Followers

Wednesday, September 1, 2010

பொருத்தம்.

பொருத்தம்



பொன்னூர் எனும் அந்த அழகிய சிறு கிராமத்தில் பிறந்து  வளர்ந்தவர்கள தான்.
நிதி என்னும் சிறுமியும் மதியழகன் எனும் சிறுவனும். எல்லோராலும் அழகன் என அழைக்க பட்டவன். குடும்பத்தில் இவனுடன் இன்னும் இரண்டு ஆண் குழந்தைகள். தந்தை ஒரு கிராம சபை கந்தோரில் செய்லாளராக் இருந்தார். இவனது பெற்றோருக்குப் பெண குழநதையில்லையே என்னும் கவலை. துள்ளி விளையாடும் பள்ளிப்பருவம்மாறி உயர் கல்லூரி சென்றான். அழகன்.

நிதி எனும் தயாநிதி குடும்பத்துக்கு ஒரே ஒரு பெண குழந்தை . வசதி வாய்ப்புக்கள் இருந்தும் ஏனோ அவளுக்கு சக உறவுகளுக்கான பலன் இருக்கவில்லை. சிறு வயது முதல் சக மாணவனான அழகனுடனும்  அவனது நட்பு களுடனும் விளையாடி வருவாள். காலபோக்கில் அவள் பருவ வயது அடைந்ததும் விளையாட்டுக்கள் எல்லாம் நி ன்று போய் விட்டது . ஏன் அவனை பார்ப்பதும் அனுமதிக்க் படவில்லை.  காலம்தான்  தன் பாட்டுக்கு சுழன்று கொண்டே இருந்தது. அவள் கல்லூரி  வாழ்வு முடிந்ததும் அவளுக்கு நோர்வே நாட்டில் உள்ள மண  மகனுக்கு திருமணம் பேசி கோலாகலமான திருமண  விழாமுடிந்து ஆறு மாதங்களில் நோர்வே சென்று விடாள்.
நாட்கள் செல்ல  செல்ல அவனது குடிப்பழக்கத்தால்  தம்பதியரிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவளது பெற்றவர்களுக்கும் பெரும் சோகம். அவனது துன்புறுத்தல் களுக்கும் ஆளானாள். காலம் செல்ல அவனிடம் இருந்து விவாகாரத்து பெற்று விட்டாள் .பின்பு அவள்படித்த காலத்தில் கற்றுக் கொண்ட தையல் கலை அவளுக்கு வாழ்வு கொடுத்த்து.   மனத்தளவில் சந்தோஷமாக  இல்லாவிடாலும் தனிமையில் வேதனைகள் இன்றி வாழ்ந்தாள்.

மதியழகனும் மேற்படிப்பு படித்து ஒரு பெரும் நிறுவனத்தில் பணியில் இருந்தான். காலத்தின் கோலம் , தாயகத்தில் போராட்டம் காரணமாக் உயிருக்கு பயந்து ஜெர்மன் நாட்டுக்கு பயணமானான் . அங்கு அவன் திறமைக்கு ஏற்ப வேலை கிடைக்காவிடாலும்  அவன் வாழ்வை கொண்டு நடத்த போதிய வருமானம் கிடைத்தது. திருமண வயதும் வயதும் வரவே  பெற்றார்களால் ஒழுங்கு செய்ய பட்ட ஒரு மணப்பெண்ணுக்கு  மாலை சூட்டினான். அவள் பட்டணத்தில் படித்த பெண. மூன்று அண்ணாமாருக்கு ஒரே தங்கை .வேண்டியதெல்லாம் கிடைக்க பெற்றவள். அவளுக்கு வெளிநாட்டு வாழ்வு பிடிக்க வில்லை.எடுத்துக் கெல்லாம் நான் அப்படி வாழ்ந்தேன் எனக்கு எல்லாவ ற்றுக்கும் பணியாட்கள் இருந்தார்கள் என பிறந்த வீட்டுப்பெருமை பேசினாள். அவர்களது மண வாழ்வும் நிலைக்கவில்லை. மனசு ஒத்துபோகவில்லை. பலவாறு சிந்தனையால் மதி யழகன், நிலை குலைந்து போனான். வீட்டுக்கு   ஒழுங்காக் செல்வதில்லை.  இப்படியே இருந்தவர்கள் வாழ்வு  பெரும் போராட்டம் மானது . ஒரு நாள் தன் தாய் தந்தையரை பார்க்க் என்று  தாயகம் சென்று விடாள். மாதங்கள் பலவாகியதும்..அன்றைய தபாலில் மதியழகன் பேருக்கு ஒரு மடல் வந்தது. அவள் விவாகரத்துக்கு விண்ணபித்து இருந் தாள்  அவனதும் சம்மதம் கொடுத்து மடல் அனுப்பினான். மேலும் பல ஒழுங்குகளை செய்து அவர்கள் விவாகரத்தின் படி அவர்களது திருமணம் ரத்து ஆனது.

