Followers

Friday, January 14, 2011

நான் ஏன் பதிவெழுத வந்தேன்?

நான் ஏன்(எப்படி) பதிவெழுத வந்தேன்?

தம்பி கவிக் கிழவன் கேட்டுக் கொண்டதற்கிணங்க இதை தொடர்கிறேன்........
என்னை மாட்டி  விடுவதில் அவ்வளவு இன்பமா? ஏன் எழுதுகிறேன் என்பதை விட எப்படி இந்த ஆர்வம் வந்து என்று சிந்தித்தால் .............

தமிழ் மீது எனக்குள்ள் ஆர்வத்தை  வளர்த்துக்கொள்ள வேளையும்., வளமும் ,வசதி வாய்ப்பும் கிடைத்தது ., என்று சொல்லலாம். .என்று கூறலாம். பள்ளி வாழ்வின் பின்  கடிதம்  தவிர பத்திரிக்கை வாசிப்பதுடன்  நின்று விட்டது தமிழ் எழுத்தின்  ஆர்வம்கடின முயற்சிக்கு பின் கணனியில் தமில் l  வாசிகக் கற்றுக்கொண்டேன். பின்பு நான் ஆரம்பத்தில் இணைந்தத "யாழ் இணையம் " எனும் தளம் எனக்கு தமிழை எழுத வழி சொல்லித்தந்தது. அங்கு உறுப்பினராக இணைந்து தமிழ் எழுதவும் பங்கு பற்றவும்  கற்றுக் கொண்டேன். .அங்கு ஏற்பட்ட் சில தொடர்புகளால்  வலைபப்க்கத்தையும்  எட்டிபார்க்க் வசதி கிடைத்தது
.

அதன் பின் எனக்கு ஒரு தளத்தை  ஆரம்பிக்கக் வேண்டுமென ஆர்வம் வந்தது. அப்போதுன்என் நாட்டவர்  சந்துரு .சீமான் கனி ,,ஈரோடு கதிர் ..கிருத்திகன் எனும் நட்பு கள் கிடைத்தார்கள். பின்பு  வலைப்பக்கத்தின்  நட்பு வட்டம் , பதில் கருத்துபோடுதல்,,வந்தவழி ...எங்கிருந்துவருகிறார்கள் என்னும்   பகுதிகளையும் இணைக்க  கற்றுக் கொண்டேன்.காலபோக்கில் தமிளிஷ் ...இன்ட்லி என்னும் தளங்களுக்கும் சென்றேன். அங்கு மேலும் எனக்கு முடிந்த தகவல்களை , வேலன் ..சசி ..என்னும் கணனி விற்பன்னர்களிகளின் பதிவுகளை  வாசிப்பத்தன்  மூலம்  எனக்கு முடிந்ததை கற்றுக் கொண்டேன். கணனியில் இருந்தால் நேரம் போவதே தெரியாது ....எனக்கு மிகவும் பிடித்த் பொழுதுபோக்கு . நிறைய நட்புகளை பெற்றுக் கொண்டேன் . பதில் கருத்து வரும்போது என் உள்ளம் எனையறியாமல் சிரம் தாழ்த்தி வாழ்த்துச் சொல்லும். இந்தவகையில்  கிடைத்தவர் தான் கவிக்கிழவன். என் நாட்டவர் என்னும் ஈர்ப்பு ..அவர் மீது பற்று வைக்க  காரணமாய் இருந்தது . பின் சில பெண தோழிகள் ஹேமா சித்ரா கெள்சி ..தேனம்மை ..மாலிக்கா, பிரஸா ..  சிறீ அகிலா ,அருந்ததி அம்பிகா தமிழ் பிரியா ஆமினா  இன்னும் பலர் கிடைத்தனர். வாசிக்கும் எல்லாவற்றுக்கும் பதில் கருத்துபோட பிடிக்கும். எனக்கு தொடர்ந்து பதில் போடும்  எல்லோரையும்
 நினைத்துக்  கொள்கிறேன் .அவர்களில்,எல் கே ....சே குமார் ...பனித்துளி சங்கர்
..மதி சுதா ....ஆனந்தி ...சிவகுமாரன் ...தமிள்தொட்டம் யுஜின்.  உஜிலாதேவி ( ஐயா) ...........கோவை ௨ தில்லி ,அந்நியன் 2.....விசரன் ,ரமணி, வினோ, ஸ்ரீ அகிலா , வெங். நாகராஜ் அரசன் ,சிவகுமார், அருண் பிரகாஷ், கோமு, தமிழ் பிரியன் என் இன்னும் பலர் ( பெயர் உடனடியாக் நினைவில்   இல்லை) நட்பு வட்டத்தில்  இணைந்து ,172.....நட்புகளையும் ..126.......பதிவுகளையும் இட்டேன்.

