Followers

Tuesday, August 2, 2011

எனக்கும் தெரியும் ......

எனக்கும் தெரியும் ................

இந்த உருளும் உலகில் எல்லோர்  வாழ்விலும் வரும்முக்கிய நிகழ்வு திருமணம். ஆணாகிலும் சரி பெண்ணாகிலும் சரி .திருமணத்தின் மூலம் வாழ்வு முழுமையடைகிறது என்பார்கள்.ஆனால் இந்தக்  காலத்தில்  ஆணினமும் பெண்ணினமும்  எட்டிக்குபோட்டியாக   ஒருவரை oஒருவர்  அட்க்குவதிலும் கர்வத்தாலும் . வாழ்வு சீரளிந்து  போகிறது . 

 நாட்டில் ஏற்பட்ட  போர்க்கள சூழ்நிலையில் புலம்பெயர்ந்து வாழ்பவர்கள்தான் மாணிக்க தாசன் கோகிலா தம்பதியர். இவர்களுக்கு பெண்ணும்  ஆணுமாய் இரு மக்கள். கால ஓட்டத்தில் இருவ்ரும்  கல்வியில் தேர்ச்சி பெற்று .. பட்டம் பெற்று  ஒரு  பிரபல  கம்பனியில்  பதவி கிடைத்தது மகள் அஞ்சலி க்கு .மகன் அருணன்  இவளை விட இருவயது இளையவன். அவன் இன்னும் படித்துக்கொண்டிருந்தான்.  மகளுக்கு  திருமண    பராயம்வந்த்தும் பொறுப்பு மிக்க தந்தை திருமணம் பேசினார். ....அவர்கள் வாழும் நாட்டில்  தேடியும் அவளுக்கு வ்ரன் அமையவில்லை. தந்தையின் தூரத்து உறவினர் கள் தாயகத்தில்(இலங்கையில்) வாழ்ந்து வந்தார்கள் இவர்களுக்கு ஒரு மகன் துபாயில் கட்டிடநிர்மாணத்துறையில் இஞ்சினியராகவும்  மற்றையவன்   கல்லூரியில் பயிலும் காலத்திலும்இருந்தனர். பேச்சுவாக்கில் அந்த வருட விடுமுறையில் பெண வீட்டாரும் , இஞ்சினியர் குடும்பத்தாரும்சந்திப்பதாக ஒழுங்கு செய்யபட்டது. அதற்கான  காலம்வந்த்தும் இரு வீட்டாரும்  கோவிலில் சந்தித்து  உரையாடிக்கொண்டனர். பையனும் பெண்ணும் பேச சந்தர்ப்பம் அளிக்க பட்டது.
இருவருக்கும் பிடித்துபோகவே அந்த மாதத்தில் வரும் சுப நாளில் திருமணம் அரங்கேறியது. பெண  வீட்டாருக்கு ஒரு மாத  கால விடுமுறையே இருந்ததால் திருமணமாகிய  பத்தாம் நாள் அவள் வாழும் நாட்டுக்கு திரும்ப் வேண்டியதாயிற்று .