துன்ப படுபவர்களுக்கு கடவுள் ஒரு கட்டத்தில் ஆறுதல் படுத்துவார். நோர்வேயில் தாயாநிதியுடன் படித்த் ஒரு பள்ளித்தோழியை அங்குள்ள் கடை தொகுதியொன்றில் சந்தித்தாள் .அவளும் ஊர்க் கதைகள் பேசிய போது மதியழகனின்  நிலை பற்றியும் சொன்னாள் . அவனது தொலைபேசி இலக்கமும் எடுத்து தருவதாக் விடை பெற்றனர்.சில மாதங்களின் பின் தயா நிதிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.  தொலைபேசி மூலம். மதியழகன் அவளை அழைத்துப் பேசினான். இருவரது வாழ்க்கைகளும் திசை மாறி சென்றதையிட்டு அலசி ஆராய்ந்தனர். மீண்டும் ஒருநாள் அவளது   தோழி தொலை பேசியில் அழைத்தாள். தன் வீடுக்கு வரும்படியும் ஒரு உறவினர்,வந்திருபதாகவும்  கூறினாள் . அங்கு சென்றவளுக்கு ஒரு பேரதிர்ச்சி . அங்கு அவன் மதியழகன். ஊர்க்கதைகள் பள்ளி வாழ்க்கை திருமணம் என்று எல்லாம் பேசியவர்கள் இறுதியில் அவர்கள் இருவரும் இணைத்து கொள்ள முடிவெடுத்தனர் . இதற்கிடையில் கனடா நாடுக்கு அவன் விண்ணபித்து  இருந்த நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரவே . அவர்கள் இருவரும்  கனடா நாடில் குடி பெயர்ந்து இணைந்து கொண்டனர்.  குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் வயது சற்று கடந்து விட்ட போதிலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்புடன் வாழ்கின்றனர்.

அண்மையில் நான்  சந்தித்த உண்மைக் கதை .பல் பொருத்தங்கள் இருந்தாலும் உள்ளங்களின்  மனப் பொருத்தம்  ஏனோ முக்கியமாக் கவனிக்க் படுவதில்லை. வேறு பொருத்தங் கள் அதி மீறி விடுகின்றன . உண்மையில் தேவை மனப்பொருத்தம். புரிந்துணர்வு. கடவுள் துணையால் தம்பதியர் நீடூழி வாழணும். உங்கள் வாழ்த்துக்களும் அவர்களை சேரட்டும்.



9 comments:

ஜெய்லானி said...

//.பல் பொருத்தங்கள் இருந்தாலும் உள்ளங்களின் மனப் பொருத்தம் ஏனோ முக்கியமாக் கவனிக்க் படுவதில்லை//

சரியான கேள்விதான் இது ...!!

sathishsangkavi.blogspot.com said...

தயாநிதியும், மதியழகனும் பதினாறு செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ என் இனிய வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

நீண்ட விடுப்பு இல்லாமல் உடனே கணினி கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்.
உண்மைக்கதை நல்லா இருந்தது. ஜாதகப் பொருத்தம் பார்க்கும் நம்மவர்கள் மனப்பொருத்தம் பார்க்க ஏனோ தவறிவிடுகிறார்கள்.

மதி - நிதி வாழ்க்கை சந்தோஷத்துடன் செல்லட்டும்.

MATHI said...

நிலா மதி அவர்களே !!!உண்மை சம்பவங்கள் எப்போதும்
பல பேருக்கு ஒரு எடுத்துகாட்டாக அமையும் . உண்மையில் மன பொருத்தம் இருந்தால்
வேறு எதுவுமே தேவை இல்லை. அதுவே நம்மை கொண்டு செல்லும்
களம் எல்லாம் ...ஒற்றுமையாக ...நல்ல இருக்கு இந்த பதிவு .அன்புடன் மதி ..

நிலாமதி said...

என் சிறு கதைக்கு கருத்து பகிர்ந்த
சே . குமார் சங்கவி ..மதி ...ஜெய்லானி ...உங்களுக்கு என் நண்றிகள்.

அன்பரசன் said...

வாழ்த்துக்கள்...

Sriakila said...

//அண்மையில் நான் சந்தித்த உண்மைக் கதை .பல் பொருத்தங்கள் இருந்தாலும் உள்ளங்களின் மனப் பொருத்தம் ஏனோ முக்கியமாக் கவனிக்க் படுவதில்லை. வேறு பொருத்தங் கள் அதி மீறி விடுகின்றன . உண்மையில் தேவை மனப்பொருத்தம்//

மனப்பொருத்தம் மட்டும் இருந்தாலே போதுமே! மற்றப் பொருத்தங்கள் தானாக வந்துவிடுமே. நல்ல பதிவு!

prince said...

உண்மை நிலையினை உணர்த்தியிருக்கிறீர்கள்... எல்லாம் தெரிந்தும் ஏனோ இன்னும் உலகத்தின் பின்னால் ஓடுகின்றனர்.

அரவியன் said...

வாழ்த்துக்கள்