கடந்த வார விடு முறையில் என் நண்பியின் இழப்பு லண்டனில் நடந்து விட்டது .துக்கம் தெரிவிக்க அவள் சகோதரி வீட்டுக்கு சென்று இருந்தேன். நண்பி என்று சொல்வதிலும் எனது உறவினள். என்னோடு சிறுவயதில் கூடப் படித்தவள். கால மாற்றத்தில் பிரிந்து அவள் லண்டன் சென்று விடாள். அவளது ச்கொதரி எனக்கு அண்மையில் உள்ளாள். காலம் சில நல்லவர்களை விட்டு வைப்பதில்லை. சிறுவயதில் அவளுக்கு மூத்தவன் ஒரு ஆண் சகோதரன் பின்பு இவள் . இவளுக்கு இரு தங்கைகளும் இரு தம்பி மாரும். தந்தை வியாபாரம் செய்பவர். நன்றாக் படிப்பாள். மகிழ்வான் குடும்பம். ஆறாவது பெண குழந்தை (சகோதரி). பிறந்த ஒரு வருடம ஆக இன்னும் சில மாதங்கள். திடீரென தாயாருக்கு ஒருவகைக் காய்ச்சல் கண்டது . சில கை வைத்தியம் செய்ததும் பலனின்றி இறுதியில் வைத்திய சாலையில் சேர்த்தார்கள. முடிவு சோகமானது. அவர் இறந்து விடார். தாங்க முடியாத சோகம். என் நண்பி ஒருவாரம் பாடசாலை வரவில்லை பின்பு வயதான் அம்மம்மா குழந்தையை கவனிப்பதாக சொல்லி இவளைபடிக்க் அனுபினார் கள் .அவள் பாடசாலைக்கு வந்தாள். வீட்டில் அத்தனை பேருக்கும் சமைத்து வைத்து விட்டு கால் நடையில் பள்ளிக்கு வருவாள். அப்போது அவளுக்கு பதினைந்து வயது இருக்கலாம். சில சக் உறவுகளுக்கு மதிய உணவும் கட்டிக் கொடுத்தனுப்பி தானும் இரண்டு கவளம் கட்டிக் கொண்டு வருவாள். இத்தனைக்கும் மத்தியில் அவளது திறமை பள்ளியில் மிகவும் பாராட்ட பட்டது.
துன்பங்கள் தொடர்ந்து இருப்பதில்லை . எல்லோரும் வளர்ந்து விடார்கள. இவள் தான் முதலாவதாய் லண்டனுக்கு சென்றாள். பின் ஒவ்வொருவராக் வேறு நாடுகளுக்கும் சென்றார்கள். அங்கு மனம் விரும்பி ஒருவரை திருமணம் செய்தாள். சக் உறவுகள் துன்ப படும்போது துணையாக நின்றாள். தந்தை வயதாகி விட ஒரு சுக நல நிலையத்தில் சேர்த்து மாதம்பணம் அனுப்புவாள. இரு வருடங்களுக்கு ஒரு முறை சென்று பார்த்து வருவாள். தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வைத்தியரிடமும் தாதிகளைடமும் தந்தை நலம் கேட்பாள்.
துன்பங்கள் தொடர்ந்து இருப்பதில்லை . எல்லோரும் வளர்ந்து விடார்கள. இவள் தான் முதலாவதாய் லண்டனுக்கு சென்றாள். பின் ஒவ்வொருவராக் வேறு நாடுகளுக்கும் சென்றார்கள். அங்கு மனம் விரும்பி ஒருவரை திருமணம் செய்தாள். சக் உறவுகள் துன்ப படும்போது துணையாக நின்றாள். தந்தை வயதாகி விட ஒரு சுக நல நிலையத்தில் சேர்த்து மாதம்பணம் அனுப்புவாள. இரு வருடங்களுக்கு ஒரு முறை சென்று பார்த்து வருவாள். தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வைத்தியரிடமும் தாதிகளைடமும் தந்தை நலம் கேட்பாள்.
