Followers

Tuesday, October 19, 2010

கடந்து போன காலம் .

கடந்து போன காலம் .

அந்தக் குடும்பத்தில் ஐந்துபேருமே பெண குழந்தைகளாக பிறந்து விட்டனர் .பூமலர் கந்தையா தம்பதிகளுக்கு . கந்தையா கடன் உழை ப்பாளி பயிற்செய்கை உத்தியோகத்தராக பணி புரிந்தார். மூத்தவள் நல்ல கெட்டிகாரி .படிப்பாலும் ஊக்க்மானவள் தானும் படித்து தன் உடன் உறவுகளுக்கும் சொல்லிக் கொடுப்பாள்.  நான்காவது பெண  நல்ல சூட்டிகையான் பெண அழகான் சுருள்  சுருள் ஆன கேசம் பார்பவர்களை கொள்ளை கொள்ளும். அழகு .மூத்தவள் பருவம் வந்ததும் ஒரு பள்ளி ஆசிரியருக்கு வாழ்க்கை பட்டாள். இரண்டாவது பெண  லண்டனில் உள்ள ஒரு நிறுவன் அதிகாரிக்கு திருமணம்பேசி அனுப்பினார்கள்.  மூன்றாவது சற்று கர்வமான் பெண . அசிரியையாக் உள்ளூரில் பணியாற்றினாள். இவளுக்கு திருணம் பேசி வருமாறு அவ்வூர் புரோக்கரிடம் சொல்லி வைத்தார்கள். நான்காமவள் தனியார் கல்லூரியில் கணணிக் கல்வி கற்றுக் கொண்டிருந்தாள். கடைக்குட்டி ( ஐந்தாவது பெண ) உயர்கல்வி கற்றுக் கொண்டு இருந்தாள்.
தாய் தந்தையும் கடைசி மூன்று பெண்களுமாக் ஐந்து பேர் அவ்வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

ஐந்து பெண பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்று ஊராரும்பேசிக் கொண்டனர். ஆனால் கந்தையாவின் கடின் உழைப்பும் பூமலர் அம்மாளின் சிக்கனமான வாழ்வு முறையும் இவர்களை நல்ல நிலைக்கு உயர்த்தியது . ஒரு நாள் அவ்வூரின் பள்ளி ஆசிரியர் இவர்கள் வீட்டுக்கு வந்து அவுஸ்திரேலியாவில் இருக்கும் மகனுக்கு நான்காவது பெண்ணை பெண கேட்டார். முதலில் தாய் தந்தை யோசித்து சொல்வதாக் சொன்னார்கள். ஆனாலும் நான்காவது மகளின் எதிகாலத்தை தட்டிக் கழிக்க விரும்பவில்லை. அவளுடன் சம்மதம் கேட்ட் போது அவளும் சம்மதம் தெரிவித்தாள். மூன்றாவது பெண்ணும் வரும் வரனைக் கைவிடாமல் சகோதரிக்கு மண முடிக்க அனுப்புமாறு தன் எண்ணத்தை வெளியிட்டாள் .காலம் உருண்டோடியது . மூன்று பெண்களை கரை சேர்த்த திருப்தியில் தந்தை கந்தையா காலமாகி விட்டார்.

