நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Thursday, April 28, 2011

சொந்தங்கள்....என் றும் தொடர் கதை

சொந்தங்கள்....என் றும் தொடர் கதை 

அந்த அழகிய சின்ன கிராமத்தில் .. மக்களை துயிலெழுப்பும் எழுப்பும் அந்த ஆலயமணி . அதிகாலை ஐந்தரைக்கு ஒலிக்கும். அது  ஒரு அதிக  கத்தோலிக்கர் வாழும் கிராமம். சில இந்துக்களும் கலந்து நட்புறவோடு வாழ்த்திருந்தார்கள். பண்டிகை நாட்களில் ஆலய குலதெய்வம் ( புனிதர் ) பவனிவரும் நாட்களில் இந்துக்களும் கலந்து கொள்வார்கள். கோவில்வ்ளவு தென்னந்  தோரனக்களால் அலங்க்கலரிக்க் பட்டு  ஒரு கோலாக லமான  கொண்டாடமாக் காணப்படும்.காலை பூசை வழிபாட்டில்  பாடகர் குழாமில் ரோஸ்மேரி . பியானோ வாத்தியம் இசைப் பாள். இளம்பெண்களும் ஆண்களும் சேர்ந்து பாடகர் குழாமாக் பாட்டு இசைப்பார்கள்.  போதனைகளும்  பொருத்தமான் பாடலும் அமைந்தால் இறைவழிபாடு மிகவும் மெய்  மறக்க  செய்யும் .


 இப்படியான் பருவத்தில்  பள்ளிவாழ்வு முடிந்து ரோஸ் மேரி  ஆசிரிய கலாசாலை க்கு தேர்வு எழுதி ..அதற்கான் அனுமதியும் பெற்றுக் கொண்டாள். பாடகர் குழாமில் மிகவும அமைதி யானவன் ராபர்ட் .இவளைவிட இரண்டு வயது மூத்தவன். அவன் வாழ்விலொரு சோகம். நடந்தது அவனது மூத்த சகோதரி ...வேற்று இன பையனுடன் ஓடிபோய் திருமணம் செய்து  கொண்டாள். இதனால்  அவ்வூர்  மக்கள் இவனது குடும்பத்தை தள்ளி வைத்திருந்தார்கள். அவனுக்கு கீழுள்ள் இரு சகோதரிகளுக்கும் திருமண்ம  கை கூடவில்லை. ஆனால் ராபர்ட் இன  நற்பண்புகள் சமூகத்தில் பெரிதும் வரவேற்பு பெற்று இருந்தன. எல்லோருக்கும் உதவி செய்வான். கோவில் பணிகளை முன்னின்று செய்வான். இவன் மீது ரோஸ் மேரிக்கு காதல் இருந்தாலும் அதை வெளிக் காட்ட்வில்லை. அவனுக்கும் அவனது ஏழ்மை நிலை ...சமுதாய் புறக்கணிப்பு  என்பவற்றால் மன்மொடிந்துபோய் இருந்தான்.  இருப்பினும் தான் வெளி நாடு சென்று உழைத்து இருதங்கையரையும் கரை சேர்க்கவேண்டும் என்று மன மன உறுதி யுள்ளவன். .தங்கள் ஒலைவீட்டை திருத்திக் கட்ட் வேண்டும். என்று நிறைய ஆசைகளை வளர்த்து இருந்தான்.  ரோஸ் மேரி ...கலாசாலைக்கு புறப்படும் வாரம் . தன் விருப்பத்தை தெரிவித்தான். அவளுக்கு விருப்பம் இருபினும் தாய் தந்தை சமுதாயத்துக்கு பயந்து ...அவனை ஏற்றுக் கொள்ள முடியாதவளாய் இருந்தாள். இறுதியில் ...முடிவு சொல்லாமலே ஆசிரிய விடுதிக்கு சென்று விட்டாள். . மாதமொருமுறை ஊருக்கு வருவாள்.  பயிற்சிக் கல்லூரியில் இருக்கும்போது ... ஒரு நாள் இவளது  பெயருக்கு ஒரு கடிதம்  வந்தது. அதில் ராபர்ட் வெளி நாடு செல்ல அழைப்பு வ்ந்திரு ப்பதாகவும்  முடிந்தால் தனக்காக காத்திருக்கும்படியும் எழுதி இருந்தான். ரோஸ் மேரி க்கும் இரண்டாம் வருடம் முடிந்து இருந்த்து . கற்கை நெறி முடிய இன்னும் இரு வருடங்கள் இருந்தன . 

