானதை பேசி சாதித்து கொள்வான். அம்மம்மாவும் தாயின் கவலை ....வரக்கூடாது என்பதால் அணைத்து இரு மொழியிலும் பேசுவார். சிலசமயம் தாய் வேண்டுமென்று அடம் பிடித்தால் யாரையாவது வரச்சொல்லி அத்தாயிடம் அனுப்பி விடுவார். இளம் வயதிலே கடவுள் தருவார் என்ற நம்பிக்கை அவன் பிஞ்சு மனதிலே முளை விடும் என்பதில் ஏது வித ஐயமும் இல்லய். வருகிறது கிறிஸ்மஸ் பண்டிகை , இப்பவே ஆயத்தங்கள் ...........எதிர் பார்ப்புகள் பரிசுக்காக.
சின்ன சின்ன சந்தோஷங்கள் என்னையும் தொற்றி கொள்ள உங்களுடன் நானும் பகிந்து கொள்கிறேன் . சந்தோஷத்துடன்...............
Followers
Monday, November 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
-
மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்...
-
என் இதயம் கவர்ந்தவளே கண்கள் கண்டதால் கவரபட்டதால் காதல் கொண்டதால் கருத்து ஒன்றி அதனால் இணைந்து கொண்ட இருவர் கருத்து வேறு பட்டாலும் ...
-
அஸ்தமனத்தில் ஓர் உதயம் ............. அதிகாலை பனிக்குளிர் மெல்ல வாட்ட .........இன்னும் சற்று நேரம் உறங்கலாம் போலிருந்தது ராஜரத்னம் ஐயாவுக்க...
9 comments:
hey....me the 1 st
உங்கள் சந்தோஷ பகிர்வில் நானும் கலந்து கொள்கிறேன்....நல்ல பகிர்வு அக்கா கடவுள் நம்பிக்கை நம்மை நல்வழி படுத்தும்...ameen...
முதல் வரவுக்கு என் முழு நன்றிகள். மகிழ்வுடன் நிலாமதி
இது கடவுளின் கருணையை இல்லை கரண்ட்ன் கருணையை ?
நல்ல பதிவு
அருமை
நல்லாயிருக்கு அக்கா
நல்லாயிருங்குங்க நிலா
வணக்கம் நண்பர்களே .....கதிர் ..தியா.. ஜோ ....ரோமியோ பாய் ...
.. ரசித்தீர்களா? .நன்றி
அன்புடன் நான் வழங்கிய இவ் விருதினைப் பெற்றுக்கொள்ளுங்கள்
http://theyaa.blogspot.com/2009/12/blog-post_02.html
//இளம் வயதிலே கடவுள் தருவார் என்ற நம்பிக்கை அவன் பிஞ்சு மனதிலே முளை விடும் என்பதில் ஏது வித ஐயமும் இல்லய்.//
கடவுள் எல்லோர்க்கும் எல்லாமும் தருவார்.ஆனால் எம் இனிய ஈழ மக்களுக்கு? அதனால் என்னை பொருத்தவரை நம்பிக்கைதான் கடவுள் தோழி.
//சின்ன சின்ன சந்தோஷங்கள் என்னையும் தொற்றி கொள்ள உங்களுடன் நானும் பகிந்து கொள்கிறேன்//
சின்ன சின்ன சந்தோஷங்களில் தான் நம் முழு வாழ்க்கையும் அடங்கி இருக்கிறது.எந்த உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும்போது பல மடங்கு
வலுபெறுகிறது.
நல்ல பதிவு.
Post a Comment