Followers

Tuesday, July 26, 2011

சித்தப்பா சித்தப்பா

சித்தப்பா சித்தப்பா 


என் விடுமுறைப் பயணம் முடிந்து என் வேலைப் பளுக்களும் சற்று ஓய்ந்து மீண்டும் உங்களுடன்.. நான் சந்தித்தத் சிறு சம்பவம்...
..

 சென்ற ஆனி மாத  இறுதியில் ஒரு வெளிநாட்டுப் பயணம் போய் இருந்தேன்  எல்லோரும் எதிர்பார்த்ததுபோலவே அந்த நாளும் வந்தது . நான் கணவர் இரு மகன் களுடன் சென்று இருந்தேன் . 
சற்று ஆர்வமாக அடுத்து என்ன என்ற ஆவலோடு விமானத்தினுள் அதற்கான்  கடமைகளை  முடித்து கொண்டு எங்கள் ஆசன  பதிவு தேடி அமாந்தோம். சில நிமிடங்க ளில் விமானம் நிறைந்து புறப்பட ஆரம்பம் . எல்லோரும் மெளனமாய் கடவுளை நினத்துக் கொண்டு இருந்ததனர் .அருகில் உள்ள சாளரத்தினூடே எட்டிப்பார்த்தேன் கிண் என்ற காது இரைச்சலுடன்
 மீது மெதுவாக விமானம் கிளம்பியது. சிலர் வாசிப்பதும் சில காதுக்குள்   நுழைத்து  பாடுக்கேட்ட்பதும் சிலர் தூங்க ஆரம்பிப்பதுமாய் இருந்தனர் . ,

நமக்கு ஒரே இடத்தில இருக்க  சங்கடமாய் இருந்தது.  இருக்கையும்மட்டு மட்டாய்  அங்குமிங்கும் சரிவதும  திரும்புவதுமாய் இருந்தேன். ஒரு சில சமயம் தூக்கமும் என் கண்களை தழுவின. இடையிடையே பணியாளர்களின் உபசரிப்பும் கலந்து  எனது எட்டுமணி நேரபயணம்  ஒருவாறு முடிவு நிலைக்கு  வந்தது . அடுத்தது என்ன என்ற  எதிர்பார்ப்புமாய்  இருந்தது. எங்களை ஏற்றி செல்ல என்னவரின் தம்பி முறையானவர் வருவதாக   ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது. விமானம் தரித்ததும்.   காலை வேளை எழுமணி இருக்கும்  நான் இருந்து செல்லும் நாட்டில் . முறைப்படி சுங்கபரிசோதனை, ( ஒரு நீண்ட கியூ வரிசை)  சுழலும் சக்கரத்தில் எமது பொதிகளை தேடுதல் போன்ற விடயங்களை  முடித்துக்கொண்டு நுழைவாயிலுக்கு வந்தோம். 

எங்களுடன் என்  தாயகத்தை  சேர்ந்த பெண்ணொருவர் இரு மகள் களுடன் நாம் வந்த விமானத்தில் வந்திருந்தார். அவர்களில் மூத்தவள் பதினாறு வயது இருக்கும் எங்களுக்கு முன்னே ஓடிச்சென்று  என்னவரின் 
தம்பியை "  சித்தப்பா " எனக் கட்டியணைத்தாள் . சித்தப்பா திணறினார். அட என்  அண்ணாக்கு இருவரும் ஆண் மக்கள் அல்லவா ......... எதோ விபரீதம் என உணர்ந்து ..முதுகில் தட்டிக் கொடுத்தார். அவளைப் பின்  தொடர்ந்து அவள் தாயாரும் இளைய மகளும் வந்தார்கள் .அவர்களது சித்தப்பா  தன் மனைவி,  சிறிய மகனுடன் ..கார் தரிப்பிடத்தில் இருந்து வந்தார். தாயும்  இளைய மகளும் அவர்களிடம் செல்லவே பதினாறுவயது  இளம்பெண்ணுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது ............