என் ஆக்கத்துக்கு ஊக்கம் தரும் அனைவருக்கும் வாசகர்களுக்கும் இவ்வேளையில் என் நன்றியை தெரிவிக்கிறேன்

யாரும் தொடரவிரும்பும், பகிரவிரும்பும், அன்புள்ளங்கள் தொடரலாம். .

23 comments:

வினோ said...

நன்றிங்க நிலாமதி... ஒரு சுவையான அனுபவம் தான்...

பொங்கல் நல்வாழ்த்துக்கள் தோழி..

ம.தி.சுதா said...

தங்களின் அறிமுகம் எனக்கு எதேச்சையாகக் கிடைத்தது தான் அதன் பின் உங்கள் எழுத்துக்கள் என்னை கட்டிப் போட்டது நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்தக்கள்..

இனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள் அக்கா.

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..

அந்நியன் 2 said...

/சில பெண தோழிகள் ஹேமா சித்ரா கெள்சி ..தேனம்மை ..மாலிக்கா பிரஸா ..ஜெய்லானி சிறீ அகிலா ,அருந்ததி அம்பிகா தமிழ் பிரியா ஆமினா இன்னும் பலர் கிடைத்தனர்.

!!! என்னது ஜெய்லானி பெண் பதிவரா !!!

நல்லா எழுதிருக்கியே மேடம் கணினியில் தமிழைக் கற்றுக்கொண்டு இந்த போடு போட்ரியலே பள்ளியில் கற்றிருந்தால் சொல்லவா வேணும்.உண்மையில் அச்சு கோர்ப்பு நன்றாக உள்ளது.

நான் ஏன் பதிவெழுத வந்தேன்?

எல்லாம் ஒரு விளம்பரத்திர்க்குதான் மேடம்,நானும் உங்களை மாதுரித்தான் முதலில் பின்னூட்டம்தான் எழுதிக் கொண்டிருந்தேன் அவர்கள் பதிவு இருபது வரிகள் என்றால் எனது வரிகள் அறுபதா இருக்கும் சில நண்பர்கள் கேலியாக அந்நியன் பதிவு போடுகிறாரா இல்லை பின்னூட்டம் போடுகிறாரா என்று கேட்டார்கள்,இப்போ பதிவும் போடறேன் பின்னூட்டமும் போடுகிறேன்.

இந்த வலை உலகம் நல்ல நண்பர்களை பெற்றுத் தருவதால் மனதிற்கு சந்தோசமா இருக்கு அந்த வகையில் நீங்களும் கொடுத்து வைத்தவர்கள் மேடம்.

ஆயிரம் வாசகர்களைக் கொண்டு உங்கள் தளம் வீர நடைப் போட வாழ்த்துகிறேன்.

ஆமினா said...

நீங்க பதிவெழுத வந்த வரலாறு படிச்சு மெய் சிலிர்த்தேன்

ஜெய்லானி said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !! :-)

நட்பில் நானுமா தேங்ஸ் சகோஸ்..!!

தமிழ்த்தோட்டம் said...

