நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Friday, August 6, 2010

பிரதி பலன் .......


பிரதி பலன்


     காலம் செய்த கோலம் . தாயகத்தில் இருந்து  அதிகம் பேர் உள நாட்டுக் குழப்பங்களால் அகதிகளாக் வெளி நாடு சென்றனர். ராஜ சுந்தரம்  குடும்பமும் விதி விலக்கல்ல . அவரும் குடும்பத்துடன் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார். இரு மகன்களும் பள்ளியில் பயின்றனர் .பிள்ளைகளின் தேவைகளை சமாளிக்க் முடியாமலும் வாடகைப்பணம் அதிகமானதாலும் இரண்டு வேலைக்கு சென்றார்.  ராஜ சுந்தரம். . பகலில் ஒரு கார் கம்பனியிலும் மாலை  நேரங்களில் ஒரு உணவு விடுதியிலும். வேலை செய்து இரவு பத்து மணியாகும் வீடு வந்து சேர .அத்தோடு வெளி  நாட்டு வாழ்வுக்கே உரிய கால  நிலை மாற்றங்களும் அவருக்கு வாழ்வில் வெறுப்பை தந்தது. இருந்தாலும் மகன்களின் எதிர்கால் வாழ்வை எண்ணி
சகித்து கொண்டார். ஒரு நாள் தாயகத்தில் உள்ள ஒரு மூத்த சகோதரி . தன் பெண்ணை இங்கு வைத்திருக்க் மிகவும் பயங்கரமாக உள்ளதால்  முகவர்  மூலம் அனுப்புவதாகவும் அவளை பொறுப்பெடுத்து பார்த்துக்கொள்ளும்படியும் எழுதினார். அவளும் ( ராதிகா) நாட்டுக்கு  வந்து படித்து ஒரு வேலையில் சேர்ந்து ,..தன்  முறைப்பையனை திருமணம் செய்தாள்.

அந்த பையன்  வேறு ஒருநாட்டில் இருந்து வந்ததால் அவனுக்கு வேலை  கிடைப்பது , மிகவும் கஷ்டம் ஆக இருந்தது. பின்பு சுந்தரம் மாமாவின் வேலையிடத்தில் ...அவரது முயற்சியால் மருமகனுக்கு வேலையும் கிடைத்தது.  ராதிகா மூன்று குழந்தைகளுக்கு தாயானாள்.  அவர்கள் வாழ்வு வளமாகவே சென்றது. ஒரு தடவை ...அவர்களது  வாகனம்  ஐந்துபேருக்கு போதியதாக் இல்லாததால் அதிவிட பெரிய இருக்கைகள் கொண்ட ஒருவாகனம் வாங்கி தரும்படி கேட்டாள் .  மாமா  சுந்தரத்திடம. அவரும் சற்று பொறு வசதியாக் வரும்போது வாங்கித்தருகிறேன் என்றார். சுந்தரம் அந்த கம்பனியில் பல் வருடங்கள் வேலை செய்வதால் அவருக்கு  சலுகை அடிப்படையில் வாகனம்,  ஒருவருடத்துக்கு ஒரு தடவை  வாங்க முடியும் .

ராதிகாவின் நல்ல காலம் விரைவில் அமைந்தது.  ஒரு எட்டு இருக்கைகள் கொண்ட வாகனம் ,அதற்குரிய பத்திரங்கள். முறையான் உரிமம் பெற்று வாங்க உதவி செய்தார். ஒரு நாள் ஒரு கோடை விடுமுறையில் ஒரு நாள் சுத்தரத்தின் மனைவியின் சகோதரன், குடும்பத்துடன் இவர்கள்  நாட்டுக்கு வந்தார்கள். அங்கு எல்லோரும் சுற்றுலா போகும் காலம். சொந்த வாகனம் அல்ல்து வாடகை வாகனத்தில் செல்வார்கள். வந்தவர்களை ஊர் காட்ட அழைத்து செல்ல வேண்டி இருந்ததால் சுந்தரம் மருமகளிடம் அந்த வாகனத்தை ஒரு நாள் தரும் படி கேட்டார் . மருமகள் ராதிகா மறுத்து விட்டார் ..  சாட்டுப் போக்கு சொன்னாள். மாமா சுந்தரம் மிகவும் வேதனைப்பட்டார். வாடகைக்கும் எடுக்க முடியாத நிலை. அது  சுற்றுலாக் காலமேன்பதால் ..எல்லோரும் முன் பதிவு செய்து விடார்கள்.

என்ன செய்வது உலகம் இப்ப்டித்தான்.. எல்லோரும் நன்றி மறந்தவர்களாகவே வாழ்கிறார்கள். இனி வரும் வார இறுதியில்செல்வததற்காக முன்பதிவு செய்துவிட்டு காத்திருகிறார்கள். நாம் உதவி செத்தவர்கள் ஒரு நாளும் எமக்கு திரும்பி செய்யமாடார்கள் . இதுவும் சுந்தரத்துக்கு ஒருபாடம். நன்றி மறந்த வாழ்வு அவர்களை எங்கே கொண்டு விடும்..........ஒரு விடயத்தில் படித்தாயிற்று ...ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி ..அதன் பின் நீ யாரோ நான் யாரோ...........காலம் ஒரு நாள் மாறாமல் போகுமா?

கேள்விபட்ட் ஒரு  உண்மை சம்பவம். என்னால் முடிந்தவரை உங்களுடன் பகிர்கிறேன். ........உங்களுக்கும் ஒரு  பாடமாகக்  கூடும்.

6 comments:

சீமான்கனி said...

ஐ நான்தான் பஸ்ட்டு படிச்சுட்டு வாறேன் அக்கா

சங்கவி said...

நன்றி மறப்பது நன்றன்று....

ஒரு நாள் ராதிகாவிற்கு புரியும்....

ஜெய்லானி said...

காலம் மாறும் ..!!!

சீமான்கனி said...

உலகம் இப்படிதான் அக்கா இருக்கு பகிர்வுக்கு நன்றி அக்கா...

சே.குமார் said...

//காலம் ஒரு நாள் மாறாமல் போகுமா? //

Correct. Matram varum endru nambuvomaga.

நிலாமதி said...

சீமான்கனி ...ஜெய்லானி . சே குமார் .......சங்கவி ....உங்கள் வரவுக்கும் பகிவுக்கும் நன்றி.