தாயாரும் இரு பெண்களும் வீடில் இருந்தார்கள். தாயாருக்கு கணவனின் ஓய்வூதிய பணம் கை கொடுத்து. அவரும் சற்று தளர்ந்து போனார்.  கடைசி பெண நன்றாக் படித்தாள். அந்த ஆண்டு இறுதி தேர்வு எழுதியவள் பல்கலைக் கலூரிக்கு  தேர்ந்து எடுக்க பட்டாள் .முதலில் தாயார் விடுதிக்கு சென்று தங்கி படிக்க அனுமதி மறுத்தாலும் அவளது படிக்கும் ஆவலை தடை செய்யாமல் அனுமதித்தார்.மூன்றாவது பெண்ணுக்கு ஒரு திருமணமும் சரி வரவில்லை . பெண பார்க்க வருபவர்களும் முடிவு சொல்ல  சாட்டுப் போக்கு சொன்னார்கள. நாளுக்கு நாள் மூன்றாவது  பெண சற்று மாறுதல் அடைந்தாள் ஒரு வித எரிச்சல் மன் விரக்தி தாயாருடன் எரிந்து விழுதல் போன்ற மேலும் தீய பழக்கங்கள் குடி கொண்டன. இக்காலத்தில் பல்கலை கல்லூரியில்  உள்ள பெண்ணை அங்கு இறுதியாண்டில் கற்கும்பையன் ஒருவன் விரும்பினான் .. தாய் தந்தைக்கு ஒரே மகனான அவனை தந்தை விரைவில் திருமணம் செய்து ...தன் நிறுவனத்தை பொறுப் பெடுக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு விரைவில் ஒரு இதய சத்திர சிகிச்சைக்கு  நாள் பார்த்து கொண்டு இருந்தனர் . சத்திரசிச்சை முடித்தாலும் விரைவில் பணியை  பொறுப்பேற்க  முடியாத நிலை காணப்படும்.  எனவே இறுதிபரீட்சை எழுதி முடித்தும் திருமணம் செய்யுமாறு அவசரப்டுத்தினர்.  அவனின் பெற்றோர். மிகவும் வற்புறுத்தி கேட்டதற்கு தான் கல்லூரியில்  ஒரு பெண்ணை விரும்புவ்தாக் சொன்னான். இதனால் க டைசி பெண்ணின் தாயிடம் விரும்பகேட்டு வந்தனர். பூமலர் அம்மாளும் தன் இயலாத வயது , வரும் வாழ்க்கையை தள்ளிபோடவிரும்பாது ...தொடர்ந்து படிக்க அனுமதியோடு சம்மதித்தாள்.திருமணம் மும் அமைதியாக நிறைவேறியது.

மூன்றாவது  பெண்ணுக்கு மேலும் சினம் உண்டானது . அவள் போக்கு முற்றிலுமாய் மாறியது. புரோக்கர் பேசி வந்த  திருமணங்களையும் மறுத்து விட்டாள்.  தயார் மிகவும்  கவலைபட்டாள்.  தன்னை தனித்து துன்பப்பட விட்டு கணவர் சென்று விடாரே என்று எண்ணி கவலைப் பட்டாள்.  மூன்றாவது பெண மிகவும் பிடிவாதமாய் பேசும் திரு மண ங்களைஎல்லாம் lதவிர்த்து விட்டாள். அவளது கர்வம் மேலும் மேலும் அவளை பீடித்தது. மற்றிய பெண்களைப்போல் உறவினர்களுடனும் நன்றாக் பேச மாட்டாள். இந்தக் கவலையால் தாயார் நோய் வாய்ப்பட்டாள். தான் இல்லாத காலத்தில் தனித்து விடுவாளே என்று எண்ணிக் கண்ணீர் உகுத்தாள். அடிக்கடி  வைத்திய சாலைக்கு  சென்று அங்கு தாங்கினாள் இறுதியில் மரணித்து விடாள்.  எல்லா  பெண்களும் குடும்பத்துடன் வந்திருந்தார்கள்.  இறுதி சடங்கு முடிந்ததும் அடுத்தது என்ன என்ற கேள்வி எல்லோருக்கும் வந்தது. மூத்தவள் தன்னுடன் வந்து தங்கியிருக்கும்படி கேட்டாள்.
இரண்டாவது தன்னுடன் லண்டனுக்கு வர கேட்டாள்.  கடைசி சகோதரி தானுடன்வரும்படி கேட்டாள். எல்லோருக்கும் மறுத்து விடாள் . தான் தனியே அந்த வீட்டில் இருக்க போவதாகவும். உதவிக்கு அவூரில் உள்ள ஒரு வயதான் வரை (அவுட் கவுசில் ) வளவின் எல்லயில் உள்ள கொட்டகையில்  தங்கியிருக்க் அனுமதிபதாக்வும் சொல்லி விட்டாள். எல்லோரும் தங்கள் ஊருக்கும் வீட்டுக்கும் சென்று  விட்டனர்.

