நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Tuesday, November 2, 2010

அம்மா உன் அன்பு உள்ளவரைஅம்மா உன் அன்பு உள்ளவரை
தனிமை தெரிவதில்லை
உன் கரிசனம் இருக்கும் வரை
உணவும் தேவையில்லை

தனித்த் போது ஒரு சிணுங்கலில்
தாவி ஓடி அணைத்திடுவாய்
அள்ளி முத்தம் தந்திடுவாய்
அம்மா  மடி மீதும் நான் மட்டும் அரசாட்சி

கண்ணுறங்க கதை  சொல் வாய்
அப்பாவை  எனக்கு
அறிமுகம செய்தவளே
தப்புக்கள் நான் செய்தால்
தட்டிக் கேட்பவளே

பகட்டான பட்டுச்சட்டை
கலர் கலராய் காலுறை
மெத்தென்ற சப்பாத்தும்
கை காது கழுத்துக்கும்
 நகையணிபூட்டி
அழகு பார்த்தவளே

பள்ளிக்கு சென்று நானும்
பாடங்கள் பல படித்து
பரீட்சையில் சித்தி பெற்று
பட்டங்கள் பல பெற்று
பாங்காய் ஒரு பணியிடத்தில்

பல்லாயிரம் பணம் பெற்று
பக்குவமாய் வீடு கட்டி
பல பேரும் பார்த்து நிற்க
பாரினிலே தலை நிமிர்ந்து
"பாருடா என் பிள்ளயை "என்று

மார் தட்டி புகழ்  வைப்பேன்.
கலங்காதே என் தாயே ......
காலம் .....ஒரு காலம் வரும் ..
கனவில்லை இது நிஜம்

15 comments:

யாதவன் said...

ஷா அக்காச்சி கவிதையும் நல்லா எழுதுறா வாழ்த்துக்கள்


அம்மா உன் அன்பு உள்ளவரை
தனிமை தெரிவதில்லை
உணவும் தேவையில்லை
உன் கரிசனம் இருக்கும் வரை

இந்த வரியை
இப்படி போட்டாள் நல்லா இருக்கும் அக்காச்சி

அம்மா உன் அன்பு உள்ளவரை
தனிமை தெரிவதில்லை
உன் கரிசனம் இருக்கும் வரை
உணவும் தேவையில்லை

தமிழ்த்தோட்டம் said...

அம்மாவின் சிறப்பை மிகவும் அருமையாக சொல்லியிருக்கீங்க நன்றி

இரவு வானம் said...

நல்லா இருக்குங்க

தமிழ் உதயம் said...

அங்கங்கே தெரியும் ஈழத்தமிழை ரசித்தப்படி வாசித்தேன். என் தாயையும் நினைத்து கொண்டேன்.

Chitra said...

படமும் கவிதையும் - மனதோடு ஒட்டி கொண்டன.

HAPPY DEEPAVALI!

வெங்கட் நாகராஜ் said...

அம்மாவின் அன்பு இருந்தால் எல்லாமே சாத்தியம்தான். நல்ல கவிதை சகோ.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சே.குமார் said...

அம்மா நிறைவாய்...!

உங்களுக்கும் உங்கள் உறவுகள் மற்றும் நட்புகளுக்கும் என் இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள்.

சங்கவி said...

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

Dr.எம்.கே.முருகானந்தன் said...

"அம்மா உன் அன்பு உள்ளவரை
தனிமை தெரிவதில்லை..."
உணர்வு பூர்வமான நல்ல கவிதை. அம்மாவை சில வருட முன்னர் இழந்த எனக்கு ஒத்தடமாக இருந்தது.

தமிழர்களின் சிந்தனை களம் said...

nice

http://usetamil.forumotion.com

நிலாமதி said...

யாதவன் உங்கள் விருப்ப படி மாற்றி விடேன் .உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும். பதிவுக்கும். நன்றி

goma said...

அம்மா அம்மாதான்
மத்தவங்கெல்லாம்
சும்மா சும்மாதான்

இது எப்படி இருக்கு?

மாய உலகம் said...

அம்மா உன் அன்பு உள்ளவரை
தனிமை தெரிவதில்லை//

அம்மா உள்ளவரை யாரும் அனாதையில்லை...அழகு வாழ்த்துக்கள் சகோ

arul said...

arumai

Abdul Basith said...

தங்களின் இந்த கவிதையினை வலைச்சரத்தில் பரிந்துரை செய்துள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_08.html