..
வாழ்க்கை இன்பமும் துன்பமும் நிறைந்தது தான். இன்பம் வரும்போது துள்ளிக்குதிக்கும் மனசு துன்பத்தில் துவண்டு தான் போகிறது துன்பத்தையும் ஏற்று சகித்து வாழ் பழகினால் வாழ்கை ஒரு கின்னஸ் பதிவு ஆகி விடுகிறது. இதோ ஒரு சாதனைப் பெண்ணின் கதை.
தாய் தந்தையர்களுக்கு செல்லப் பெண்ணாக வளர்ந்தவள் தான் மஞ்சு என்னும் மஞ்சுளா ஆசைக்கு ஒரு அண்ணா. ..அவள் வளர்ந்து மணப்பருவம் அடையும் காலத்தில் ....மாதவனுக்கு வாழ்க்கைபட்டு ..வெளி நாட்டு ஆசை கொண்டு ...கனடாவுக்கு வந்து சேர்ந்தாள். காலபோக்கில் இரு ஆண் குழந்தைகளுக்கு தாயானாள். கணவன் ஒரு தனியார் கம்பனியில் உதவி முகாமையாளராக பணி புரிந்தான் ....வீடில் குழந்தைகளை கவனிக்க வேண்டு மென்பதாலும் மாதவன் விரும்பாததாலும் அவள் வேலைக்கு போவதில்லை. ஒரு கோடை விடுமுறையின் போது ...நான்கு, எழு வயதுக் .குழந்தைகளுடன் அண்ணா வீட்டுக்கு , லண்டனுக்கு போக ஆசைப்பட்டாள். மாதவனுக்கு ...விடுமுறை கிடைக்காததால் ,மனைவி மக்களை அனுப்பி வைத்தான். அவர்களும் சேமமே சென்று ....பொழுதை இன்பமாக் களித்தனர். மஞ்சுவுக்கு கணவன் வராதது சற்று மனவருத்தம் இருப்பினும்... மகன்களின் சந்தோஷதுக்காக சகித்து கொண்டாள் .அவளும் பிள்ளைகளும் மாதவனுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வார்கள்.
இவர்கள் வருவதற்கு இரண்டு நாள் இருக்கையில் ஒரு அதிர்ச்சி நடந்தது..........மாதவன் வார விடுமுறையின் போது நண்பனுடன் ஒரு ஒன்று கூடலுக்காக சென்றவன், . பழைய நண்பர்கள் புதியஅறிமுகங்கள் என்று .... அங்கு ஏனைய நண்பர்ககள் ஒன்று கூடியதும். ...".பார்டி " களைகட்ட தொடங்கியது. பலவித உணவுகள் ...மது உட்பட ....உண்டு களித்து....அதிகாலை வேளயில் கூடி சென்ற நண்பன் ....அவனது தொடர்மாடிக்கு மீண்டும் கொண்டு வந்து விட்டிருந்தான். மாதவனுக்கு லிப்ட்( உயர்த்தி ....தமிழ் தெரியலை ) இருந்தாலும் .படிஎறித்தான் செல்வான். மூன்றாம் மாடியில் இருந்த அவன் மாடிக்கு ஏறி ..அரை பங்கு தூரம் சென்றதும் ....சிறு தடுமாற்றமாய் வரவே , ( ஓரளவு குடித்திருந்தான் ) விழுந்து விடான்...நன்றாக் தலையின் பின் பகுதி அடி பட்டு விட்டது ..விழுந்தவன் தான்.........முடிவு விபரீதமாகி வி ட்டது. அதைகண்டவர்கள் நிர்வாகத்துக்கு அறிவித்து ...வைத்திய சாலைக்கு அனுப்பப் பட்டான் .........அங்கு சிறிது நேரத்தில் உயிர் பிரிந்தது ...உறவினர் ..... அயலவர்கள் உதவியுடன் .....செய்தி பறந்தது............
மஞ்சு ....மிகவும் துயரத்துடன் வந்தாள் ....அதிர்ச்சியடைந்து விட்டாள் . போய்வா என்றவன் ஒரேயடியாய் போய்விடானே..........இனி , என் எதிர்காலம் என்ன ...குழந்தைகளை எப்படி வளர்ப்பேன்...........என்று பல் கேள்விகளுடன் வந்து சேர்ந்தாள். மிகவும் சோகமாக மரணச்சடங்கு நிகழந்தது.............வந்த அயலவர் உறவுகள் எல்லோரும் போய் விட்டனர் . அவளது சகோதரனும் ...புறபட்டு விடான். இப்போது தனிமை மிக வாடியது அடுத்தது என்ன என்று........குழந்தைகளும் மிகவும் சோகமாய் இருந்தனர். .ஊரில் உள்ள தாய் தந்தையார் தம் மகளின் வாழ்வு இப்படியாகி விட்டதே என்று அடிக்கடி கடதமும் தொலை பேசியிலும் தொடர்பு கொள்வார்கள். நாங்கள் இருக்கிறோம் மனதை தளரவிடாதே என்று ஆறுதல் கூறுவார்கள்.
