Followers

Monday, November 15, 2010

அண்ணாவும் நானுமாய் .....




அண்ணாவும் நானுமாய்
மகிழ்ந்திருந்த காலங்கள்
விளையாட்டு தோழனாய்
துணைக்கு உற்ற நண்பனாய்

பிரித்தது உயர் கல்வி
என்னும் உயர் கடமை
தனி மரமாய் நானும்
தவித்திருந்த வேளை

துணையாகி வந்தான்
நண்பனேனும் கோபி
அவனது பழக்கங்கள்
என்னுடன் ஒட்டின

கூடா வேறு நட்புகளும்
கேடாய் முடிந்தது
பாடாய் படுத்துகிறது
கூடம் என்னும் சிறைக்கூடம்

வாடுகிறேன் அண்ணா
 உனை எண்ணி நாளும்
வந்து ஒரு வழி சொல்லு
விட்டு விடுதலை யாகி விட

வீண் வேடிக்கை கதையல்ல்
உன் உயிர் மீது சத்தியம்
பெற்றவர் உற்றவர் இன்றி
தேடுகிறேன் விடுதலை
 

16 comments:

எல் கே said...

கடைசி வரியை தவிர்த்து வேறு வார்த்தை போட்டு இருக்கலாம். மற்றபடி கவிதை தங்கையின் பாசத்தை காட்டுகிறது

sathishsangkavi.blogspot.com said...

//வீண் வேடிக்கை கதையல்ல்
உன் உயிர் மீது சத்தியம்
பெற்றவர் உற்றவர் இன்றி
தேடுகிறேன் விடுதலை
வாடுகிறேன் இந்த தறுதலை //

அருமையான வரிகள்...

ஹரிஸ் Harish said...

:)..நல்லா இருக்கு..

சிவகுமாரன் said...

இந்த கவிதைக்கு பின்னல் இருக்கும் சோகம் என்ன சகோதரி.?

vimalanperali said...

எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் கவிதை,அண்ணா வருவார்.

வெங்கட் நாகராஜ் said...

அண்ணனுக்காய் ஒரு அழகிய கவிதை. நல்ல பகிர்வு சகோ.

ப்ரியமுடன் வசந்த் said...

//கூடா வேறு நட்புகளும்
கேடாய் முடிந்தது
பாடாய் படுத்துகிறது
கூடம் என்னும் சிறைக்கூடம்
//

எளிமையாய் இருக்கிறது கவிதை!

'பரிவை' சே.குமார் said...

அருமையான பாசக் கவிதை.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

"உன் உயிர் மீது சத்தியம்
பெற்றவர் உற்றவர் இன்றி
தேடுகிறேன் விடுதலை
வாடுகிறேன் இந்த தறுதலை"

அருமை...தோழி..

நிலாமதி said...

எல் கே சார் ......... கடைசி வரியை மாற்றி விடேன். அது தான் சரியாக் படுகிறது

நிலாமதி said...

என் தளத்துக்கு வருகை தந்த எல் கே ..சங்கவி ...ஹரிஷ்..சிவகுமாரன் ..விமலன்...வெங்கட் நாகராஜ் ..பிரியமுடன் வசந்த்...சே குமார்..பிரஸா ஆகியோருக்கு நன்றி.

நிலாமதி said...
This comment has been removed by the author.
yarl said...

நல்ல கவிதை நிலாமதி, அனால் மனதை எதோ ஒன்று நெருடுகிறது. உங்கள் அண்ணா நலம் தானே?

ஹேமா said...

மனதில் உள்ளதை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள் நிலாமதி.பாசங்களுக்குள் அவதிப்படுவதுதானே உறவுகள் !

ADHI VENKAT said...

அண்ணாவுக்காக ஒரு கவிதை அருமை தோழி.

அனீஷ் ஜெ said...

உயர் கல்விக்கு சென்றதால் தன் அண்ணனை பிரிந்த தம்பியின் மனவலியை அற்புதமாய் கூறுகிறது கவிதை. வாழ்த்துக்கள்....

இப்படிக்கு அனீஷ் ஜெ