நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Tuesday, July 6, 2010

ஏழையின் சிரிப்பில் இறைவன் .ஐரோப்பிய நாடொன்றில் ...அந்த வதிவிடத்தின் மாடியில் ஒரு அறையில் அந்த முதியவர் வாழ்ந்து கொண்டு இருந்தார் ..இளைப்பாற்று ( பென்ஷன்)  சம்பளம் எடுப்பவர் போலும்........அவரது அறையின்  ஜன்னல் அருகே கதிரையில் உட்கார்ந்த படி போவோர் வருவோரை பார்த்துக் கொண்டிருப்பது .. பிடித்தமான  பொழுது போக்கு. மாதத்தில் ஒரு தடவை வங்கி போன்ற இடங்களுக்கு செல்லும்போது தனக்கு தேவையான் சமையல் பொருட்களை வாங்கி வருவார். தினசரி பத்திரிகை படிப்பார்.  அவை அவரது குடியிருப்பின் வாயிலுக்கு வந்து விழும். ........இப்பொது பனி கொட்டும் காலம். குடிமனைச்சொந்தகாரர் தான் அவர்களது நடை பாதையை சுத்தம் செய்ய வேண்டும். சிலர் தாங்களாகவே செய்வார்கள் சிலர் வாடகைக்கு கூலியாட்களை அமர்த்தி செய்வார்கள். அந்த வேலையை செய்யும் கூலியாள்  தினமும் வந்து பனி ( சினோ) தள்ளுவான். வீசுகின்ற காற்று குளிர் நிலையை மேலும் கூட்டும். அவனை கண்டவர் அவன் சினோ தள்ளி முடிய தன் அறைக்கு வரும்படி செய்து சூடான் தேநீர் பரிமாறினார். அந்த கூலியாளின் மலர்ச்சி.....மன மகிழ்வு , இவரை .மகிழ்வித்தது. விடைபெற்று சென்று விடான்.

மீண்டுமொரு நாள் ..அந்த நடை பாதையில் ஒரு கிழவி பழங்களை கடை பரப்பி வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். கூடை கூடையாக் வைத்திருப்பாள். அந்த வழியால் வந்த சிறுவன் ...அந்த கூடையில் இருந்து ஒரு ஆரஞ்சு  பழத்தை திருடி தின்றான் .. இதை அவள் கண்டு விட்டு அவனை பிடித்த்துநன்றாக்  அடித்தாள். இதைக்கண்ட முதியவர் கீழே  வந்து இன்னொரு ஆரஞ்சு ் பழத்தை எடுத்து அந்த சிறுவனை சாப்பிட சொன்னார்  இரு பழங்க்களுக்குமான் காசை தானே கொடுத்தார். சிறுவன் நன்றியோடு ... பெற்றுக்கொண்டான். சரியான் பசி போலும். கையில் காசு இல்லை திருடி இருக்கிறான்..........சந்தர்ப்பங்கள் தான் குற்றம் செய்ய வைக்கின்றன.

இன்னொரு முறை ...துணிகளை சலவை செய்பவள். இவரது வீடுக்கு வந்து ..சலவைத்துணிகளை எடுத்து சென்றாள். ...மீண்டும் மூன்றாம் நாள் கொண்டு வந்து கொடுத்து பணத்தை பெற்றாள். தான்  பட்டாதாரித்தரம்  வரையில் ..படித்திருப்பதாகவும் தனக்கு பொருத்தமான் வேலை கிடைக்கக் வில்லை  என்றும் ..கஷ்டத்தின் நிமித்தம் இந்த வேலையை செய்வதாகவும் சொன்னாள். அவள் கதையை கேட்டவர் ...வாரம் ஒரு முறை வந்து துணி எடுத்து செல்லும்படி சொன்னார். அவளுக்கு  வாடிக்கையாளர் கிடைத்த்தை எண்ணி ...மகிழ்ந்தாள்.

முதியவர் நன்றாக் புத்தங்கள் படிப்பார். அருகே இருந்த்  சமய சஞ்சிகையை ..திறந்த போது ...".ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காண்பாய்."............குளிரால் விறைத்த மனிதனுக்கு சூடான் தேநீர்.........பசியால் வாடிய சிறுவனுக்கு ஆரஞ்சு ....வேலையற்று சீவியம் நடத்தத் கக்ஷ்டபட்ட்வளுக்கு வேலை .....இவர்களின் சிரிப்பு  அவர் மனத்தில் நிழலாடியது ..... ..மறு நாள்  பேப்பர் காரன் கதவு தட்டியபோது ..கதவு தானாகவே திறந்து கொண்டது ....நெஞ்சில் பைபிள் புத்தகம் ...தரையில் மூக்கு  கண்ணாடி ...கைகளை விரித்தபடி ....மீளாத உறக்கத்தில்........போகும் வழிக்கு தேடிக்கொண்ட புண்ணியம். அவரது உடல் வேண்டியவர்களுக்கு அறிவிகக்பட்டு கிறிஸதவ  முறைப்படி அடக்கம் செய்ய பட்டது. ..இறுதி நாளில்  அவஸ்தை இல்லாத மரணம்.