பாடசாலை ஆரம்பமாகியது மகன்களும் சென்று விட்டனர் . மாலை வரபோகிறார்கள் என்று உணவு சமைக்க ..ஆயத்தமானாள் .......உறவுகளின் உதவியாலும் , மாதவனின் இன்சூரன்சு ( ஆயுட்ஆயுத காப்புறுதி ) பணத்தினாலும் , மரண செலவு வேறு செலவுகள் போக மூன்று மாதங்களை கடந்து விடாள். அடுத்து என்ன என்பது தான் அவளது பெரும் கேள்வியாக் இருந்தது. தனிமையை போக்க , உறவுகள் அயலாவர்களின் பிள்ளிகளுக்கு பியானோ வாத்தியம் கற்றுக்கொடுத்தாள். இளம் பருவத்தில் அவள் கற்ற இசைக்கருவிகளின் ...படிப்பு வீண் போகவில்லை. நான்காவது மாதம் ...இருப்பிட வாடகைப் பணத்துக்காக கடிதம் வந்த போது ....துவண்டு போனாள் இனி என்ன செய்வது என்று.........
அவளது தந்தையின் நண்பர் ஒருவர் ....அங்கு தனியார் கல்வி நிறுவனமொன்றை நடத்திக் கொண்டிருந்தார்.அங்கு சென்று கற்பிப்பதற்காக ...ஒரு வேலையை பெற்றுக்கொண்டாள் ...முதலில் அங்கு ஆசிரியைக்கான தேவை இருக்க்வில்லை என்றாலும். இவளது நிலையை எண்ணி சம்மதித்தார். .முன்பு கணவனுடன் தவிர அதிகம் வெளியில் செல்லாதவள் இப்போது தனித்து எல்லாம் செய்ய கற்றுக்கொண்டாள். கடுங்குளிர் காலத்தில் போக்கு வரத்து மிகவும் கஷ்டமாக் இருந்தது ....கார் ஓட்டக் கற்றுக் கொண்டாள். மகன்களை பள்ளியில் விட்டு விட்டு தானும் வேலைக்கு சென்றாள். அம்மாவின் கடும் முயற்சியுடன் மகன்களும் புரிந்து கொண்டு நடந்தார்கள் . காலம் வெகு வேகமாக் ஓடியது..........இன்னும் சில வாரத்தில் அவளது தாயம் தந்தையும் .....குடிவரவு முறையில் வர இருக்கிறார்கள் . தனித்து விடப்பட்ட போது என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை , அவளே செய்ய வேண்டும் , இயங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம், இன்று அவளை மேல் நிலைக்கு உயர்த்தியது............
பெண்கள் எப்படி இருக்கவேண்டும் , என்பதற்கு இவளது வாழ்வு ஒரு எடுத்துக்காட்டு.........தன்னம்பிக்கையும் கடவுளின் அருளும் இருப்பின் எதையும் சாதிக்கலாம்.
உன்னால் முடியும் தம்பி தம்பி .....உனக்குள் இருக்கும் உன்னை நம்பி நம்பி ....என்னும் பாடல் என் நினைவில்............நிழலாடுகிறது. நம்பிக்கையுடன் வாழுங்கள் நாளை உங்கள் கையில். ( உபதேசம் செய்வது ...எளிது ...நடைமுறைபடுத்துவதுதான்..........?.காலம் கை கொடுக்கும். )
Followers
Subscribe to:
Post Comments (Atom)
-
மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்...
-
என் இதயம் கவர்ந்தவளே கண்கள் கண்டதால் கவரபட்டதால் காதல் கொண்டதால் கருத்து ஒன்றி அதனால் இணைந்து கொண்ட இருவர் கருத்து வேறு பட்டாலும் ...
-
அஸ்தமனத்தில் ஓர் உதயம் ............. அதிகாலை பனிக்குளிர் மெல்ல வாட்ட .........இன்னும் சற்று நேரம் உறங்கலாம் போலிருந்தது ராஜரத்னம் ஐயாவுக்க...
14 comments:
//நம்பிக்கையுடன் வாழுங்கள் நாளை உங்கள் கையில்.//
உண்மை தோழி. நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்... நல்ல கருத்தை பதிவு போட்டதற்கு.
தனித்து விடப்பட்ட போது என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை , அவளே செய்ய வேண்டும் , இயங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம், இன்று அவளை மேல் நிலைக்கு உயர்த்தியது............
தன்னம்பிக்கைக்கு ஒரு சல்யூட்!
அருமை நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
நல்லா karuthulla பதிவு வாழ்த்துக்கள் தொடருங்கள்....
வாழ்வில் நிச்சயம் துணிவும் தன்நம்பிக்கையும் இல்லாவிட்டால் நொருங்கிவிடுவோம்.நல்லதொரு பதிவு நிலா.
காலம் சில மனிதர்களிடம்..இப்படிதான் விளையாடிவிடுகிறது.... உறுதியிருந்தால் காலத்தையும் வெல்லலாம் என்பதற்கு இந்த பதிவே சான்று!
பகிர்வுக்கு நன்றி.
நம்பிக்கைக்கு ஆயிரம் வார்த்தைகள் இதற்கு முன்னால் வந்திருந்தாலும் . உங்களின் இந்த பதிவு அனைத்திலும் ஒரு புதுமைதான் .
அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் அக்கா
எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் சூழ் நிலை நமக்கு ஏற்படுத்திவிடுகிறது அந்த பெண்ணின் நம்பிக்கை பாராட்டுக்குரியது..
நல்ல பதிவு..
தொடர்ந்து எழுதுங்கள்.. நன்றி..
உங்களின் புதிய பதிவிற்காக காத்திருக்கிறேன் !
நல்ல பதிவு.
அழகிய தன்னம்பிக்கை கட்டுரை.
நல்ல பதிவுதோழி..
இங்க வாங்க உங்களை ஒரு தொடருக்கு அழைத்திருக்கிறேன்.
http://niroodai.blogspot.com/2010/03/blog-post_14.html
Post a Comment