நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Thursday, September 23, 2010

நினைக்க மறப்பது ஏனோ .........

 நினைக்க மறப்பது ஏனோ 

பட்டணத்து ஐயா என்று அழைக்க பட்ட செல்லத்தம்பி அவர்கள் காலமானார் . அவருக்கு வயது 85.. வாழ்வாங்கு வாழ்ந்தவர். பட்டணத்தில் அவரது கந்தோர் இருந்ததால் மூன்று மாதமொருமுறை வந்துபோவார். இரு ஆண்களும் இரு பெண்களுமாக் நான்கு பிள்ளைகள்  .மனைவி ராசமணி அவரது வரவுக்கேற்ப செலவு செய்து பிள்ளைகளை  படிப்பித்து ஆளாக்கி கலியாணமும் செய்து வைத்தார். மூத்தவர் டாக்டர் அமெரிக்காவில் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தார். 
இரண்டாவது மகன் லண்டனில் ஒரு நிறுவனத்தின்  சொந்தக்காரராக் இருந்தார். மூன்றாவது மகள் கனடாவில் குடும்பத்துடன் வாழ்ந்தாள் .கடைக்குட்டி இந்தியாவில் ,தன் குழந்தைகளுடன் வாழ்த்து கொண்டிருந்தாள்.  எல்லோரும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்கள். மூன்றாவது மகள்தாய் ந்தையாரை தனது  நாட்டுக்கு கூப்பிட்டு  அன்பாக் பராமரித்தாள். ஐந்து வருடங்களுக்கு முன் தாயார் இறந்து விட்டார் .. தந்தை வயோதிகத்தாலும் தனிமையாலும்  அவதிப்படுவதால்  பராமரிப்பு நிலையத்துக்கு அனுப்பினார்கள். விடுமுறையின் போது ஒவ்வொரு மக்களும் தமது  குடும்பத்துடன்  வந்து பார்த்து போவார்கள். மூன்றாவது மகள் தனது கவனிப்பிலேயே வைத்திருந்தால். வார இறுதியில் சென்று பார்த்து வருவாள். வேண்டிய போது வைத்திய  நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்வாள் . இவருக்கு பதினொரு பேரப்பிள்ளைகளும்  மூன்று பூட்டப் பிள்ளைகளும்  இருந்தனர். கடந்த சில வாரங்களாக் பேச்சு அற்று இருந்தார். உறவினர் சென்று பார்த்து  குரல் கொடுத்தால் ம்ம்ம் ம்ம்ம் .....ம் என்ற உணர்வை தவிர எந்த பேச்சும்  இல்லாதவராக  இருந்தார். சென்ற வாரம் திங்கட் கிழமை காலமானார். உறவுகளுக்கெல்லாம்  செய்தி பறந்தது. தாங்கள் இறுதிச்சடங்குக்கு வருவதாகவும் உடலை அதற்கேற்ற ஆயதங்களுடன் எட்டு  நாள்வரை பாது காக்கும்படியும் சொன்னார்கள். 

அடக்கம் செய்யும் நாளுக்கு முதல் நாள் மாலையும் மறு நாள் காலையும்  பார்வைக்கு வைத்து மதியம் ஆலய வழிபாடுடன் அடக்கம் செய்வதாக் ஒழுங்கு செய்தார்கள். முதல் நாள் மாலை  ஊரவர்கள் உறவினர்கள் என்று மண்டபம்  நிறைந்த ஜனக்கூட்டம். அவரை வைத்திருந்த  பேழை ( சவப்பெட்டி  ) மிகவும் விலை உயர்ந்தது. சடங்குக்கு வந்திருந்தவர்கள் எல்லாம் அவரது வாழ்க்கையை பற்றி புகழ்ந்தார்கள்.  பேரப் பிள்ளைகளும்  தாத்தா என்று மாலை மரியாதை செய்தார்கள். உறவினர்களும் மலர் வலயம் வைத்து வணக்கம் செலுத்தினார்கள். சமய தலைவர்களும் வணக்க் நிகழ்வுகளை நடத்தினார்கள். எல்லோரும் அவரை அஞ்சலி செலுத்தி வழியனுப்பினார்கள்.அடக்க ஊர்வலம் மிக நீண்ட கார் பவனி போல் இருந்தது . அடக்க நிகழ்வுகளும்  முடிவுற்ற பின் ஒரு மண்டபம் ஒழுங்கு செய்து மதிய உணவு வழங்கினார்கள். எல்லோரும் பசியாறி சென்றார்கள். 

