தோற்றுப் போனவள்.
காமாட்சி .......கனகர் தம்பதிகளுக்கு இரு பெண பிள்ளைகள். மூத்தவள் படிப்பு முடிந்ததும் , கனகர் வேலைக்கு விட மறுத்து விடார். இளையவள் தந்தையுடன் போராடி மேற்படிப்புக்காக் . யுனிவேர்சிட்டியில் படித்து கொண்டு இருந்தாள். கனகர் அந்த ஊரிலே பெரும் அரிசி ஆலைக்கு சொந்தக் காரர். முப்பது மேற்பட்ட் பணியாளர்களை கொண்டு தொழிலை நடத்தி வந்தார். மாலையில் நிர்வாகத்தின் கணக்கு வழக்குகளை கவனிக்க் தங்கை மகன் , வாகீசனை துணைக்கு அழைத்தார் . அவனும் மாமன் மீதுள்ள் மரியதை யால் ஏற்றுக்கொண்டான். .
முன்பு அவன் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வேலை பார்த்தவன். அவனது கம்பனி , ஒப்பந்தம் முடிந்ததால் , ஊருக்கு வந்து வேறு நிறுவனத்தில் இணைய காத்திருப்பவன். கனகரின் தங்கை விசாலம் , கணவனை இழந்த பின் ஒரே மகனைக் கண்போல் காத்து படிப்பித்து ...மாமன் கனகர் சொல்லவும் கேளாமல் மத்திய கிழக்கிற்கு பணிக்கு ஆட்களை எடுபதாக் மகன் கேட்ட போது அனுப்பி வைத்தாள். தற்போது , ஓய்வாக் இருப்பதால் அவனும் சம்மதித்து , கணக்கு வழக்குகளை பார்பான். சில சமயம் மாமன் வீடில் அந்த , விபரங்களைக் கொண்டுபோய் கொடுக்க வேண்டியிருக்கும். அங்கே அழகு தேவைதை யான் மைத்துனியை சந்தித்ததும் காதல் வயபட்டான். மூத்தவள் வைதேகி முதலில் மறுத்தாலும், காலபோக்கில் சம்மதம் தெரிவித்தாள். . கனகருக்கு இது தெரியவந்ததும் , மனைவி காமாட்சியுடன் , இது நடக்காது , அவளை கணடித்து வை என்றார்.
சில நாட்களில் ஒரு அரச உத்தியோகம் பார்க்கும் வசதியான் பையனுக்கு திருமணம் முற் றாகியது . பெண பார்க்கும் நாள் வரவே ...பையன் உறவினருடன் வந்து பெண பார்த்து , சம்மதம் சொல்லி . கலியானதுக்கான் நாளும்பார்க்க் பட்டது . வாகீசன் தாயை போய் பெண்கேட்கும்படி சொல்லி பார்த்தான் . விசாலம் சகோதரனுக்கு பயந்து , தயங்கி நின்றாள். திருமணம் வைதேகி ச்ம்மதமில்லாமலே நிறைவேறியது. வாகீசன் மனம் சொகத்திலாழ்ந்த்து . முதல் நாள் இரவே அன்றே ,எல்லாக் கதைகளையும் கணவனிடம் ஒப்புவித்தாள்.தந்தையின் கெடுபிடிக்கு பயந்து தான் எதிர்புத் தெரிவிக்க் வில்லை என்றாள் . மாப்பிள்ளை ஒரு நல்ல புரிந்துணர்வு உள்ளவனாய் , அவன் ஒரு நல்ல இதயம் உள்ளவனாய் இருந்தான். கணவனையும் அழைத்துக்கொண்டு போய் வாகீசனிடம் பேசி னாள் தான் எவ்வ்ளவோ போரடியும் தந்தை மறுத்து விட்டார் . என்றும் தன்னை மறந்து வேறு திருமணம் செய்யும் படியும் கேட்டாள். அவன் சம்மதிக்க வில்லை . நீ சந்தோஷமாய் வாழு . எனக்கு த்தான் கொடுத்து வைக்க்வில்லை என்றான் .
