Followers
Friday, November 19, 2010
என் இதயம் கவர்ந்தவளே
என் இதயம் கவர்ந்தவளே
கண்கள் கண்டதால்
கவரபட்டதால்
காதல் கொண்டதால்
கருத்து ஒன்றி அதனால்
இணைந்து கொண்ட இருவர்
கருத்து வேறு பட்டாலும்
கடிந்து பேசினாலும்
பிரிந்து போகலாமா
கனத்தத் மனதுடன்
கலந்து பேசி நாமும்
கலைத்திடுவோம் பகை
கன்னி உனக்கு ஆகாது
கருத்து மோதலில்
கரையும் நம் வாழ்க்கை
கண்மணியே வா
காலமெலாம் கை
கொடுப்பேன்
காலம் இன்னும்
கடக்க வில்லை
மன்னிப்போம் மறப்போம்
மங்கை நீ மனது வைத்தால்
மா மலையும் ஒரு துரும்பு
மகிழ்வான காலம் இருக்கு
மனது வைத்து மன்னித்தால்
மாலை யிட்ட மணாளனின்
மனது தன்னை புரிந்து விடு
புரிதலும் விட்டுக் கொடுத்தலும்
இனிய இல்லறத்துக்கு
புகழ் சேர்க்கும் புனித மொழி
புரிந்து கொள் , புறப்படுவாய்
புகலிடம் நோக்கி
உன் வரவைக்கான விரும்பும் ................
Subscribe to:
Post Comments (Atom)
-
மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்...
-
http://www.youtube.com/watch?v=zskO9O3hF78&feature=player_embedded சிரிப்.... பூ ......சிரிக்கலாம் வாங்க. .ஹா ஹா ஹா சிரிக்க கூடிய ...
-
அஸ்தமனத்தில் ஓர் உதயம் ............. அதிகாலை பனிக்குளிர் மெல்ல வாட்ட .........இன்னும் சற்று நேரம் உறங்கலாம் போலிருந்தது ராஜரத்னம் ஐயாவுக்க...
27 comments:
நல்லா இருக்குங்க
படித்தேன். ரசித்தேன்.
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
நல்லாயிருக்குங்க....
கவிதையாய் இருந்தால் நல்ல வரிகள்...
வாழ்க்கையாய் இருந்தால் வலி நிறைந்த வரிகள்...
கவிதை சூப்பரா இருக்கு..
கவிதையில் விரைவில் வர சொல்லி கடிதமா?? :-))
//மன்னிப்போம் மறப்போம் //
புரிதலும், விட்டுக் கொடுத்தலும் இல்லறத்துக்கு மட்டுமல்ல, அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும். முழுமையான மனிதப்பிறவிக்கு அது அழகு.
எல் கே, கோவை டு டில்லி, சிவதர்ஷன் ...உங்கள் வரவுக்கும் பகிர்வுக்கும் நன்றி ..
சே குமார் ....படம் கண்டதும் கற்பனைக் .கவிதை முயற்சி தான் .வரவுக்கு நன்றி
ஆனந்தி ......ஸ்ரீ அகிலா .....உங்கள் வரவுக்கு நன்றி .
ம்ம்....நடத்துங்க.கவித்தூது நல்லாயிருக்கு நிலாமதி !
ரசித்தேன்....
படமும் கவிதையும் நன்று. அழகிய கற்பனை.
என் வரிகளுக்கு ஊக்கமாய் உங்கள் கருதுரைகை இருந்தது தோழியே .
தங்கள் இந்த வரிகள் எனை சற்று யோசனை கடலில் மூழ்கசெயதது ..
நன்றி ...
Maheswaran
Software Engineer, Ecotech IT Solutions pvt,
Coimbatore, India.
http://usetamil.net
படித்தேன். ரசித்தேன்.
கவிதை சூப்பர் வாழ்த்துக்கள்
அழகான வரிகள்!!!
வாழ்த்துக்கள்
படத்திற்கேற்ற கவிதை. அழகாய் இருக்கிறது.
நல்லா இருக்குங்க
"...புரிதலும் விட்டுக் கொடுத்தலும்.." இருந்தால் எந்த வாழ்வும் உல்லாசபுரியாகும் அல்லவாகும்.
நல்ல கவிதை.
நிலவு பதித்த கவிதை
முக்காடு திறந்து
முறுவலிக்கிறது ..
வாழ்த்துக்கள் சகோதரி ..
கவிதை அழகு வரிகள் நன்று
"புரிதலும், விட்டுக் கொடுத்தலும் இல்லறத்துக்கு மட்டுமல்ல, அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும்."
மிக அழகான கவிதை அக்கா
அழகு வரிகள் அருமை
கவிதை சூப்பரா இருக்கு..
நிலாமதியின் எண்ணங்களுக்கு இதயநிலாவின் வாழ்ததுக்கள் !
நிலாமதியின் எண்ணங்களுக்கு இதயநிலாவின் வாழ்ததுக்கள் !
//கருத்து வேறு பட்டாலும்
கடிந்து பேசினாலும்
பிரிந்து போகலாமா//
நன்று சொன்னீர்கள்.. :)
Post a Comment