எனது நண்பி ஒருவரும் இந்த அடக்க நிகழ்வுக்கு சென்று இருந்தாள். இது பற்றி பேசும் போது ...செலவுகள் வேண்டாமென்று சொல்ல வில்லை . சற்று சுருக்கமாய் செய்து அதில் சேமிக்கும் பணத்தை நம் நாட்டில் வாடும் உறவுகளுக்கு அனுப்ப ஏனோ இந்த மக்கள் மனம் வைப்பதில்லை. அந்த முதியவர் வாழ்வாங்கு வாழ்ந்து வேண்டியதெல்லாம் அனுபவித்து சென்றவர். உறவினர்களோ தங்கள் அன்பை பாசத்தை உயர்வகை பேழை எடுப்பதிலும் கோலாகலமாக் கொண்டாடி வழியனுப்புவதிலும்  செலவிடுகிறார்களே என்று எண்ணிக் கவலைபட்டாள். தங்கள் அந்தஸ்த்து படாடோபம் என்பதை காட்டுகிறார்கள். எத்தனை பேருக்கு தாயகத்தில் வாடும் குழந்தைகள் விதவைகள் ஏழைகள் வதிவிடமிலாதோரை நினைக்க மனம் வருகிறது.........

எல்லோருக்கும் ஆறடி நிலம் தான் சொந்தம் கேளிக்கைகள் கொண்டாட்டங்களில் திளைக்கும் மனம் தானம் செய்யும் மன நிலையில் இல்லாதது ஏனோ .

28 comments:

கொற்றவை said...

hello!!

அருமையா இருக்கு... என் நாட்டை சேர்ந்த ஒரு சகோதரியின் பக்கங்களை வாசிப்பதில் மகிழ்ச்சி... புலம் பெயர்ந்தாலும் பெயராத பந்தங்கள்...

:)

ஹேமா said...

புலம் பெயர்ந்தபின் நம் மக்களில் மன்நிலையே மாறிவிட்டிருக்கிறது தோழி.மனம் குழம்பிக் கிடக்கிறார்களோ ஒருவேளை !ச்சீ...!

rk guru said...

///அருமையா இருக்கு... என் நாட்டை சேர்ந்த ஒரு சகோதரியின் பக்கங்களை வாசிப்பதில் மகிழ்ச்சி... புலம் பெயர்ந்தாலும் பெயராத பந்தங்கள்...///

அருமையான வரிகள்....தொடர்ந்து எழுந்துகள் எங்கள் வாழ்த்துகளுடன்...

Sriakila said...

//எல்லோருக்கும் ஆறடி நிலம் தான் சொந்தம் கேளிக்கைகள் கொண்டாட்டங்களில் திளைக்கும் மனம் தானம் செய்யும் மன நிலையில் இல்லாதது ஏனோ //

உண்மையான வார்த்தைகள்!

தியாவின் பேனா said...

கால்ம்செய்த கோலம்

ம.தி.சுதா said...

எட்டப் போனாலும் தங்கள் நினைவுகள் எமைச்சுற்றியிருப்பதையிட்டு மகிழ்கிறேன்...

வெங்கட் நாகராஜ் said...

மாற்றங்கள் - இவர்களின் பழைய பக்கத்தினையும் மறக்கச் செய்து விட்டதோ என்னவோ... வருத்தம் தான்..

வெங்கட்.

யாதவன் said...

என்னத்தை அக்கா சொல்ல எங்கட ஆக்களிண்ட வாழ்க்கை முறைகளை
திரும்பி நிண்டு வெக்கபடவேண்டியதுதான்

ஜிஜி said...

அருமையாக இருக்கிறது..
வாழ்த்துக்கள்

நிலாமதி said...

உங்கள் வரவு எனக்கு ஊட்டச்சத்து .....கொற்றவை.... ஹேமா ......ஆர் கே குரு .... சிறி அகிலா ....தியா.. ம .தி சுதா.... வெங்கட் நாகராஜ்.... யாதவன் .....ஜி ஜி அனைவருக்கும் அன்போடு நன்றி..........

அலைகள் பாலா said...

வருத்தம் தான்

சே.குமார் said...