. .காலம்  யாருக்கும் காத்து இராமல்  கடந்து சென்றது. விடுமுறைக்கு செல்லும்போது ராபர்ட் வீடு குலைக்க் பட்டு கல் வீட்டுக் கான அத்திவாரம்  போடப்பட்டு  நாளடைவில் வீடு கட்டி முடிக்க பட்டது.  ராபர்டின் முயற்சியை குடும்ப் அக்கறையை பாராட்டிப்  பேசினார்கள் ஊரவர்கள். சில மாதங்களில்  இருதங்கை களுக்கும் அயல ஊரிலிருந்து ச்ம்பந்தம் பேசி ...வந்தார்கள். புயலுக்குப்பின் அமைதி என்பார்கள். துன்பத்துக்கு பின் ராபர்ட்  குடும்பம் சற்று சுதந்திரமான் இன்பக் காற்றை  சுவாசிக்க தொடங்கி இருந்தது. காலப் போக்கில் இருதங்கை களும் மண முடித்து அயல ஊரில் வாழ்க்கை பட்டு சென்றுவிடார்கள். ரோஸ் மேரிக்கும்   அவளது பயிற்சி முடிய மூன்றுமாதங்கள் இருந்தன . . ஒரு நாள் விருந்தினர் அறையில் அவளைக் காண  ஒருவர் வந்துள்ளதாக் தகவல் வந்தது. சென்று பார்த்த  போது இன்ப அதிர்ச்சி ராபர்ட் அவளைக்  காண விடுதிக்கு வந்திருந்தான். தனது கடமைகள் யாவும் நிறை வேறியதாகவும் tயதாகவும் அவளை திருமணம் செய்ய விரும்புவதாகவும் சொன்னான். முதலில் மறுத்தவள் தனது தாய் தந்தை சக உறவுகள். மறுப்பு சொல்வார்கள் என பயந்தாள். 
தான் விரைவில் மீண்டும்போக் வேண்டியிருபதால் பதிவு திருமண் செய்ய சொல்லி கேட்டான் .அவளது தூரத்து உறவு முறையானவர்  துணையுடன் அவரது குடும்ப் உதவியுடன் பதிவு திருமண் நடந்தது. ராபர்ட் சென்றுவிடான். அவளது வீட்டில் அவளது பயிற்சி முடிவதால் திருமண் பேச்சு எழுந்தது. அவள் மறுத்து சாக்குபோக்கு சொல்லி வந்தாள் 

ஒரு நாள் அவளது தூரத்து உறவு..அவளுக்கு நடந்த திருமணப் பதிவை வெளிப்படுத்தி விடார். இதனால் கோபமுற்ற  தாய் தந்தை சக உறவுகள் அவளை குடும்பத்தில் ஏற்க  வில்லை .  .இருவருடங்களால் ராபர்ட் வந்து முறைப்படி  தாலி கட்டி மனைவியாக்  ஏற்றுக் மீண்டும் வெளிநாடு செல்ல விரும்பாது , தனது ச்ம்பாத்தியத்தில் ஒரு புடவைக் கடைக்கு சொந்தக் காரன் ஆகினான்.  காலப் போக்கில் ரோஸ்மேரி ஒரு பெண குழந்தை க்கு தாய் ஆனாள்.  பெற்றவருக்கு கோபமிருபபினும் ஒரு நாள் ரகசியமாய் தாய்  வந்து பார்த்தாள்.சில வருடங்களில் ...அவர்களது ஊரில் போர் நட வடிக்கைகள்  தொடங்கவே ..அவள் குடும்பத்துடன்  ஐரோப்பிய நாடொன்றுக்கு சென்று விட்டாள் .அவளைதொடர்ந்து  அவ்வூர் 
மக்கள் ப லரும் வேறு  நாடுகளுக்கு சென்றனர். இவளது சக உறவுகளும் இவளுக்கு அண்மித்த் நாடுகளில் வாழ்ந்து கொண்டு இருந்தனர் . தொலை  பேசி மூலம் உறவு மீண்டது .. காலப் போக்கில் இவளது  மூத்த மகள் திருமண் வயதை  அடைந்தாள் . திருமணம் பேசி ...அதற்கான் ஒழுங்க்குகளை மேற் கொண்டாள். இடையில் அவளது மகள் தனது மாமா அத்தை முறையானவர்களை போய் பார்த்து வந்தாள் அவர்கள் சின்ன வயதில் அவர்களது சகோதரி இருந்த்தை போல்வே உன் மகளுள்ளால் என்று பெருமிதப் பட்டனர். திருமண் நாளும் அண்மிக்கிறது வரும் ஆவணியில் நடைபெறும் விழாவுக்கு வரவேற்பு மண்டபம் , ஆயத்தங்கள் அழைப்பு மடல்கள் என்று வீடு களை கட்டுகிறது .  தன் சக உறவுகளின் வருகைக்காய் காத்திருக்கிறாள் ரோஸ் மேரி . 

