அந்தக் கன்னியர் மடம். அங்கு இருபகுதிகளாக் பிரிக்க பட்டு பலகால்மாக இயங்கி வந்தது. இருப்பினும் சில ஆண்டு களுக்கு முன் படையினரின் அட்டகாசங்கள் குண்டு மழை போன்றவரால் சீர் குலைந்து . ஒரு சில மாதங்கள் தான் அது புனரமைக்க் பட அனுமதி பெற்று , ஆரம்பிக்க பட்டது . கடந்த கால் நடவடிக்கையில் குண்டுவீச்சுக்கும் கூரை சிதைவுகளுக்கும். கன்னியர் மடங்கள் தேவாலயங்களும்விதிவிலக்காகவில்லை.
அந்த மடத்தில் , இப்போது தான் , சில புண்ணியவான்களின் நன்கொடையினாலும் தொண்டு ஸ்தாபனங்ளின் உதவியாலும் சிறுக சிறுக கட்ட பட்டு கொண்டு இருக்கிறது.அண்மையில் பல வயதிலும் பெண் சிறுமிகள் சேர்க்க பட்டார்கள். ஆண்களுக்காக இதற்கு அடுத்த தெருவில் , மிக சிறு அளவில் சேர்ந்த பிள்ளைகளுடன் ஏற்கனவே இருந்த நிலையம் புனரமைக்க படப் போகிறது. இந்த சிறுமிகளில் பலர் தாயையும் தந்தையையும் இழந்தவர்கள் ஒரு சிலர் தாயை இழந்தவர்கள் சிலர் உறவுகளால் சேர்க்க பட்டவர்கள். அவர்களுக்கான அடிப்படை உதவியுடன் முதலில் இங்கும் பின்பு அதனுடன் தொடர்பு பட்ட கல்விக்கூடத்திலும் வயதுக்கேற்ப சேர்க்க படுவார்கள்.
பல குழந்தைகள் போரின் அதிர்வில் இருந்து முற்றாக மீளவில்லை. ஆகக்குறைந்தது மூன்று வயதும் , கூடியது பதினெட்டு வயதுக்கும் உட்பட்டவர்கள். கன்னியர் மடத் தலைவி....அவர்களுக்கு கீழே ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொருவர் நியமிக்க பட்டிருப்பார்கள். சமையல் பகுதி ,படுக்கையறை . படிப்பறை ....போன்றவை.இவர்களது அன்றாட பணிகள் திட்ட மிட்டு நேர ஒழுங்குக்கு அமைய வடிவமைக்க பட்டிருக்கும். காலை 5.45 க்கு துயிலெழுப்பி , காலைகடன் , காலை ஜெப வழிபாடு காலை உணவு அதன் பின் மிக சிறிய பணி ....உதாரணமாக் முன் முற்றம் கூடுதல் , சக நோயாள சிறுமிக்கு உதவி , காலை உணவு பின் பாடசாலை இவ்வாறே மாலையில் நாலுமணிக்கு பள்ளி விட்டதும் ,மீதி தொடரும். இடையில் மத்திய உணவுக்கு வந்து போவர்கள். வார விடுமுறையில் நேர அட்டவணை மாறும். மூன்று நாள் விடுப்பு வரும் போது.................
சிலர் உறவினர் வீடுக்குபோவார்கள்.
பல குழந்தைகள் போரின் அதிர்வில் இருந்து முற்றாக மீளவில்லை. ஆகக்குறைந்தது மூன்று வயதும் , கூடியது பதினெட்டு வயதுக்கும் உட்பட்டவர்கள். கன்னியர் மடத் தலைவி....அவர்களுக்கு கீழே ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொருவர் நியமிக்க பட்டிருப்பார்கள். சமையல் பகுதி ,படுக்கையறை . படிப்பறை ....போன்றவை.இவர்களது அன்றாட பணிகள் திட்ட மிட்டு நேர ஒழுங்குக்கு அமைய வடிவமைக்க பட்டிருக்கும். காலை 5.45 க்கு துயிலெழுப்பி , காலைகடன் , காலை ஜெப வழிபாடு காலை உணவு அதன் பின் மிக சிறிய பணி ....உதாரணமாக் முன் முற்றம் கூடுதல் , சக நோயாள சிறுமிக்கு உதவி , காலை உணவு பின் பாடசாலை இவ்வாறே மாலையில் நாலுமணிக்கு பள்ளி விட்டதும் ,மீதி தொடரும். இடையில் மத்திய உணவுக்கு வந்து போவர்கள். வார விடுமுறையில் நேர அட்டவணை மாறும். மூன்று நாள் விடுப்பு வரும் போது.................
சிலர் உறவினர் வீடுக்குபோவார்கள்.
சிலர் வந்து பார்ப்பார்கள். இவை போர்க்காலத்துக்கு முன் ஒழுங்காக நடக்கும்போது இருந்தவை. இப்பொது சற்று மாற்றங்களுடன் நடக்கின்றது.
