நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Wednesday, March 9, 2011

தோள் கொடுப்பான் தோழன் ........

தோள் கொடுப்பான் தோழன் ..........

ராஜேந்திரன் வழக்கமாக் நண்பர்கள் கூடும் அந்த மதகின் மேல் உட்கார்ந்து யோசனையில் ஆழந்து இருந்தான். மாலை  எழு மணியாகியும் சூரியன் மறைய நேரம் இருந்தது. சூரிய  கதிர்கள் சற்று கண்களை கூச்ச மடைய  செய்யவே அருகில் இருந்த தேநீர்க்கடையில் சென்று தேநீருக்கு சொல்லிவிட்டு கடைக் காரப் பையன் வரவுக்காய் காத்திருந்தான். 

தாயார் கமலா அம்மாள் மாலை உணவு வேளையாகியும் மகன் வரவுக்காய்   காத்திருந்தாள். கணவன் அப்போது  தான் வேலை முடிந்து வந்து கை கால் கழுவும் ஒசைக்கேட்டுகொண்டு இருந்தது. மாலதி சாமி விளக்கு ஏற்றி வழிபட்டுக்கொண்டு இருந்தாள். .கடவுளே இந்த வரனாவது கை கூடவேண்டும். பாடசாலை யிலும் சக ஆசிரியைகளின் ஏளனப் பார்வை . வயது முப்பதாக் போகிற எனக்கு ஒரு வழி காட்டு . என் வேண்டிக்கொண்டு , தந்தையின் சாப்பாட்டு பெட்டியை கழுவி வர ஆயத்தமானாள். சேகரம் ஐயா கடையில் வேலை பார்க்கும் சுந்தரம் மிகவும் கட்டுபாடானவ்ர்.  மது புகை போன்ற எந்த  கெட்ட பழக்கங்களும் இல்லாதவர் .
.இடையில் வெற்றிலை போடுவார்.

ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகளை பெற்று வளர்த்து தனது வல்லமைக்கு ஏற்ப வேண்டிய கல்வியை கொடுத்து ஆளாக்கி விட்டவர். மூத்தவள் பெண் அந்த ஊரின் கல்லூரியில் ஆசிரியையாக்கி பார்த்தவர். இளையவன் ராஜேந்திரனை மிகுந்த சிரமத்தின் மத்தியில் கட்டிட நிர்மாணத்துறை அதிகாரியாக்கினார் .சுந்தரத்தின் க டின் உழைப்பு இரு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கிய  தோடு ஒரு கல்வீட்டுக்கும் சொந்தக்காரர் ஆகி இருந்தார். சாப்பிட உட்கார்ந்தவர் மகன் ராசேந்திரன் பற்றிக் கேட்டார். சாப்பிட்டு முடித்தவர். உடல் அசதியால், சற்று சாய் நாற்காலியில்அமர்ந்தது , சென்ற வாரம் வந்த வரனைப் பற்றிய  யோசனையில் ஆழ்ந்தார். 

என் மகளுக்கு இந்த வரனாவது கை கூட வேண்டும். வீடும் ரொக்க்முமாய் கேட்கிறார்களே ....வீட்டை சீவிய உரித்து  வைத்து கொடுத்து விடலாம். நகை நட்டு கொஞ்சம் கமலா சேகரித்து  வைத்திருக்கிறாள் .செலவுக்கு கடனோ உடனோ வாங்கி சமாளித்து விடலாம்.  ரொக்கத்து க்கு என்ன செய்வது . பொருட்கள் விற்கும் விலைவாசியில் நாளாந்த சீவியமே  அப்படியும் இப்படியுமாய் போகிறது . என்று ஆழ்ந்த் சிந்தையில் கண்ண்யர்ந்தார் . 

மதகின் மீதிருந்த இந்திரன். தேநீர் பருகியவாறே ..இருக்கையில் ..தூரத்தே மோட்டார் சைக்கிளில்  .கறுப்புக் கண்ணாடியுடன் வருபவர்  இவனை நோக்கி வேகத்தை மெதுவாககினார். எதோ வழி கேட்பவர் போலும் என்று எண்ணியவன்..சற்று அருகே வந்ததும் ..அட இவன் நம்ம கதிரேசன் போல் இருகிறதே என் எண்ணினான். அதற்கிடையில் ..மாப்பிள ....என்னடா யோசினை ... ..........என்றான். அட டா ...நாம் கதிரேசு .....எப்படா வந்தாய் மிடில் ஈஸ்ட் ( மத்திய கிழக்கில் ) இருந்து ..சென்ற வாரம் தானடா ..என்று பலதும்பத்தும் கதைத்தவர்கள் , . இறுதியில் சகோதரியின் கலியான் கதையில்  வந்து நின்றது . கதிரேசுவுக்கு மூன்று பெண் சகோதரிகள்.  மூத்த  ஆண்பிள்ளியான் இவனை கடன்  உடன் எல்லாம் பட்டு மத்திய கிழக்குக்கு அனுப்பிய தந்தை ..இரு வருடத்தில்  கடனும் முடிய , தன் கடமை  முடிந்த்து என மேலுலகம் சென்று விடார்.  .நண்பர்கள் பேசிய வாறே ர ஜெந்திரனை வீடில் இறக்கி விட்டவன். உள்ளே வரும்படி அழைத்தும் மீண்டும் வருகிறேன் என் கதிரேசு சென்றுவிடான்.