இவர்களுக்கு பின்னால் நாங்களும் வந்து என்னவர்  தம்பியிடம் ...  சற்றுத்  தாமதமாகி விட்டது என்று மன்னிப்புக்கேட்டு சுக நலம்விசாரித்து என் மைத்துனன் வீடு நோக்கி புறப்படத்  தயாரானோம். தூரத்தே என் தாயகத்தை சேர்ந்த  முன்னையவர் களை  ஏற்ற வந்தவர் மைத்துனருக்கும் அறிமுகமானவர் ..என் மனிவியின் அக்கா . மகளுக்கு என்னை தெரியாது. ஆறுவயதில் கனடா சென்றவள் , என மனிவி தான்  குழந்தையாகக் இருக்கையில் இவளைத் தூக்கி  வளர்த்தவர். பத்து வருடங்களுக்குப்பின் வருகிறார்கள் சித்தியைபார்க்க என விளங்க படுத்தினார்.   உங்களை சித்தப்பா என உரிமை கொண்டாடி  விட்டாள்  என நிலைமையை சமாளித்தார்..........என் மைத்துனர் வீடு செல்லுமட்டும் வந்தபயணக் களை மறந்து விழுந்து விழுந்து சிரித்தோம். " .

" தேடாமல் கெட்டது உறவு " என்பார்கள் .அந்த பெண்ணுக்கு  சித்தப்பாவின்  காட்டி விளங்கபடுத்தி இருக்கணும் அல்லது அந்த பெண  சற்று  பொறு மையாக் இருந்திருக்கலாம. என் மைத்துனருக்கும் அவர்களது சித்தப்பாவுக்கும் ஒரு ஒற்றுமை ( கடும் வெப்பம் கருதி )  நேர்ந்து விட்டது போலதலையை   மொட்டை  போட்டு இருந்தார்கள். தோற்றத்திலும் ஒத்த்வர்களாயும் இருந்தனர்.  ஹா ஹா அனுபவம் பல விதம்............................



10 comments:

'பரிவை' சே.குமார் said...

Welcome back...
Nalla Pakirvu..Ha... Ha... Haaaa

இமா க்றிஸ் said...

நல்வரவு நிலா.

நிரூபன் said...

பயண அனுபவத்தினைச் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீங்க. ரசித்தேன், பல வருடங்களின் பின்னர் ஒருவரைச் சந்திக்கப் போகிறோம் எனும் நினைப்பில் இருக்கும் போது, ஆள் மாறாட்டம் இடம் பெறுவது எவ்வளவு ஏமாற்றத்தைத் தரும் என்பது அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்,
இதே போன்ற ஓர் அனுபவம் எனக்கும் இருக்கிறது.

ஆமினா said...

நல்ல பயண அனுபவம் :)

மாய உலகம் said...

ஹா ஹா...எதிலும் பொறுமை அவசியம் என்பதை இந்த நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் பகிர்ந்தமைக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரி

கவி அழகன் said...

அப்பாடா நிலம்ம்தி அக்க வந்திட்டா இனி என்ன மண் கமழும் கதைகளுக்கு பஞ்சமில்லை

நிலாமதி said...

நட்புறவுகளுக்கு வணக்கம். சே குமார் ....இமா .....கவி அழகன் ...மாயா உலகம் ...நிரூபன் .... ஆமினா ...........கருத்துபகிர்வுக்கு நன்றி.
மீண்டும் நட்பு களைக் காண்பதில பெருமிதம் அடைகிறேன்

அந்நியன் 2 said...

நல் வரவு.

தொடங்கட்டும் புதிய இடுகைகள்.

மாலதி said...

பயண அனுபவத்தினைச் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீங்க. ரசித்தேன்.....

vidivelli said...

நல்ல பயண அனுபவம்..
சுவாரசிகமாக எழுதியிருக்கிறிங்க...
வாழ்த்துக்கள்...



http://sempakam.blogspot.com/