சக உறவுகளின் நல்ல முன்னேற்றம் கண்டு மகிழ்ந்திருந்தாள் ஆனலும் கடவுள் ஒரு சிறு குறைவைத்தார். அவளுக்குபிள்ளைப் பாக்கியம் இல்லை. தான் சக உறவுகளின் குழந்தைகளை தன் குழந்தையாகக் எண்ணினாள். ஒவ்வொரு பிறந்த நாளுக்கும்ப்ரிசு அனுபுவாள். இப்படி பட்டவள் வாழ்வில் தான் சென்ற டிசம்பர் மாதத்தில் புயல் வீசியது. சாதாரண கை மூட்டு வலி கால் வலி என்று வைத் திய சாலை சென்றவள் மேலும் மேலும் நலமின்றி போனாள் இறுதியில் அதி விசேட வைத்தயர்களின் முடிவில் அவளுக்கு .............வயிற்றில் புற்று நோய். முதலாவது ஊசி மருந்து ....(ஹெமொதேரபி)i .....கொடுத்து சற்று தேறி இருந்தாள் .இன்னும் சில காலம் வாழ ஆசைபட்டாள். சென்ற மாதம் ஆரம்பத்தில் மிகவும் கடுமையாக்கியது . இரண்டாம் ஹீமோ செலுத்தினார்கள். ....மிகவும் மெலிவடைந்து தலை முடி உதிர தொடங்கியது. படுத்த படுக்கையானாள் . சக உறவுகள் எல்லோரும் முறை எடுத்து சென்று அவளுக்கு துணையாக நின்றார்கள்.தங்கள் நாட்டில் குடும்பத்தை விட்டுவந்திருந்தார்கள். சக உறவுகள் தவிர எனை யோருக்கு தெரிவிகக் வேண்டாம் கவலைப்படுவார்கள் என்று தன் உடல் நிலை பற்றி தெரிவிக்க விரும்பவில்லை என்று கண்டிப்பாக் சொல்லி விடார். இதனால் உறவுகள் நட்புகளுக்கு அவளது இறப்பு அதிர்ச்சியாய் இருந் தது.
சக உறவுகளுக்காய் மெழுகாய் உருகியவள. .....இறுதியில் பத்து நாட்களுக்கு முன் அவள் போயே விடாள். என்று அவளது சகோதரி கண்ணீரோடு சொன்னாள். இளைய சகோதரி ...அக்கா இன்னும் கொஞ்ச நாட்கள் எங்களுடன் இருப்பாயா?....நாங்கள் மீண்டும் ஊருக்குபோவமா? ஒரு தடவை கண் திறந்துபாரு ....என்று இளைய சகோதரி கண்ணீர் விடாள் ..வயதான் தந்தை இன்னும் நேர்சிங் ஹோமில். அவளது இறுதி ஊர்வல த்தில் முன்னூறுக்கு மேற்பட்ட் உறவுகள்கலந்து சிறபித்தார்கள்.
எங்கள் சமுதாயத்தில் தாய்க்கு அடுத்த தாக மூத்த சகோதரியை தான் நெருங்கிய உறவாக் எண்ணுவோம். அக்கா என்றால் அன்பு என்றும் ...இன்னொரு தாய் என்றும் எண்ணி நடப்போம். தந்தையின் கண்டிப்புக்கு அடைக்கலம் கொடுப்பவள் அக்கா. அம்மா இல்லாத வேளை சோறு போடு என்று கேட்பது மூத்த பெண மகளை .அவசரத்துக்கு அக்கா சட்டை அயன் செய்து வை ...நேரத்துடன் எழுப்பி விடு ...என் குழந்தையை பார்த்துக் கொள் ...என்று சகல உதவிகளும் உரிமையுடன் கேட்போம் இத்தகைய உறவுக்கு உரியவள் அக்கா என்னும் உயிர்.
இது கதை அல்ல நிகழ்வு என் மன சோகத்தை உங்கள்முன் இறக்கி வைக்கிறேன். பகிர்ந்து கொள்கிறேன். மனசு இலேசானது போன்ற உணர்வு. நன்றி உறவுகளே. என் இன்பமும் துன்பமும் பகிர்ந்து கொள்வது உங்களுடன் தான்...........
14 comments:
இழப்புக்கள் எவ்வளவு வலியினைத் தரும் என்பதனை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன் சகோதரி... இதுவும் கடந்து போகும்.
பிரபாகர்...
வருத்தங்கள்
உங்கள் சகோதரிக்கு எனது அனுதாபங்கள்
மனம் கனக்கிறது!
May her soul rest in peace. Our sincere prayers for your strength.
அக்கா என் ஆழ்ந்த அனுதாபங்கள்...
சகோதரியின் பாசமும் நேசமும் இணையற்ற
தாய்ப்பாசம் போன்றது - அவள்
இழப்பின் வலி ஈடுசெய்யவியலாதது.........
"மனம் கனக்கிறது"
ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்..காலம் என்ற மருந்தை தவிர வேறொனுமில்லை...
deep condolences!
சகோதரிக்கு எனது அனுதாபங்கள்....
சில இழப்புக்களை தவிர்க்கமுடிவதில்லை அதன் வலிகளையும்
நெஞ்சு கனக்கிறது
அக்கா என்றால் இனி உங்க அக்கா நினைவு வரும்படியான உருக்கமான பதிவு.என் ஆழ்ந்த வருத்தங்கள்.இனி அவர்கள் குடும்பத்திற்கு நல்லதே நடக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நல்லோர்க்கு சில
காலம்தான் இம்மண்ணில்
இடம்கிடைக்கிறது
சில காலம்
வாழ்ந்தாலும்
பல மனங்களில்
வாழ்கிறார்கள்
இன்றும் என்றும்..........
Post a Comment