Followers

Monday, January 24, 2011

இன்னும் கொஞ்ச நேரம்.


இன்னும் கொஞ்ச நேரம். மம்மி .............

அதிகாலை  சூரியன் இன்னமும் தென படவில்லை ......கோகிலா அலாரத்தின் ஓசைக்கு எழுந்து ...காலைக்  கடன் முடித்து  அடுக் க ளை சென்று காப்பி தயாரித்தாள் ..சரவணனும் எழுந்து அவனும குளிக்கும்  கடமையை செய்து கொண்டு இருந்தான்.சரவணனுக்கு காப்பி தயாராக் மேசையில் காத்திருந்த்து . அவசர அவசரமாக் குளிர் பதனப்பெட்டியிலிரவே போட்டுவைத்திருந்த  சாப்பாட்டு பெட்டிகளை அவனுக்கும் தன்க்குமாக் கைப் பையில் அடக்கி கொண்டாள். இனி குட்டிக் கண்ணன் கோபியை எழுப்பவேண்டும் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருக்கிறான். பாவம் குழந்தை இந்தக் குளிர் நாட்டுக்கு வந்து அவனும் எங்களுடன்.......சேர்ந்தே ஓடுகிறான்.........
....

கோகிலா சரணவன் குடும்பம் வாழ்வது கனடா தேசத்தில் ..கடந்த வாரம் நன்றாக் கொட்டிய பனிக்குளிரில் ..எல்லோரையும் ஒருவாட்டு வாடுகிறது. பூச்சியத்துக்கு கீழே இருபதெட்டு காட்டுகிறது (-28 )..கண்ணனுக்கு மூன்று வயது ...ஒருவருடம்  கண்ணன் பிறந்த பின் மகப் பேற்று விடுப்பில் நின்றவள் விடுப்பு முடிந்து வேலைக்கு செல்ல எண்ணும்  போது குழந்தை ஒரு இன்பசுமையாகிறது.    அப்போது  தான்,தாய் நாட்டில் இருந்துவந்த மாதுரி ..குழந்தையை கவனிப்பதாகக்  கை கொடுத்தாள்.  அவள் வந்து இவ்ர்கள்வீடில் நிற்பாள் . அல்லது தன் வீடில் கொண்டுவந்து வைத்துக்  கொள்வாள். மாதுரி வீட்டு தொடர் மாடி, அருகில் இருந்த்த்மையால் கோகிலாவுக்கு அது இடஞ்சலாஇருக்க வில்லை.   ஒரு வருடம்  அவள் குழந்தையை , மாதுரி பார்த்தாள் . இப்பொது மாதுரியை  வேலைக்கு கூப்பிட்டு  இருக்கிறார்கள்.  எனவே தனியார் நடத்தும் காப்பகம் , ( Daycare   ) இல் மகனை அனுமதி பெற்று ...சேர்த்து விடாள். ......நான்கு வயது முடிவில் வரும் புரட்டாசியில்  அவனை பள்ளியில் சேர்த்து  விடலாம்...............வெளி நாடுகளில் வீட்டில்  துனை இல்லாதவர்களுக்கு குழந்தைக் காப்பகங்கள் தான் கை கொடுக்கின்றன. .

வெளி நாடுகளில் இருவரும்  வேலைக்கு செல்ல வேண்டும் அல்லது ஒருவர் இருவேலை செய்யவேண்டும்......அதற்கும் முதல் வேலைக்கு ஏற்ற மாதிரி மற்றைய பகுதி நேர வேலை கிடைக்கக் வேண்டும்..........கோகிலாவும் அங்கு ஒரளவு படித்து இருந்ததால் நிரந்தர வேலையில் இருந்தாள். .....நேரம் காற்றாய் பறக்கிறது . எழு மணிக்கு காபகத்தில்விடால் தான் இவளை அவளிடத்தில் வேலைக்கு இறக்கி விட்டு சரவணன் தன் பணிக்கு செல்ல முடியும்.....பம்பரமாய் சுழன்று தன் காரியங்க்களை பார்த்தவள்.கன்னாவை எழுப்பினாள் ....அவனோ இன்னும் கொஞ்ச நேரம் மம்மி .....( five more மினிட்ஸ் ..).என்று மறுபக்கம் போர்வையை இழுத்துப்போர்த்தி னான் .....வார இறுதிகளில் எல்லோருக்கும் முன்பே எழுத்து ....இவர்களை தூங்கவிடாமல் நடுவில்வந்து படுத்துக் கொள்வான்..........என்ன செய்வது ..படுக்கை யில்வைத்தே இரவு ஆடைகளை களைந்து  அணிவித்தாள் . பின் குளியல்  அறைக்கு  சென்று காலைக்கடன் முடித்து ..அவனது பானம் சிறு உணவு என்பன் எடுத்துவைத்து ..வாகன் தரிப்பிடம் சென்றாள்.  அங்கு சரவணன் வாகனத்தை  சூடாக்கி ....காத்துக் கொண்டு இருந்தான்.....சிலருக்கு வெளி நாடு சொர்க்கம்போல ,எண்ண த்தோன்றும்....குளிர்  பனிக் காலங்களில் வாழ்வே வெறுக்கும்........

