Followers

Monday, March 28, 2011

ஏதோ ஒரு ஏக்கம்





ஏதோ ஒரு ஏக்கம்  

ஓடும் அந்த தொடரூந்து வண்டியில் (  ரெயின் )ஒரு ஓரமாக் உட்காந்திருந்தான் அந்த இளைஞ்சன் . வண்டியின் அசை வாட்ட துக்கு ஏற்ப ஆடிக் கொண்டிருந்தான். மறு பக்கத்தில் நானும் என் சின்ன மகனும் அமர்ந்திருந்தோம். பார்க்க என் நாட்டவன் போல் இருந்ததால் சற்று சின்ன புன் முறுவலுடன் , நீங்க தமிழா என் ஆரம்பித்தேன். ஆம் அன்ரி ...என்றவன் நம் நாடு, சூழல் இருப்பிடம் ,  போர் என் தகவல் களைப பரிமாறிக்கொண்டோம்.   நகரத்திலுள்ள  ஒரு யுனிவெர்சிடியில் , கலைத்துறையில் இரண்டாம் ஆண்டுபடித்துக் கொண்டிருக்கிறான். மாணவ விசாவில் இந் நாட்டுக்கு வந்திருகிறான். அவனது கதையைகேளுங்கள்.  கமலா காண்டீபன் தம்பதிகளுக்கு இரு ஆண் குழந்தைகள் . தந்தை காண்டீபன் தலை நகரில்ளொரு களஞ்சியத்துக்கு  பொறுப்பாளராக  பணி புரிந்து இருகிறார்.திடீர் சோதனியின் போது ...பொருட்கள் கணக்கெடுப்பில் பெரும் எண்ணிக்கை குறைவு வரவே பணியிலிருந்து நீக்கி விடார்கள். அவர் ஊருக்கு வந்து விட்டார் . . மூன்று மாதமொரு முறை வருமப்பா நீண்டநாட்கள் தங்கியிருக்கவே மகன்கள் அருணோ அபிஷேக்  இற்கு பெருமகிழ்ச்சி .சைக்கிளில் சவாரி ,வேண்டிய இனிப்பு வகைகள் என்று  ஆரவாரமாய் ஆறுமாதங்கள் ஆயின சில நாட்களில் ....வீட்டில் அம்மாவுடன் சின்ன சின்ன தகராறு ..அம்மா அழுவதும் அப்பா  கோபம் கொள்வதுமாய் .. சில தங்க நகைகள் அடைவு ( ஈட்டுக்கு ) போயின...ஒரு வருடமானது .அப்பா மீண்டும் பணியிடத்துக்கு  போவதாயில்லை ...

இதற்கிடையில் அம்மா கமலாவுக்கு ஐரோப்பிய நாடோன்றுக்கான் விசாவுக்கு வந்திருந்தது. பல வருடங்களுக்கு முன் ,அங்கு இருந்த ம் சின்ன மாமா மூலம் விண்ணப்பித்து இருந்தது கிடைத்தது.   அம்மாவுக்கு மனப் போராட்ட்ம் அப்பாக்கும் வேலை இல்லை குடும்ப் கஷ்டம் ஆறும் நாலுமாய் வயதுடைய  இரு குழந்தைகள் . இவ்வேளை அப்பா இருமன்மாய் சம்மதித்தார் . அம்மம்மாவும் சித்தியும் கவனித்துக்  கொள்வதாக் முன்வந்தனர் .ஒரு கோடை விடுமுறையில் அம்மா விமானம் ஏறினாள் .அப்பா தான் வழியனுப்பி வந்தார் . வீட்டிலொரு  வெறுமை .அம்மா பிளேனில சொக்கா ( சாக்லேட்  ) வாங்க போய் என்று ...சொல்லித்திரிந் தேனாம் .  சில நாட்கள் அம்ம்வைதேடினாலும் அம்மம்மாவின்  அணைப்பில் மறந்து போயிருந்தேன். அடுத்தவருடம் தை மாதம் என்னை நேர்சரியில் சேர்த்த்தார்கள் .. அண்ணாவுடன் பள்ளி செல்ல ஆசைபட்ட  எனக்கு முதுகில் புத்த்க பை சகிதம் அப்பாவுடன்  மோட்டார் சைக்கிளில் பவனிவந்தேன். அப்பாவின்  மிதிவண்டி ( சயிக்கில் )மோட்டார் சயிக்கிலாக் மாறி இருந்தது. இரவில் படுக்கையில்  மட்டும் என் அண்ண அருனோவுடன்  சண்டை யார் அம்மம்மவினருகில் என்று. ....எனக்கு புதுச்சட்டைகள் சப்பாத்து ...வேண்டிய எல்லாம் கிடைத்தன .
 எல்லாம் இருந்தும் எதோ ஒன்று இல்லை என்பதுபோல் ஒரு நிலை . இருவாரமொருமுறை அம்மாவின் நீலக்கலர் வெளிநாட்டு கடிதம் வரும் . படங்களும் அனுப்புவர். இளம் வயதில் திருமணத்துக்கு முன்  அம்மா கற்றுக்கொண்ட தையல் கலைகள் அவளுக்கு கை கொடுத்தன் ..ஒரு தையல் கம்பனியில் எம்பிராயட்ரி .மெசின்  இயக்குனராக் பணி புரிந்திருக்கிறார் ..  காலங் களும்  உருண்டோடின... ஆனால் முன்வீட்டு கோபி மட்டும் விளையாடும்போது, உங்க அம்மா   கோவித்து கொண்டு வெளிநாடுபோயவிடாராம் என்பான். என் அம்மா வருவாடா என்று சண்டைபிடிப்பேன். வயது ஏற அம்மாவுக்கான தாகம் ,விளக்கம் . அறிவு அதிகமானது ...