அவளுக்கு எல்லாம் இருக்கிறது.  வீடு,  பணம் வசதி ஆனாலும் ஒரு வெறுமை. தனிமை ..
சிலசமயம் தன் கர்வத்தை  எண்ணி கவலைபடுவாள்.கடந்து போகும் இளமை .மனப்பாரங்களை  பகிர்ந்து கொள்ள் முடியாத தனிமை . மன சுமை போன்ற உணர்வு ....வீணாகி விட்ட் வாழ்க்கை ..இப்படியாக எண்ணிக கவலைபடுவாள்.   குடும்ப வாழ்க்கை தாம்பத்தியம் மட்டுமல்ல். ஒரு வித பிணைப்பு . தாய் தந்தை குழந்தைககள் என்ற் ஒரு வலைபின்னல். ஒருவர்,.  மற்றவருக்காக  வாழும் விட்டுக் கொடுப்பு .தியாகம் பரிவு ..ஒரு வித பாச பந்தம். இத்தனயும் இழந்து விட்டாள். தன் கர்வம் மன இறுக்கம் என்பவற்றால்.. கடந்து போன காலம் மீண்டும் வரவா போகிறது ?. பருவத்தே செய்யும் பயிர் போன்றது வாழ்க்கை .மனிதன் ஒரு சமுதாய  பிராணி.  இயற்கை வட்டத்தின் படியே வாழவேண்டும். இல்லாவிடால் எதிர்கால மற்று ஒரு போலியான் வாழ்வை , வட்டத்துக்குள் வாழவேண்டியிருக்கும். பல வருடங்களுக்கு முன்னைய  கதையாய் இருப்பினும், ஒரு வேளை இது படிப்பவர்களுக்கு பாடமாக அமையலாம் என்பதால் பகிரப்படுகிறது .
.

11 comments:

Anonymous said...

கண்டிப்பாக யாருக்காகவது பயன்படும் கட்டுரை தான்....

Chitra said...

தனிமையிலும் வேதனையிலும் ...ம்ம்ம்ம்.....பாவமாகவும் இருக்கிறது.

'பரிவை' சே.குமார் said...

//கடந்து போகும் இளமை .மனப்பாரங்களை பகிர்ந்து கொள்ள் முடியாத தனிமை . மன சுமை போன்ற உணர்வு ....வீணாகி விட்ட் வாழ்க்கை ..//

Unmaithaan katanthavaikal kadanthavaikaley....

ungal pakirvu manathai kanakkach seithuvittathu.

எஸ்.கே said...

நல்ல கட்டுரை! மனம் கனக்கும்!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நல்ல கதை... நிச்சயமாக பலர் வாழ்க்கை இப்படி அமைந்திருக்கு ...

Kousalya Raj said...

//இயற்கை வட்டத்தின் படியே வாழவேண்டும். இல்லாவிடால் எதிர்கால மற்று ஒரு போலியான் வாழ்வை , வட்டத்துக்குள் வாழவேண்டியிருக்கும்//

படிக்கும் போதே உணரமுடிகிறது அக்கா....நல்லா எழுதி இருக்கீங்க..

http://rkguru.blogspot.com/ said...

அருமையான படைப்பு......வாழ்த்துகள்

r.v.saravanan said...

நல்ல கட்டுரை

Philosophy Prabhakaran said...

உங்கள் வலைப்பூவிற்கு முதல்முறையாக வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... இனி பின்தொடர்கிறேன்...

விமலன் said...

கதை நன்றாக உள்ளது.

thiyaa said...

நல்ல படிப்பினைப் பதிவு
வாழ்க்கையில் இப்படி பல சம்பவங்கள் நடப்பதுண்டு