.உலகில் ஒவ்வொரு  நாட்டிலும் ஒவ்வொருவகை கஷ்டம்.........குழந்தை தாயின் உதரம் நின்று உதைத்து வெளி வரும் நாளில் இருந்து கல்லறை போகும் வரை வாழ்வு ஒரே எதிர் நீச்சலாகிறது ......

17 comments:

எல் கே said...

கடைசி வரிகள் நிதர்சனம்

Chitra said...

வீட்டுக்கு வீடு வாசப்படி!

Yaathoramani.blogspot.com said...

.சிலருடைய படைப்புகளை வாசிக்கையிலேயே
உணர்ந்து உடன் செல்லமுடிகிறது.
அதுவும் வார்த்தைகளுக்கென மெனக்கெடாமல்
இயல்பாகச் சொல்லிச் செல்லும்போது....
தொடர்ந்து பின் வருகிறேன்.
தொடர்ந்து முன் செல்ல வாழ்த்துக்கள்

கவி அழகன் said...

என்ன செய்வது பாவம் பிள்ளைகள்

'பரிவை' சே.குமார் said...

வெளிநாட்டு வாழ்க்கையில் சொர்க்கம் தெரிவதில்லை சகோதரி...
சோகம்தான் தொக்கி நிற்கிறது.
நல்ல கதை.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வுக்கு நன்றி.

கோலா பூரி. said...

வெளினாட்டு வாழ்க்கையில் நாம் இழப்பது மிக அதிகம்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

////ஒரு குழந்தை தாயின் உதரம் நின்று உதைத்து வெளி வரும் நாளில் இருந்து கல்லறை போகும் வரை வாழ்வு ஒரே எதிர் நீச்சலாகிறது////

நிதர்சன உண்மை... அருமையான பதிவு அக்கா...

தூயவனின் அடிமை said...

//சிலருக்கு வெளி நாடு சொர்க்கம்போல ,எண்ண த்தோன்றும்....குளிர் பனிக் காலங்களில் வாழ்வே வெறுக்கும்//

நல்ல பகிர்வு.

நிலாமதி said...

என் தளம் வந்து கருத்துப் பகிர்ந்த எல் கே .......சித்ரா .......ரமணி ஐயா........யாதவன்........சே குமார்........வெங். நாகராஜ் ..
.....கோமு...........பிரஸா...........இளம் தூயவன் ..........உங்களுக்கு என் நன்றிகள்

சிவகுமாரன் said...

\\உதைத்து வெளி வரும் நாளில் இருந்து கல்லறை போகும் வரை வாழ்வு ஒரே எதிர் நீச்சலாகிறது ..//

உண்மை சகோதரி.
வெளிநாடு
சம்பாதிக்கப் போனவர்களுக்கு சொர்க்கம்.
பிழைக்கப் போனவர்களுக்கு நரகம்.

ஹேமா said...

அப்படியே நிலைமையைச் சொல்லி முடித்திருக்கிறீர்கள்.இதைத்தான் உணர்ந்து அனுபவிக்கிறது என்று சொல்வார்கள் !

தமிழ்த்தோட்டம் said...

குழந்தைகளின் நிலமை என்னை வேதனை அடிய செய்தது

arasan said...

அக்கா பதிவு அசத்தல் ....
ஒவ்வொரு வரிகளிலும் உணர்வு பிரதி பலிக்கிறது ..
வாழ்த்துக்கள் .....

அந்நியன் 2 said...

எல்லோரும் கருத்து சொல்லி முடித்து விட்டார்கள் இனி நான் சொல்லுவதற்கு என்ன இருக்கு ?
எல்லாமே சூப்பர் வாழ்த்துக்கள் சகோ.....

கா.வீரா said...

நல்ல படைப்பு எப்போதாவது வரும் .இதைப்போல

சீமான்கனி said...

நிலாக்கா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க போல....வழக்கம் போல சொல்லாடல் எதார்த்தம்...அருமை வாழ்த்துகள்....