Followers

Saturday, December 18, 2010

லச்சுமி பேசறேன்..........

லச்சுமி  பேசறேன்...........


என் தாயக் நினைவுகளை மீட்டும் பதிவு........அதிகாலை எழு மணி இருக்கும்.  சென்றவாரம், ஒரு வெளி நாட்டு  தொலைபேசி அழைப்பு.  மறு முனயில் இதுவரை கேளாத குரல் சற்று வித்தியாசமாயும் இருந்தது........." அக்கா நான் லச்சுமி பேசறேன் நல்லாய் இருக்கீங்களா? எந்த லட்சுமி ..........? என் நினைவுகள் பின்னோக்கி பதினைந்து,  இருபது வருடங்களுக்கு முன் ....ஓ....ஒ........அவளா ?  இனம் தெரியாத மகிழ்ச்சி ...வியப்பு ஆச்சரியம் என என் நினைவுகள் தாயகம் நோக்கி பறந்ததன........
.
லக்ஸ்மி .........எனக்கு கையுத்வியாக் இருந்த பத்து வயதுப்பெண் .என் மாமா  மாமியாரும் சற்று வயதான்வர்கள். கூட்டுக் குடும்பம்.   மாமா மாமி மச்சாள் ( கணவனின் சகோதரி ) என ,  நான் திருமண மான  தொடக்கத்தில் என் மைத்துனி எனக்கு உதவியாக் இருந்தாள். அவரும் திருமணமாகி போக முறையே , என் நான்கு,  இரண்டு வயதுக் குழந்தைகளோடு விளையாட சற்று உதவியாக் இருக்க,  ஒரு சிறுமியை வைத்துக்கொண்டேன்.

என லக்ஷ்மியின் தாய் தந்தையர் மலையகத்தில் வாழ்ந்தவர்கள் ஆறு  பெண பிள்ளைகள் இவள் குடும்பத்தில் , இவள் நான்காவது பெண .நம்மூர் ஆசிரியர் ஒருவர் அங்கு ( மலையகத்தில்) படிப்பித்து கொண்டு இருந்தார் ஆவணி விடுமுறையில் இவளை அழைத்து வந்தார். ஓர் நேரம் வாயார  சாப்பிடவே கஷ்டம் .எழுத் படிக்க தெரியாது. நேர்மையானவள். எனக்கும் பிடித்து போகவே நானும் பிள்ளை போல் பராமரித்தேன் . வசதிகள் எல்லாம் கொடுத்து ( ஆடைவகைகள் சில் வாரங்களில் என்னுடன் நன்றாக  அணைந்து கொண்டாள். என் குழந்தைகளுக்கு  விளையாட்டு காட்டுவாள். அருகில் உள்ள கடையில் சிறு  பொருட்கள் வாங்கி வருவாள். என் குழந்தைகளைவிட்டு ஒரு மணி நேரம் வெளியிடத்தில் இருந்தால் அவர்கள் இயற்கை கடன் செய்தால் கழுவி பவுடர் எல்லாம்.போட்டு சுத்தமாக் வைத்திருப்பாள்ஓய்வு நேரங்களில் சில எழுத்துக்கள் எழுதவும் நூறுவரை சொல்லவும் மாதங்கள் நாட்கள் என்ன ஆறாம்வகுப்பு அறிவு வரை கற்றுக் கொடுத்தேன்.  . 

ஒரு நாள் தலை  நகரில் உள்ள உறவினருக்கு ஒரு தபால் எழுதி கவருக்கு , முத்திரைவாங்கி  ஒட்டி தபாற் பெட்டியில் போட சொல்லி அனுப்பி னேன் கடைகாரர் முத்திரை தீர்ந்துவிட்டது , என சொல்லவே அவள் காசையும் தபாற் கவரையும் பெட்டியுள்  போட்டுவிட்டு வந்து சொன்னாள். கந்தோரில் ஒட்டி அனுப்புவாங்க அக்கா . என்று ..... உரியவருக்கு சற்று தாமதமாக் , கட்டணம் செலுத்தி பெற்று கொண்டதாக் தகவல் வந்தது வேறு கதை. 
இப்படி சில குறும்பு வேலைகளும் பார்ப் பாள். .இறுதியாக் நாட்டுபிரச்சினையில் ..நான் கஷ்ட பட்டு  தலை  நகர் வந்தபோதும் என்னுடன் இருந்தாள்  ..பின்பு நான் வெளியேறவேண்டிய நிர்பந்தத்தில் வெளியேறும்  போது  தாய் தந்தையரை  அழைத்து பொறுப்பு க்கொடுத்தேன் . 
பின்பு அவள் திருமணமாகி நான்கு குழந்தைகளாம்.வவனியாவின் அருகே உள்ள ஒரு சிறு கிராமத்தில் ஓலைக் குடிசையில் வாழ்கி கிறாளாம் . வீடு ஒரே ஒழுக்காம். பாவம் கஷ்ட படுகிறாளாம். கணவனின் அன்றடகூலி ஒரு நேரம் சாப்பிட தான் காணும் என்றாள். எங்கள் ஊரவர் ஒருவரை வைத்திய வைத்திய சாலைக்கு  போது கண்டு இருக்கிறாள். அவரிடம் என் விபரம் அறிந்து ,இருக்கிறாள். மீண்டும் சில வருடங்களுக்கு முன் அவரது விலாசம் பெற்று , அவரை போய் சந்தித்து என் தொலைபேசி எண் பெற்று இருக்கிறாள். சென்றவாரம் பேசினாள்.