வருடங்கள் நான்கு கடந்தது.  ஒரு மார்கழி விடுமுறைக்கு முதல் நாள் அந்த நல்லசேதி . அம்மா  வரப்போகிறா...என்ற சேதி ...நாட்களை எண்ணினேன் அந்த நாளும் வந்தது ...விடி காலை கண் விழித்த் போது வீட்டில்  நான்கு சூட் கேசுகள் ..விளையாட்டு சாமான்கள் என்று களைகட்டி இருந்தது. என் அம்மா அழகாய் நறுமணத்துடன் ...சற்று மாறுபட்ட் தோற்றமுடன் கட்டியணைத்தாள். வீடெங்கும்   மகிழ்ச்சி .. வீட்டிலொரு நிறைவு . கோபிக்கும் என் புதுச்சட்டை விளையாடுப்பொருட்கள் பரிமாறி மகிழ்வாய் இருந்தேன். வீட்டிற்கு  அருகில் இருந்த கட்டடத்தொகுதியில் ."..கம்லா ஸ்டோர்ஸ் " என்று ஒரு பல சரக்குக் கடை ஆரம்பித்து அப்பா தான் நிர்வாகி .நானும் கல்லூரி  முடித்து தலைநகருக்கு  பல்கலை நுழைவு  பரீட்சை எழுதியபின் கனடா நாட்டுக்கு மாணவ விசா  கொடுப்பார்கள் என் அறிந்து விண்ணபித்து காத்திருந்தேன் ....மூன்று வாரங்களில் அந்த நல்ல் செய்தியும்  கிடைத்தது .இங்கு வந்து   சின்ன மாமா துணையுடன் இங்கு வாழ்கிறேன். இருந்தாலும் அம்மா அப்பாவை பிரிந்த் ஏக்கம் இன்னும் இருக்கிறது . இளமையில் அம்மாவை பிரிந்த  தாகம்.மீண்டும் தொடர்கிறது 

. ஒன்றை இழந்து தானொன்றை பெறவேண்டுமா? ...என்ற ஆதங்கதுடன் கூறி முடித்தான் . ... தொட்டில்  பிள்ளை தொட்டிலிலே இருப்பதில்லை .  மாற்றங்கள் ..வளர்ச்சிகள் .வந்தே ஆகும் . என் ஆறுதல் கூறி என் இறக்கும் தரிப்பிடம் வ்ரவே ..விடைபெற்றேன். உங்கள் சின்ன் மகனைக் கண்டதும் என் அம்மா ஞாபகம் என் சின்னவயது நினைவுகள் வந்தன . உங்களை கண்ட்தில் உரையாடியதில்   மகிழ்ச்சி என் விடைபெற்றான். 

12 comments:

MANO நாஞ்சில் மனோ said...

மனசும் வலிக்குது....

Chitra said...

ஏக்கங்கள்....மனதில் அதன் தாக்கங்கள்.... ம்ம்ம்ம்.....பாவம் தான்.

தமிழ்த்தோட்டம் said...

மனதின் ஏக்கங்கள் வார்த்தைகளில் தெரிகிறது..

கமலேஷ் said...

கலங்கடிக்குது

Muruganandan M.K. said...

கூடலும் பிரிவும் வாழ்வில் தவிர்க்க முடியா சக்கரங்கள். அதைத் தடுக்க முடியாது தத்தளிக்கின்றன மனித மனங்கள்.
நாளாந்தம் எமது வாழ்வில் சந்திக்கும் விடயத்தை அழகாகச் சொல்லியிருக்கறீர்கள்.

போளூர் தயாநிதி said...

ஏக்கங்கள்... மனசும் வலிக்குது....

மாதேவி said...

இந்த ஏக்கம் இக்காலம் அநேகர் வாழ்வில்....

Pranavam Ravikumar said...

Touching!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பலர் மனதின் ஏக்கங்கள் படிக்கும் போது மனம் கனக்கின்றது

ம.தி.சுதா said...

ஃஃஃஃஒரு பல சரக்குக் கடை ஆரம்பித்து அப்பா தான் நிர்வாகி ஃஃஃ

தங்கள் அனுபவங்கள் வித்தியாசமாகவும் புத்தணர்ச்சியாகவும் இருக்கிறது...

முற்றும் அறிந்த அதிரா said...

இப்போவெல்லாம் கதை கதையாக எழுதுறீங்க வாழ்த்துக்கள்.

//தொட்டில் பிள்ளை தொட்டிலிலே இருப்பதில்லை . மாற்றங்கள் ..வளர்ச்சிகள் .வந்தே ஆகும் // அருமையான வாக்கியம்.

உங்கள் புளொக் ஐடி மறந்துபோய்... எங்கெல்லாம் தேடி கண்டுபிடித்து வந்திட்டேன்.

அம்பலத்தார் said...

ஏக்கங்கள் எதிபார்ப்புகள் அற்ற மானிடரும் இல்லை. இவ்வுலகில் நிரந்தரமானதென்றும் எதுவும் இல்லை. நித்திய நிகழ்வை அழகாக வெளிக்கொணர்ந்து இருக்கிறீர்கள்