அண்மையில் இந்த நிலையத்துக்கு சேர்க்க பட்ட மிக சிறுவய்துடைய சிறுமிகள் தான் சூட்டி , சுதா . சுதாவுக்கு வயது ஐந்து சுட்டிக்கு மூன்று. இருவரும் தாய் தந்தையரை இழந்தவர்கள். அவர்களை ஆறு தல் படுத்தவே மிகப்பெரிய பாடாய் இருந்தது. சில வாரங்களே ஆகியிருந்தன. . இன்று உலகெங்கும் கொண்டாடப்படும் மார்கழி திருவிழாவை எதிர்பார்க்கும் , சிந்தனை. ஆம் அங்கும் குழந்தை இயேசுவின் பிறப்பை எதிர்பார்கிறார்கள். மீட்பர் பிறக்க வேண்டும் மக்களுக்கு அமைதி வாழ்வு கிட்ட வேண்டும். குண்டு மழை ....அழுகை ....இறப்பு ....அவலம் போன்ற வாழ்வில் இருந்து ம அதனால் ஏற்பட்ட தாக்கங்களில் இருந்தும் விடுதலை வேண்டி நிற்கிறார்கள். அன்றைய தினம் , சிறுமிகளின் , தலைமை கன்னி யாஸ்திரி (சிஸ்டர் )மரியா ..........சிறுமிகளை அழைத்து படிப்பறையில் அமர செய்தார். பிறக்க இருக்கும் குழந்தை ஏசு தினத்தில் எல்லோருக்கும்பரிசு வழங்க படும் உங்களுக்கு தேவையானவற்றை எழுதவும் என்று சொல்லியிருந்தார். சிலர் எழுத்து பிழைகளுடன் தங்கள் விருப்பங்க்களை எழுதினார்கள். ( ஈழத்தில் பள்ளி க்கு போகும் நிலை இழந்ததால் கல்வி சீர் குலைந்து இருந்தது , போதிய உணவு பற்றாக்குறை பள்ளியில் மயக்கம போடும் நிலை , இப்படி பல பிரச்சினைக்கு மத்தியில் உயிரைக்காக ஓடிக்கொண்டு இருந்தார்கள் )
சிஸ்டர் மரியா .........ஒவ்வொருவருடையவும் தாள்களை பார்த்தார்.எனக்கு பட்டுச்சட்டை வேண்டும்....சுவிங்கம் வேண்டும். சயிக்கில் வேண்டும் என் வீடுக்கு போகவேண்டும். அம்மாவை பார்க்க வேண்டும் ......இப்படி பல விருப்பங்கள் இருந்தன . சூட்டி சுதாவின் முறை வந்தது. சுதா ...விடுபட்ட சில எழுத்துக்களுடன் ..."எங்களுக்கு அம்மாவும் அப்பாவும் மீளவும் வேண்டும்" என் பொருள் பட எழுதியிருந்தாள் . சிஸ்டர் மரியாவின் கண்கள். பனித்தன . எந்த பொருளையும் கடையில் வாங்கலாம். செல் தாக்குதலில் காலமாகி விட்ட அவர்கள் பெற்றாரை எங்கே வாங்கு வார்......அந்த கன்னியர்கள் தாயாகவும் தந்தையாகவும் இருந்து முடிந்தவரை யில் வளர்கிறார்கள். ஆனாலும் .......
ஆசைபட்ட எல்லாத்தயும் காசு இருந்தால் வாங்கலாம் .........
அம்மாவை வாங்க முடியுமா? . என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது .
மீள் பதிவு ( காலத்துக்கு ஏற்ற கதை என்பதால்.)
18 comments:
மனதை நெகிழ வைத்தது.
மீண்டார் திரும்ப வருவாரோ? கண்ணீர் திரையிடச் செய்தது உங்கள் பதிவு. அச் சிறுமிகளுக்கு எங்கள் இரங்கல்கள்.
படிக்கும் போதே கண்கள் பனிக்கின்றன.
வார்த்தைகள் இல்லை.இந்தப் பிஞ்சுகள் வாழ்வில் அந்த இறைவனே தாயாயிருக்கட்டும் !
மனதை பாரமாக்கிவிட்டது
மனம் நெகிழும் கதை!
ஒருவேளை எதிர்காலத்தில் யாழ்பாணம் செல்ல வாய்த்தால் அந்த கன்னியர் மடத்தில் ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து கொள்ள ஆசை.
நெஞ்சை தொட்ட மண் வாசனை தரும் கதை நல்லா அனுபவிச்சி எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
மனசை கணக்க வைச்சுட்டீங்க :-(
எத்தனை இழப்புகள்?
இந்தக் குழந்தைகளது போல்
இனியொரு காலம்
இதுபோல எவருக்கும்
வேண்டவே வேண்டாம்.
மனதை நெகிழ வைத்தது.
அருமையானதும் அழுத்தமானதுமான கதை அக்கா...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?
சித்ரா , வெங்கட், கோவை டு தில்லி, ஹேமா, ஆமின, எஸ் கே , யாதவன் , ஜெய்லானி, உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
டாக் .எம் கே முருகானந்தர் ,
சே.குமார். மதி சுதா, ஜெர்ரி ஈசாநந்தா உங்கல்வரவுக்கும் பகிர்வுக்கும் நன்றி .
கனமான பதிவு! வருத்தமாக இருக்கிறது!
என்ன சொல்வது சகோதரி. இது போன்ற இடுகைகளை படிக்கவே என் மனைவி பயப்படுகிறாள். மனதில் தைரியம் இல்லை என்கிறாள்.
காலம் தான் எல்லாவற்றையும் மாற்றும்.
வருத்தமாக இருக்கிறது
மனதைத் தொடுகிறது!
Post a Comment