 காலங்கள் தான் எவ்வளவு வேகமாக் செல்கின்றன. பழைய நினைவுகள் எல்லாம் ரயில் பயணத்தில் ஓடும் மரங்களை போல ....ஓடிக்கொண்டே இருகின்றன. என் மகன்களுக்கு  அவளை நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை. என் நினைவு களை  மீட்டிய அந்த தொலைபேசி ஒரு இன்ப அதிர்ச்சி .....அவளுக்கு உதவ கொஞ்ச பணமாவது அனுப்ப வேண்டும் . பிறக்க இருக்கும் வருடம் அவர்களுக்கு நல் உதயமாகட்டும். 

15 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கைப் பதிவர்களின் கிரிக்கேட் போட்டி ஒரு பார்வை

ம.தி.சுதா said...

இன்னும் பல இருக்கிறத யாரிடம் சொல்லியழ....

சிவகுமாரன் said...

நெகிழ்ச்சியான பதிவு
எங்கள் ஊர்ப்பக்கம் இது போன்ற சிறுமிகளை வீட்டோடு வைத்துக்கொள்வார்கள். குட்டி என்று சொல்வார்கள்.( எத்தனை வயதானாலும் குட்டி தான் ) அவள் பராமரிக்கும் பிள்ளைகள் கூட குட்டி என்று தான் கூப்பிடுவார்கள். திருமண வயது வந்ததும் திருமணத்திற்கு பண உதவி செய்து அனுப்பிவிடுவார்கள். மீண்டும் இன்னொரு குட்டி வருவாள்.

Chitra said...

உங்கள் நினைவோடையில் இருந்து வந்த அருமையான பதிவு. புதிய வருடம், அனைவருக்கும் புது பொலிவை தரட்டும்!

எல் கே said...

நெகிழ வைத்துது

'பரிவை' சே.குமார் said...

நெகிழ்ச்சியான பதிவு.

Muruganandan M.K. said...

ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வில் எத்தனை உற்வுகள் வந்து மறைகின்றன. அதில் துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவும் மனம் நல்ல மனம்.

வினோ said...

உங்கள் மனிதத்திற்கு என் நன்றிகள் நிலாமதி. அவருக்கு எல்லா வளமும் கிடைக்கட்டும்.

ஹேமா said...

எங்களூரின் கதைகள் இன்னும் எத்தனை.நானும் பதிவு படித்துக் கொஞ்ச நேரம் ஊருக்குப் பறந்துபோய் வந்திட்டேன் !

ஈரோடு கதிர் said...

நெகிழ்ச்சியாக இருக்கிறது

அவசியம் உதவி செய்யுங்கள்!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நெகிழ்ச்சியான பதிவு...அக்கா

வெங்கட் நாகராஜ் said...

நெகிழவைத்த பகிர்வு.

Unknown said...

நெகிழ்ச்சியான பதிவு, நாங்களும் இது போன்ற உறவில்லா உறவுகள் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. உங்கள் எழுத்தின் தூண்டுதலுக்கு நன்றிகள்.

நிலாமதி said...

மதி சுதா, சிவகுமாரன், சித்ரா ,எல் கே ,டாக்.கே முருகானந்தன் ,வினோ, ஹேமா ,கதிர் ,பிரஸா, வெங்கட், பரத் பாரதி ,

யாவருக்கும் என் நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் வரவு என்னை மகிழ்விக்கும்.

தமிழ்பிரியன் said...

//அவள் காசையும் தபாற் கவரையும் பெட்டியுள் போட்டுவிட்டு வந்து சொன்னாள். கந்தோரில் ஒட்டி அனுப்புவாங்க அக்கா . என்று..//
பிடித்திருக்கிறது..

நெகிழ்ச்சியான பதிவு..