சில நாட்கள் செல்ல வாகீசன் மீண்டும் மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்றான் . வருடங்கள் உருண்டோடியது ....வைதேகிக்கும் இரண்டு பெண குழந்தைகள் ....கிட்டத்தட்ட் நான்கு வருடங்கள் இருக்கும் . அவ்வூர் திருவிழாக்காலம் வந்தது. எல்லோரும் மகிழ்ச்சியாய் இருந்தனர். வைதேகி குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து சென்றாள். அவளது மாமியார் ( தந்தையின் சகோதரி ) அழைக்கவே திருப்பி பார்த்தாள் . குழந்தைகளை கொஞ்சி மகிழ ஆசைப் பட்டாள் மாமியார். . வாகீசன் ஒரு மரத்தினடியில் சோகமாய் உட்காந்து இருந்தான்.வைதேகி அவனிடம் போய் நலம் விசாரித்தாள்...குழந்தைகள் பாட்டியுடன் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். வைதேகி வற்புறுத்தி கேட்டாள். அவனது வாழ்வை மறு சீரமைக்கும் படி .. என் தியாகம் தான் பெற்றவருக்கு மகிழ்ச்சி ...உங்கள் திருமணம் தான் எனக்கு ஆறுதல் ..உங்களை காணும்போது குற்ற உணர்வால் குறுகி போகிறேன். என்னை மன்னித்து வேறு மணம் செய்து கொள்ளுங்கள். நான் வாழ்வது என் கணவருக்காகவும் குழந்தை களுக் ககவும். என்று பேசி முடித்தாள். வாகீசன் மெளனமாக் இருந்தான். .
சில ( வயதால்) பெரியவர்களின் வரட்டு கெளரவம் இளம் மனசுகளை வேதனை பட வைக்கிறது . சிலருடைய தியாகம், தோல்வி பெரியவர்களுக்கு மனத் திருப்தி தருகிறது. .வாழும் காலம் கொஞ்சம். .விரும்பிய வாழ்க்கையை ,அமைத்து, மன மகிழ்வோடு வாழ்த்தி வாழ வைக்க ஏன் மறுக்கிறது, இந்த மனித மனங்கள்.
15 comments:
ஹ்ம்ம் நல்லா இருக்கு
உண்மை தான் நிலாமதி..இப்படி இளையவர்களின் பல தியாகங்ளுக்கு பின்னால் பல பெரியவர்களின் புன்னகைகள் இருக்கின்றன...
எங்கள் சமூகத்தில் இந்த வறட்டு கௌரவம் எத்தனையோ மனங்களைச் சாகடித்திருக்கிறது.உங்கள் கதை நிறைய ஞாபகங்களைக் கொண்டு வருது !
பல தியாகங்ளுக்கு பின்னால் பெரியவர்களின் புன்னகைகள் இருக்கின்றன...நல்லா இருக்கு
வரட்டுக் கௌரவம் பார்ப்பவர்களிடையே புரிந்துணர்வு கொண்ட பலரையும் எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். நெல்லும் பதரும் போலத்தானே சமூகம்.
எல் கே .....ஹேமா, போளூர் தாயா நிதி ...டாக் முருகானந்தன், வினோ ...யாவாருக்கும என் நன்றி .
பல பிரச்சினைகளுக்கு வரட்டுக் கௌரவம் காரணமாகவும் விட்டுக் கொடுத்தல் தீர்வாகவும் இருக்கிறது,
அருமையான பகிர்வு
மனம் தொட்ட பதிவு
கொஞ்சம் வேகமாக சொல்லிப்போன உண்ர்வைத்
தவிர்க்க இயலவில்லை நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நல்லாயிருக்கு!
நன்றி சிவகுமார் ....ரமணி ஐயா
..பிரணவம் ரவிக்குமார்.
தங்கள் வரவுக்கும் பகிர்வுக்கும் நன்றி
கருத்தாக்கம் மிக்க கதைக்கு வாழ்த்துக்கள். கொஞ்சம் எழுத்துப் பிழைகளைக் கவனியுங்க.
அப்ப நான் போட்டுவரட்டே நிலாமூன்?:).
ஃஃஃஃஅவனது வாழ்வை மறு சீரமைக்கும் படி .. என் தியாகம் தான் பெற்றவருக்கு மகிழ்ச்சி ...உங்கள் திருமணம் தான் எனக்கு ஆறுதல் ..உங்களை காணும்போது குற்ற உணர்வால் குறுகி போகிறேன்ஃஃஃஃ
மனதை தொடும் இடமக்கா.. அருமை... அருமை..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...
கலக்கீட்டீங்க அக்கா
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
"உண்மை , இளைஞர்களின் பல தியாகங்ளுக்கு பின்னால் பல பெரியவர்களின் புன்னகைகள் இருக்கின்றன..."ஆனாலும் புரிந்து கொள்ள மறுக்கிறதே மலரும் சமுகமும்.
அருமையான பகிர்வு.
Post a Comment