அருமையான வரிகள்....தொடர்ந்து எழுந்துகள்.

Chitra said...

எல்லோருக்கும் ஆறடி நிலம் தான் சொந்தம் கேளிக்கைகள் கொண்டாட்டங்களில் திளைக்கும் மனம் தானம் செய்யும் மன நிலையில் இல்லாதது ஏனோ .

.....வாழும் போது மட்டும் அல்ல, போகும் போதும் பகட்டு வேண்டாமே என்ற கருத்தை வலியிறுத்தி நல்லா எழுதி இருக்கீங்க.

சிவராம்குமார் said...

இன்றைய நிதர்சனத்தை அழகாக சொல்லி இருக்கீங்க! போகும் போது எடுத்துட்டு போறது எதுவுமே இல்லை!

நிலாமதி said...

அலைகள் பாலா ....சே குமார்..... சித்ரா ....சிவராம் குமார் உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி

அன்புடன் பிரசன்னா said...

நிலாமதி உங்கள் ஆதங்கம் புரிகிறது, ஒரு வேளை உணவின்றி உயிர் மடிவதும் இந்த தேசத்தில்தான். இதை எம்மவர்கள் கண்டுகொள்வதே இல்லை, இப்படி இறுதி சடங்குகளிலும் கேளிக்கைகளிலும் செலவு செய்யும் பணத்தில் ஆயிரம் ஏழைகளுக்கு ஒரு நாளைக்கு உணவு கொடுக்கலாம். ஒரு ஊர்வலத்திலும் பார்க்க ஒரு ஏழையின் மன நிறைவில் ஒருவருடைய ஆத்ம சாந்தி அடைந்துவிடும். அதுதான் நிஜம்....

Shan Nalliah / GANDHIYIST said...

GREAT! PLEASE CONTINUE YOUR GOOD WRITINGS! GREETINGS FROM NORWAY!

நிலாமதி said...

அன்புடன் பிரசன்னா ..ஷான் நல்லையா ....உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி

பழமைபேசி said...

ப்ச்...

நேசமுடன் ஹாசிம் said...

அருமையாகச்சொன்னீர்கள்
காலம் பதில் சொல்லும்

vimalann.blogspot.com said...

நினைக்க மறப்பது ஏனோ ..... நமது
சமூகத்தின் நிலையை படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

உங்கள் தலைப்புக்கே ஆயிரம் அர்த்தங்கள், நிலாமதி.....எல்லோருக்கும் ஆறடி நிலம் தான் சொந்தம் கேளிக்கைகள் கொண்டாட்டங்களில் திளைக்கும் மனம் தானம் செய்யும் மன நிலையில் இல்லாதது ஏனோ .....ஆதங்கம் நியாயமாக இருந்தாலும், எத்தனை பேருக்குப் புரிகிறது......உங்கள் ரோசா, மிக அழகு நிலாமதி..

DrPKandaswamyPhD said...

ஆடம்பர செலவைச் சுறுக்கி, சுற்றத்திற்கு உதவுவோம் என்கிற மனப்பாங்கு அரிதாய் இருக்கிறது.

விந்தைமனிதன் said...

எடுத்து அடக்கம் செய்யவும் நாதியின்றி அழுகிய எம் சொந்தங்களின் உடலங்களையும், கம்பிவேலிக்குள் கிடந்து உயிரோடு அழுகும் அழுகுரலும் கேட்டு தமிழகத்தில் எம்மைப் போன்றோர் இயலாமையில் அழுகிறோம்...

உங்கள் கட்டுரை நெருஞ்சி முள்ளாய் இறங்கியது என்னுள்...

கனத்த மனதுடன்...

தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் said...

அருமை,

தியாவின் பேனா said...

நல்லாய் இருக்கு...அருமையான வரிகள்.

Kousalya said...

//எல்லோருக்கும் ஆறடி நிலம் தான் சொந்தம் கேளிக்கைகள் கொண்டாட்டங்களில் திளைக்கும் மனம் தானம் செய்யும் மன நிலையில் இல்லாதது ஏனோ//

சிந்திக்க வேண்டிய நல்லதொரு பகிர்வு அக்கா....மனதை மிகவும் வருத்தப்பட வைக்கிறது ....

Anonymous said...

என் தளத்துக்கு வந்து பார்வையிட்டு, கருத்து அளித்தமைக்கு நன்றி