 மறு நாள் காலை ராஜேந்திரன் வேலைக்கு புறப்ட்டுக் கொண்டு இருந்தான். மாலாவும் தந்தையும் பஸ் க்கு  சென்று விட்டனர். வாயிலில் மோட்டார் வண்டிச்சத்தம் ....கதிரேசு வந்திருந்தான் ....புறபடுகிறாயா மாப்பிள்ளை ..இந்தா இதைக்கொண்டு உள்ளே வை என்று பணம் நிரம்பிய பார்சல் ஒன்றை நீட்டினான்.  என்னடா இது .....நீ புறப்பட்டு . நான் அம்மாவுடன் பேசுகிறேன். என்றான்.  கமலாம்மா அடுக்களையில் தேநீருக்கு தயார் ஆனாள். நேரே சென்று சாமி அறையில் வைத்தவன். அதில் பணம் பத்து லட்சம் இருந்தது
 இன்று விடுப்பு எடுக்கவா என்று கேட்டான்  போக மனமின்றி .. மாலையில் பேசலாம் டா .  நீ சென்று வா என்று விடை கொடுத்தான் நண்பன்.

கமலாம்மாள் பேசிக் கொண்டு இருந்தாள் .தன மகள் நல்ல காரியம் ந்டை பெற வேண்டுமேன்று மிகவும் விரும்பினாள். தேநீரை பருகி முடித்தும்  கவலைப் படாதீர்கள்  அம்மா .எல்லாம் சுபமே நடக்கும் என் விடை பெற்றான்.  மறு நாள் மாப்பிள்ளை வீடாருக்கு சேதி பறந்தது. அடுத்த மாதம்  வரும் நல்ல நாளில் மண மக்கள் திருமணம் நடை பெற  வேண்டிய ஆயத்தங் களை  ஆரம்பிக்கும்படி .

மாலையில் நண்பர்கள் மீண்டும் சந்தித்தார்கள். கதிரேசு ...என்று கண் கலங்கினான்.........இத்தகைய சில்  இன்பத்திலும் துன்பத்திலும் உதவும் நட்புகளால் தான் பல் பெண்களின் வாழ்வு வளம் பெறுகிறது . உண்மையான நட்பை ஆபத்தில் அறியலாம. .

 .

13 comments:

தோழி பிரஷா said...

"இன்பத்திலும் துன்பத்திலும் உதவும் நட்புகளால் தான் பல் பெண்களின் வாழ்வு வளம் பெறுகிறது . உண்மையான நட்பை ஆபத்தில் அறியலாம்"

ஆம் அக்கா.
நல்ல நட்பை பெறுவது கடினம்
பெற்றுவிட்டால் பெறுவது இன்பம்.
எனது வாழ்வில் நட்பால் நான் அனுபவித்தது நன்மையே அதிகம்.

Ramani said...

மிக அருமையான யதார்த்தமான கதை
கதை சொல்லிப்போகும் அழகு
நல்ல மனிதத் தன்மையை
அழுத்தமாகச் சொல்லிப்போகும் கரு
மொத்தத்தில் மிகச் சிறந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Sriakila said...

nice one!

தமிழ் உதயம் said...

நட்பு எப்போதும் உயர்வானது தான்.

சீமான்கனி said...

நட்பை பற்றி உருக்கமான கதை அருமை நிலாக்கா....

Chitra said...

good one....


/////உண்மையான நட்பை ஆபத்தில் அறியலாம. ////

...... rightly said! super!.

♔ம.தி.சுதா♔ said...

ஆம் அக்கா உறவை விட நட்பு வலியது சிலரை உறவாக்காமல் நட்பாகவே வைத்திருக்கலாம்....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

தமிழ்த்தோட்டம் said...

உண்மைத்தான் அக்கா, நல்ல நட்பை ஆபத்தில் மட்டுமே அறிந்து கோள்ள முடியும்.. ஆனால் அத்தகைய நல்ல நட்பை பெறுவது கடினமே... நமக்குள் பல நல்ல நட்புகள் இருக்கலாம் ஆனால் உண்மையான நல்ல நட்பு எது என்று நமது ஆபத்து நேரத்தில் மட்டுமே கண்டு கொள்ள முடியும்...

அருமையான கதை அக்கா... ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.. எழுத்து நடை அருமை,, தொடர்ங்கள் உங்கள் பகிர்வுகளை

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

சே.குமார் said...

யதார்த்தமான கதை.

r.v.saravanan said...

யதார்த்தமான கதை

வாழ்த்துக்கள்

நிலாமதி said...

என் தளம் வந்து கருத்துப் பகிர்ந்த தோழி பிரஷா ........ரமணி ஐயா .சிறீ அகிலா , தமிழ் உதயம், சீமான் கனி , சித்ரா , மதி சுதா, தமிழ் தோட்டம் ,யுஜின் ,சே. குமார் . ஆர் சரவணன். ஆகியோருக்கு என் நன்றிகள்.

raji said...

நெஞ்சத்து அகநக நட்பது நட்பு

கதை நன்று

Dr.எம்.கே.முருகானந்தன் said...

யதார்த்தமாக நட்பின்
சிறப்பை உணர்த்தும் படைப்பாக இருக்கிறது.