ஒரு மனிதனின் வாழ்வு பற்றி கேள்விபட்ட் ஒரு கதை ...நீ மரணிக்கும்போது உன்னுடன் கூட வருவது வாழ்வில் நீ செய்யும் நல்ல செயல்களால் வரும் ,மன அமைதி.........

முற்றும். ..

11 comments:

ஹேமா said...

மனிதம் நிறைந்தவர்கள் வாழ்வும் வாழ்வின் முடிவும் அமைதியாகவே இருக்கும் நிலா.நம்புவோம் எல்லாம் எல்லாவற்றிற்குமாய் !

seemangani said...

நற்செயல்களை கடைபிடித்த அந்த கடைசிகாலத்து ஆத்தமாவின் நினைவுகளை தாங்கி வந்த கதை அருமை நிலாக்கா...
//திருடி தன்றான்//

இது போன்ற சிறு சிறு பிழைகளை கவனிக்கவும்...வாழ்வின் வகை சொல்லும் இது போல் நிறைய பகிரவும் நிலாக்கா...வாழ்த்துகள்....

rk guru said...

தெளிந்த எழுத்துகள் மூலம் வாழ்வின் பக்கங்களை எடுத்துரைத்தீர்கள். பாராட்டுக்கள்...!

abul bazar/அபுல் பசர் said...

நீ மரணிக்கும்போது உன்னுடன் கூட வருவது வாழ்வில் நீ செய்யும் நல்ல செயல்களால் வரும் ,மன அமைதி.........

அழகாக சொல்லி இருக்கிறீர்கள் சகோதரி.
வாழ்த்துக்கள்

GEETHA ACHAL said...

கடைசி வரிகள் உண்மையான உண்மை...நல்லா இருக்கின்றது...

இளம் தூயவன் said...

ஒரு மனிதனின் வாழ்வு பற்றி கேள்விபட்ட் ஒரு கதை ...நீ மரணிக்கும்போது உன்னுடன் கூட வருவது வாழ்வில் நீ செய்யும் நல்ல செயல்களால் வரும் ,மன அமைதி.........

நிச்சயமாக தான் செய்யும் நல்ல காரியங்கள் மட்டுமே, நம்மோடு வரும். ஒவ்வொருவரும் சிந்தித்து செயல்பட்டா உலகம் முழுவதும் பசி வேலைவாய்ப்பு பிரச்சினை மன நிம்மதி இப்படி பல விசயங்களுக்கு முற்று வைக்கலாம்.

சே.குமார் said...

இது போல் நிறைய பகிரவும் நிலா.


...வாழ்த்துகள்...

நிலாமதி said...

என் அன்புக்கும் நட்புக்குமுரிய ......ஹேமா ......சீமாங்கனி ..........ஆர் . கே. குரு ....அபுல் பசர் ....கீத்தா ஆச்சல் ......இளம் தூயவன் ...சே ..குமார் ..உங்களது ஊக்கம் தான் என்னை ஆக்குவிக்கிறது.
நன்றி ....இணைந்திருங்கள்

அம்பிகா said...

\\...நீ மரணிக்கும்போது உன்னுடன் கூட வருவது வாழ்வில் நீ செய்யும் நல்ல செயல்களால் வரும் ,மன அமைதி.........\\உண்மைதான் தோழி. நல்ல பகிர்வு

தமிழ் மதுரம் said...

எங்கள் சமூகத்தின் ஒவ்வோர் வீட்டுக் கதவுகளின் சாளரங்கள் வாயிலாக உங்கள் பார்வை தவழ்ந்து சென்று, இன்னொரு சந்ததிக்குப் பாடம் புகட்டும் வகையில் அசுத்தக் காற்றுக்களை வேரறுக்கும் வகையில் ‘யதார்த்தம் கலந்த’ வாழ்வியல் கோலங்களைப் பதிவிட்டு வருகின்றீர்கள்.
வாழ்த்துக்கள் முயற்சிக்கு.

‘தேவையான இடங்களில் குறியீட்டு முறையினைப் பயன்படுத்தி, இன்னும் கதைகளை மெருகூட்டி எழுதினால் மேலும் சிறப்பாக இருக்கும்.

தொடருங்கோ.
உண்மைக் கதை என்று சொல்வதால் மேலதிக விமர்சனங்களைத் தவிர்கிறேன்.

Anonymous said...

நல்ல கருத்துள்ள கதைகள். தொடர்ந்து எழுதுங்கள்.