சொந்தம் எப்போதும்   தொடர்கதை  தான் முடிவே இல்லாதது ...
எங்கே சென்றாலும் தேடி இணையும் இனிய கதை  இது ..
உண்மை அன்போடு சேர்த்து வைக்க இறைவன் எழுதும் புதுக் கதை இது 


 குறிப்பு : பெயர்கள் கற்பனை.   கதை என் நண்பியின் வாழ்க்கை 

13 comments:

சிசு said...

இத்தனை வருட அனுபவத்தில் உறவுகளின் அருமை தெரிகிறது... அந்த ஏக்கம் புரிகிறது...

சிசு said...

அருமையான, அழுத்தமான எழுத்து நடை...
சொந்தங்கள் வரவேண்டும்.
இறைவனின் புதுக்கதை சுபமாக வேண்டும்....

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃஃ கோபமுற்ற தாய் தந்தை சக உறவுகள் அவளை குடும்பத்தில் ஏற்க வில்லை ஃஃஃஃஃஃ

தங்கள் பகிர்வுகள் பல நினைவலைகளையும் சமூகத்தையும் பிரதிபலிக்கிறது அக்கா..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)

ரிஷபன் said...

படிக்கும்போதே புரிந்தது.. உண்மைக் கதையோ என்று.. நலமே விளையட்டும்

அரசன் said...

எல்லாம் சுபமாக அமைய இறைவனை வேண்டிக்கொண்டு வாழ்த்துக்களை கூறுவோம்..

நன்றிங்க அக்கா ..

யாதவன் said...

அச்காச்சிண்ட கதை எல்லாம் உண்மை கதை தான் யதார்த்தமாய் இறுக்கும்
எப்ப உங்கட கதையை எழுத போறிங்கள்

நிலாமதி said...

என் தளம் வந்து கருத்துப் பகிர்ந்த் சிசு ...அரசன் .....ரிஷபன் .யாதவன் ..மதி சுதா ................யாவருக்கும் என் உளமார்ந்த நன்றி .
என் உயிர் நண்பியின் கதை அவள் சந்தோஷம் எனக்கும் மகிழ்ச்சி ..............

Chitra said...

உண்மை கதையை சுவை பட சொல்லி இருக்கும் விதம், அருமை.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

எமது வாழ்வைப் பிரதிபலிக்கும் யதார்த்தமான பதிவு. சுவையான எழுத்து.

Ramani said...

தங்கள் பதிவின் ரசிகன் நான்
உண்மையான நிகழ்வுகளை ஒட்டியே
எப்போது உங்கள் பதிவு இருப்பதால்
படிப்பது பயனுள்ளதாகவும்
நல்ல படிப்பினையச் சொல்வதாகவும் இருக்கும்
இந்தப் பதிவும் அதற்கு விதிவிலக்கல்ல
நல்ல பதிவு தொடரவும்
200 தொடர்புகளை அடைந்தமைக்கு
என் மனமார்ந்த வாழ்த்துக்களையும்
தெரிவித்துக் கொள்கிறேன்

குணசேகரன்... said...

அருமை..ஒரு விண்ணப்பம். கொஞ்சம் வார்த்தைகளுக்கு இடை வெளி விடவும்.

http://zenguna.blogspot.com

தமிழ்த்தோட்டம் said...

அருமையா கதை அக்கா நல்லா இருக்கு பாராட்டுக்கள்

சிவகுமாரன் said...

உங்கள் நண்பிக்கு வாழ்த்துக்கள்.
உண்மைதான் சொந்தம் தொடர்கதை தான்.
உறவுகள் தான் வாழ்க்கையை அர்த்தப் படுத்துகிறது