நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Wednesday, July 21, 2010

எனக்குமொரு சைக்கிள் வண்டி ...........சென்ற வார இறுதியில் ...என் உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தேன். அவர்களுக்கு ஆறு  வயதில் ஒருசிறுவனும் ..எழு மாதத்தில் பெண் குழந்தையுமாக் நால்வரும் வாழ்கிறார்கள். தந்தை மனோகரன் .. குழந்தைகளில் மிகவும்நேசம் மிக்கவர். என்ன குறும்பு செய்தாலும் பொறுத்துக் கொள்வார். தாயார் சற்று கண்டிப்பானவர். ஏதும் தப்பு  செய்தால் ஒரு மூலையில் இருத்தி விடுவார். அவ்வபோது அகப்பை காம்பு ..காட்டப் படும்  ஆனால் அடிக்க மாட்டார். அமைதியாக் இருக்க தண்டனை கொடுப்பார். இப்போது கோடை காலம் ..தந்தை வேலை முடிந்து வீடு வந்ததும்..வெளியில் பார்க்கில் உலாவ செல்வார்கள்.( என் செல்லம்) மாதுளனுக்கு..( எனக்கு குழந்தைகள் கொள்ளை ஆசை.. நானும் குழந்தையாக மாறி விடுவேன் ) மற்றும் சிறுவர்களை போல சைக்கிள்  ஓட்ட விருப்பம் . ஒரு சில தடவை  தனக்கும் வாங்கி தரும்படி கேட்டு இருக்கிறான்.  பார்க்கலாம் என தந்தை சொல்லியிருகிறார்.

நாங்கள் சென்ற போது மாதுளன் மாடி அறையில் தொலைக் காட்சியில்
மும்முரமாக  இருந்தவர் .... கவனிக்க் வில்லை  போலும். பார்த்துக்கொண்டிருந்தவன், நாங்கள் தேநீர் அருந்தி ...விடைபெற சற்று  முன் ஓடிவந்து என் கை பிடித்து அழைத்து சென்றான் அவர்கள் கார் தரிப்பிடத்துக்கு ( garage )  வாங்கோ அன்ரி வாங்கோ .....உங்களுக்கு ஒன்று காட்ட வேண்டும்( I want டு ஷோ யு something )  என்று ஆங்கிலமும் தமிழும் கலந்து ..சம்பாஷனை போகிறது. அங்கு சென்று .. பார்த்தபோது அவருக்கு ஒரு சிறிய சைக்கிள் வண்டி ..(.training wheel ) உதவிச் சக்கரத்துடன் வாங்கி வந்திருக்கிறார் தந்தை. காலப்போக்கில் அவன் நன்றாக  பழகிய பின் அதைக் கழற்றி விடலாம். தான் பழகிய் பின் தன் தங்கையையும்   ஏற்றிச் செல்வானாம் ....அவனது எண்ணங்கள  கற்பனை உலகில் கொடிகட்டி பறக்கிறது ..."எனக்கு அப்பா வாங்கி தந்தது. நாங்கள் பார்க்கில் ஓடிப் பழக போகிறோம்."  அந்த பிஞ்சு மனத்தில் பெருகிய உற்சாகத்துக்கு அளவே இல்லை.

இளவயது ஞாபகம் என்றும் நெஞ்சில் நிறைந்து அழியாத கோலங் களாக இருக்கும். என் அப்பா .... வாங்கியது ..என் அம்மா தந்தது ... என்று பள்ளியிலும் பெருமையாக் சொல்லிக்கொள்வார்கள். அவனுக்கு வரும் ஐந்தாம் திகதி பிறந்த நாள் வருகிறது ..இப்போதே பரிசு வாங்கியாகி விட்டது. மிகவும் அன்பானவர்கள் கொடுக்கும் பரிசு ..பெறுமதி இல்லாதது . என் சின்ன வயதில் என் மாமா வாங்கித்தந்த அழகான் எல்லா வண்ணங்களும் உள்ள குடை என் கண் முன் நிழலாக் விரிந்தது ....குழந்தையின்  மகிழ்ச்சியை அசை போட்ட் வண்ணம் வீடு வந்து சேர்ந்தேன்.

8 comments:

சீமான்கனி said...

ஆம் அக்கா இதுபோல் பரிசுகள் மறக்கமுடியாதவை...சிலவைகள் பொக்கிஷமாய் கூட வைத்து கொள்வது உண்டு...என் பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள் அக்கா...

இளம் தூயவன் said...

பிஞ்சி களின் சந்தோசத்தை பார்க்கும் பொழுது ,அந்த நேரத்தில் நம் உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சி என்னில் அடங்காது.

THE PEDIATRICIAN said...

பிஞ்சி களின் சந்தோசத்தை பார்க்கும் பொழுது ,அந்த நேரத்தில் நம் உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சி என்னில் அடங்காது.

சே.குமார் said...

ஆம் நிலா, இது போல பரிசுகள் மறக்க முடியாதவை....

ஆ.ஞானசேகரன் said...

//அவனுக்கு வரும் ஐந்தாம் திகதி பிறந்த நாள் வருகிறது ..//

வாழ்த்துகளை சொல்லிவிடுங்கள் சகோதரி...

pinkyrose said...

உங்கள் தமிழ் நிரம்ப அழகு நிலாக்கா!
மாதுளன் இனிமையான பெயர்...
அவனுக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள்

சௌந்தர் said...

நல்ல நினைவுகள் எப்போதும் மறக்க முடியாது

உஜிலாதேவி said...

என்னை மீண்டும் ஒருமுறை குழந்தை பருவத்திற்கு அழைத்து சென்றைமைக்கு நன்றி