நிலாமதி அக்கா உங்கள் அனுபவ பகிர்வு அருமை... உங்கள் ஆர்வம் தான் உங்களை இப்படி தலை நிமிர்ந்து வைத்திருக்கிறது...

தொடர்ந்து பல பதிவுகளை வெளியிடுங்கள்..

இன்னும் பல விருதுகளையும் வெல்ல நமது தமிழ்த்தோட்டம் சார்ப்பாக வாழ்த்துக்கள்

Sriakila said...

'நிலாமதி' இந்தத் தமிழ்ப்பெயர் தான் முதலில் என்னை உங்கள் பதிவின் பக்கம் ஈர்த்தது. உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது.

இந்தப்பதிவின் மூலம் உங்கள் அனுபவங்களைத் தெரிந்துகொண்டோம். நண்பர்கள் லிஸ்டில் என்னையும் சேர்த்ததற்கு மிக்க நன்றி நிலாமதி.

மேலும் வளர வாழ்த்துக்கள்! இனியப் பொங்கல் நல்வாழ்த்துக்களும்..

நிலாமதி said...

என் பதிவு கண்டுகருத்துப் பகிர்ந்த @வினோ ..@ ம.தி.சுதா @ அந்நியன் 2@ஆமினா@ஜெய்லானி @ தமிழ் தோட்டம்
@ ஸ்ரீ அகிலா யாவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

'பரிவை' சே.குமார் said...

நன்றிங்க நிலா...

ஒரு சுவையான அனுபவம்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உங்கள் அனுபவ பகிர்வு அருமை..
பொங்கல் வாழ்த்துக்கள் நிலாமதிக்கா...

சிவகுமாரன் said...

உங்கள் பதிவுலக வருகை என்னைப் போன்றோரை ஊக்குவிக்கவும் , நல்ல நட்பை பெறவும் தான் சகோதரி.

Muruganandan M.K. said...

வலைப் பதிவு என்பது சந்தோசமான விடயம்தானே. உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தமை சுவையாக இருக்கிறது.

தூயவனின் அடிமை said...

//தமிழ் மீது எனக்குள்ள் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேளையும்., வளமும் ,வசதி வாய்ப்பும் கிடைத்தது ., //

சுவையான அனுபவம் தான்...
வாழ்த்துக்கள்.

யோ வொய்ஸ் (யோகா) said...

வாழ்த்துக்கள் அக்கா

திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்) said...

அருமையான் தகவல் நன்றி

Unknown said...

நல்ல அனுபவ பகிர்வு.. வலையுலகில் தொடர்ந்து சாதிக்க வாழ்த்துக்கள்..

Kousalya Raj said...

உங்களின் நட்பு வட்டத்தில் நானும் இருக்கிறேன் என்பதில் பெருமிதமாக இருக்கிறது அக்கா.

அற்புத நட்பை கொடுத்த பதிவுலகத்தை அருமையா நினைவு கூர்ந்ததுக்கு வாழ்த்துக்கள்.

என் பெயரையும் இணைத்ததிர்க்கு நன்றி அக்கா

Chitra said...

பொங்கல் லீவில் போனப்போ, இந்த பதிவு மிஸ் பண்ணி இருந்து இருக்கேன். எப்படி இருக்கீங்க? வாழ்த்துக்கள்!

கவி அழகன் said...

தானும் எழுதி மற்றவர்கள் எழுதுவதையும் ஊக்கபடுத்துவதில் நீங்கள் ஒரு அம்மா போன்றவர்

arasan said...

அக்கா உங்களின் பதிவு அருமை ....

உங்களின் இணைய அறிமுகத்தை அற்புதமாய் சொல்லி இருக்கீங்க ....

இன்னும் நிறைய நட்புகளை பெற்று பதிவு சிறக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

r.v.saravanan said...

சுவையான அனுபவம் நிலாமதி.

Thoduvanam said...

வாழ்த்துக்கள்..

சீமான்கனி said...

நினைவுகள் பின்னோக்கி போகுது நிலாக்கா....