காலம்  விரைவாக  ஓடிக் கொண்டிருந்தது. பையன் தன்வதிவிட அனுமதிக்காக காத்திருந்தார். மீண்டும் துபாய்க்கு செல்ல வில்லை  பெண்ணும் அதற்கான குடிவரவு ஆயத்தங்க்களை செய்து.  அவர்களது அதிஷ்டம் எழு மாதத்தில் அவருக்கு அனுமதி கிடைத்தது. பையன் விமானம் ஏறும் நாளும் வந்தது. பெண வீட்டார் காத்துக்கொண்டிருந்தார்கள். அது ஒருவேலை நாள் .பெண்ணுக்கு விடுமுறை எடுக்க முடியவில்லை. இருப்பினும் விமான நிலையத்துக்கு செல்ல வேண்டியிருபதால் ஒருமணி நேர விடுப்பு எடுத்து வரும் வழியில் விமான நிலையம் சென்றாள்.   அவன் வரவுக்காய் காத்திருந்தார். ஒரு நாற்பது நிமிட வேளையின்பின்..அவர்   நுழை வாயிலுக்கு வந்ததும். கட்டியனைத்து அன்பை தெரிவித்து .  கார் தரிப்பிடம் நோக்கி சென்றனர் . வேறு யாரும்  வரவில்லையா  பையன் கேட்டார். .இல்லை எனக்கு வேலைமுடிந்துவரும்வழி அது தான் நானேநேரில் வந்தேன் என்றார் பெண.கார் தரிப்பை  அண்மித்ததும் பொதிகளை ஏற்றி புறப்பட ஆயத்த மானார்கள்  காரிலேறியதும் பெண கார்  ஆசனப்பட்டியை ( seat belt )அணியும்படி சொன்னார் கணவனிடம். ." எனக்கு தெரியும் "  என்றார் சற்று காரமாக . பெண்ணுக்கு எதோ போல் இருந்தது. பின்  இருவ்ரும்  மெளனமாக் அனாவசிய கதைகளின்றி பயணம் தொடர்ந்தது. அவளும் வீதியில் கவனம் செலுத்தியவாறே வீடுவந்து சேர்ந்தார்கள்.  வீட்டில்  அவளது தாய் தந்தை சகோதரன் இருந்தார்கள். அன்று இரவு உணவு முடிந்ததும்  படுக்கைக்குசென்று  விட்டார்கள்  . மறுநாள் சில உறவினர்,வந்தார்கள் இவரை பார்க்க ..அனைவரிடமும்  சந்தோஷமாய்  சிரித்துப் பேசி மகிழ்ந்தனர். 

அந்த வார  விடுமுறை முடியவே மறுநாள் பெண வேலைக்கு செல்ல  ஆயதத் மானாள். பையன்  காலை  உணவைமுடித்துவிட்டு  பத்திரிக்கை படித்துக் கொண்டு இருந்தார்  நேரமாற்றம் காரணமாக் உறங்க சென்றுவிடார்.   மாலை யானதும் வெளியே சென்றுவர மனைவி கேட்டாள் மாறுத்துவிடார். .  பின்பு இவ்ர்து பழைய  சிநேகிதன் வரவே அவருடன் வெளியே சென்று வந்தான். இர்வகியதும் உறங்க சென்றுவிட்டனர். மறுநாள் பெண அவர் வேலை தேடுவதற்கான  ஆயத்தங்கள் செயும்படி அதற்கான்  வழி முறைகளும் சொல்லி கணனியும் உபயோகிக்குமாறு கொடுத்துவிட்டு சென்று விட்டாள். இவ்வாறாக   அவர்களிடயே இருந் தா சிறுபிரிவு ..கர்வம்..தாழ்வு மனப்பான்மை ...அவர்களை  பிளவு நிலைக்கே இட்டு சென்றுவிட்டது. இரு வீட்டாரும் பேசுவதில்லை . முதலில்  மனஸ்தாப பட்டார்கள். தங்கள் மகனைக் கவனிக்க் வில்லை எனவும் , . பின் பெண கர்வம் பிடித்தவள்  தனக்கு எல்லாம் தெரியும் என்னும் மன நிலைகொண்டவள் அடக்கி ஆள்பவள் என  குற்றம் சாட்டினார்கள்.  எங்கே தவறு நேர்ந்தது.............

பையன் புது இடம் என சற்று பணிவாகக் சென்று இருக்கலாம். அல்லது பெண மேலும் விடுமுறை எடுத்து அவரிடம்  தனிமையில்பேசி சமாதானபடுத்தி இருக்கலாம். ஆரம்ப கோணல் முற்றும் கோணலாகி விட்டது ....ஆயிரம் காலம்வாழ   வேண்டிய பயிர்  அரை குறையாய் ..முடிவு நிலை நோக்கி ......................இது தான்வாழ்க்கையா ?..நம் இளம் சமுதாயம் எங்கே செல்கிறது 
சில காலம் காதலித்து ... திருமணம் செய்யும் ஒரே  ஒரே பதவியில் இருக்கும்  படித்தவர்கள்  ( பட்ட படிப்பு) கூட ...பின்  விளைவை  சிந்திக்காது விவாக   ரத்துவரை  செல்கிறார்கள். படிப்பு  என்பது  புத்த அறிவு  மட்டும் தானா ? டாக்டர் வக்கீல் தரத்தில் இருப்பவர்கள் கூட  .............ஏன் இந்த ..கோலம். 

