நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Wednesday, February 2, 2011

உன்னைத் தவிர என்னவேண்டும் .........உன்னைத் தவிர என்ன  வேண்டும் ...........

அன்புக்கும் ஆசைக்கும்  பரிசாய்
வந்துதித்த வெண்ணிலவின்
கண்களும் கவிபேசி
காதலும் உருவாகி
சுப நாள் ஒரு திருநாளிலே
மணமகன் நீயாக்
மங்கையிவள் கைப்பிடித்து
இன்புற்று வாழ்கையில்

 ஆணோன்றும் பெண னோன்றும்
ஆசைக்கு ஒன்றும் ஆஸ்திக்கு
ஒன்றுமாய்  பெற்று
இன்புற்று  வாழ்கையில்
மாரடைப்பில் தந்தையை
கொண்டு சென்ற காலன்
தாயையும் நோயிலாழ்த்தினான்.
விதி வந்த வேளை
அன்னை அவள்  சென்றுவிட
.
ஈர்பத்து வருடங்கள்  உருண்டோடி
.மகவுகளும் கரை சேர்ந்து
இன்புற்று இல்லறம் நோக்கி
 மகவுகளும் சென்றுவிட
தாயாய் தாரமாய்
மங்கையவள் துணை  நிற்க
வானமாய் அவன் காத்து நிற்க
வருடங்கள் மூபத்து
சொல்லாமல்  ஓடியது .

அன்னை வளர்ப்பில் இருபதும்
அத்தான் அணைப்பில் முப்பதுமாய்
ஐ பத்து வருடங் கள் தளம்பாமல்
தன்னாலே சென்றது
தாய் தந்தையிலும்  மேலாய் எனை
கண் போல் காத்து கரிசனையாய்
உணவோடு உடை தந்து  துணை இருந்து
அன்போடு  ஆதரவும் பரிவு பாசம் தந்தாய்

உயிராய் எனை வலம் வந்தவனே
உனக்கும் ஆண்டுகள் ஆறு பத்து ஆயிற்று
வேறென்ன வேண்டும் இப் புவியில்
.உனைபிரிந்து  இவ்வுலகில்
உயிர் தரியேன் ஒரு நாளும்
உன்னோடு இணைந்தே வர
வரம் தரவேண்டும்
உலகாளும் இறைவா
............


திருத்தம் ..............உடன் கடடையேற  என்பது இணைந்தே  வர  என் திருத்தப் பட்டது  

22 comments:

Chitra said...

very nice.

இளம் தூயவன் said...

கவிதை அருமையாக உள்ளது சகோதரி, ஆனால் கடைசி வரி என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நிலாமதி said...

உன்னோடு உடன் கட்டையேறி வர
ஒரே ஒரு வரம் தவறாது
தரவேண்டும் உலகாளும் இறைவா
/// பெரும்பாலானோரின் ஆசை இதுதான், ஆனால் நடக்குமா?.... அதுக்கெல்லாம் கொடுப்பினையும் வேண்டும்.

நிலாமதி said...

சித்ரா ...............இளம் தூயவன் கருத்து பகிர்வுக்கு நன்றி

Ramani said...

உணர்வுப் பூர்ணமான பதிவு
ரசித்துப் படித்தேன்
இறுதிக் கருத்துதான்...
கொஞ்சம் மென்மையாக
இணைந்தே என்பதுபோல்
இருந்திருக்கலாமோ ?
வாழ்த்துக்கள்

நிலாமதி said...

மிக்க நன்றி ரமணி ஐயா...இணைந்தே வர என்பது தான் தற்போதைய காலத்துக்கு பொருத்தமாய் இருக்கும்.
சிறு குழந்தை நான் வலை உலகில் அவ்வப்போது உங்கள் மென்மையான கருத்து என்னை பண்படுத்தும். ஏர்( கலப்பை ..).
தங்கள் ஊக்கம் என்னை மேலும் ஆக்குவிக்கும்

சங்கவி said...

//அன்னை வளர்ப்பில் இருபதும்
அத்தான் அணைப்பில் முப்பதுமாய்
ஐ பத்து வருடங் கள் தளம்பாமல்
தன்னாலே சென்றது//

உணர்வுப்பூர்வமான வரிகள்..

தங்கம்பழனி said...

//அன்புக்கும் ஆசைக்கும் பரிசாய்
வந்துதித்த வெண்ணிலவின்
கண்களும் கவிபேசி
காதலும் உருவாகி
சுப நாள் ஒரு திருநாளிலே
மணமகன் நீயாக்
மங்கையிவள் கைப்பிடித்து
இன்புற்று வாழ்கையில்//

ஆஹா..ஆஹா.. ஆஹாகாஹா... அற்புதம்..!

சே.குமார் said...

கவிதை அருமை சகோதரி.

MANO நாஞ்சில் மனோ said...

அருமையாக இருக்கு மக்கா..................

வைகறை said...

இதுதான் காதலின் சாபக்கேடு!!

நிலாமதி said...

தங்கம் பழனி .............நாஞ்சில் மனோ ......சங்கவி ..........சே குமார் உங்கள் வரவுக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி

தமிழ்த்தோட்டம் said...

வரிகள் அனைத்துமே உணர்வுகளை சுமந்து நிற்கிறது..
////அன்னை வளர்ப்பில் இருபதும்
அத்தான் அணைப்பில் முப்பதுமாய்
ஐ பத்து வருடங் கள் தளம்பாமல்
தன்னாலே சென்றது//

Mohan said...

அனைத்து வரிகளும் அருமை...நெஞ்சைத் தொடும் கவிதை!
வாழ்க வளமுடன்!

அன்புடன் மலிக்கா said...

தாங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்..
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_05.html

Sriakila said...

அன்பு பொதிந்த வரிகள்!

ஆயிஷா said...

அருமையாக இருக்கு.

Thanglish Payan said...

Nice poem..

சீமான்கனி said...

அழகான கவிதை திருத்தம் கொஞ்சம் வருத்தம்...வாழ்த்துகள் அக்கா...

சிவகுமாரன் said...

இறுதி வரை இன்பமாய் வாழ , வாழ்த்த வயதில்லை இறையை வேண்டுகிறேன்

யாதவன் said...

கவிதை அருமையாக உள்ளது

இராஜராஜேஸ்வரி said...

உன்னோடு இணைந்தே வர
வரம் தரவேண்டும்
ஒவ்வொரு பெண்ணின் உள்ளத்த்விப்பு!!