9 comments:

Chitra said...

ில காலம் காதலித்து ... திருமணம் செய்யும் ஒரே ஒரே பதவியில் இருக்கும் படித்தவர்கள் ( பட்ட படிப்பு) கூட ...பின் விளைவை சிந்திக்காது விவாக ரத்துவரை செல்கிறார்கள். படிப்பு என்பது புத்த அறிவு மட்டும் தானா ?

.... காலமும் சமூக அமைப்பும் மாறி வருவதைத்தான் இது காட்டுகிறது. இது நன்மைக்காகவா இல்லையா என்பதும் கூட சம்பந்தப்பட்டவர்களின் விஷயமாக போகும் அளவுக்கு இன்று குடும்பங்கள் தனித்தன்மையுடன் இயங்க ஆரம்பித்து இருக்கின்றன. :-(

மாய உலகம் said...

முன்பே...ஒருவரை ஒருவர் பேசி மனதார புரிந்து கொண்ட பிறகே... கல்யாணத்திற்கு சம்மதிக்கவேண்டும்... இந்த பயணம் ஆயுள் வரை. கல்யாணத்திற்கு பிறகு விட்டுக்கொடுத்தல் மிக முக்கியம்... அங்கேயும் புரிதல் வேண்டும்... எங்கு புரிதல் என்பது இல்லையோ அங்கு மிக பெரிய குழப்பமும் பிரச்சனையும் காத்திருக்கிறது... பகிர்வுக்கு பாராட்டுக்கள்

கவி அழகன் said...

ஆஹா நீங்க நலமா
சங்கடம் ஒன்றும் இல்லையே

'பரிவை' சே.குமார் said...

//ஆயிரம் காலம்வாழ வேண்டிய பயிர் அரை குறையாய்//

ithu pola ayiram kathaigal arankerikkonduthaan irukkindrana... Ella EECO thaan...

அம்பலத்தார் said...

புரிந்துகொள்ளாமையும் பிரிவுகளும் காதல் கல்யாணம், பேசிச்செய்யப்படும் கல்யாணம் என்ற பாகுபாடின்றி எல்லா இடங்களிலும். அதிகரித்துவருகிறது.

நல்லதொரு பதிவு

http://massalamassala.blogspot.com/

Unknown said...

me the firstu

Ungalranga said...

இவ்ளோ சின்ன விஷயத்துக்கே புரிதல் இல்லாத இவர்களுக்கு எதுக்கு திருமணம்?

வயது வந்தால் திருமணம் என்கிற முறை மாறி மெச்சூரிட்டி இருந்தால் திருமணம் என்கிற நிலை வரவேண்டும்.

சின்னஞ்சிறார்களின் மனநிலை புரியாமல், அவர்களின் நல்வாழ்க்கைக்கு உதவாமல், அவன் அப்படி செய்யவில்லை, இவள் இப்படி செய்யவில்லை என்று முகம் சுளிக்கும் இவர்களின் மட்டும் எப்படி இருக்கும்?

பெற்றோர்களே சிறுபிள்ளைத்தனமாக நடக்கும்போது பிள்ளைகளை சொல்லி ஒன்றுமாகப்போவதில்லை..

Yaathoramani.blogspot.com said...

விட்டுக் கொடுத்தல் என்பது அதிகமாக
தோற்றுப்போதல் பணிதல் அல்லது
அடிமைப்படல் என்கிற அர்த்தத்திலேயே இப்போது
புரிந்துகொள்ளப் படுகிறது
இது முன்பு கல்வி அறிவற்றவர்களிடம்அதிகம் இருந்தது
இது இப்போது மெத்தப் படித்தவர்களிடம்தான்அதிகம் உள்ளது
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Muruganandan M.K. said...

புரிந்துணர்வு இன்மைதான் முக்கிய காரணமாகப்படுகிறது.