Followers

Monday, August 22, 2011

அவளுக்காக வாழ வேண்டும்.



காலம் வெகு  வேகமாக் ஓடிவிட்டது போல்  இருந்தது அவனுக்கு . சோமசுந்தரம் தன்  தாய்  நாட்டை விட்டு வெளியேறி இருபது வருடங்கள் . எல்லோராலும் " சோமு "என்று அன்பாக் அழைக்கபட்டவன். வீட்டுக்கும் ஊருக்கும்  செல்ல் பிள்ளை .காரணம் மூன்று பெண சகோதரிகளுக்கு இளையவனாக் பிறந்தவன்.   நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன் தந்தை  அயலில் உள்ள பட்டணத்தில் , பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியர். வார இறுதியில் தான் வீட்டுக்கு வருவார்.  தாயார்  வீட்டு வேலைகளை யும் மக்களையும் கவனித்து கொள்வார். பெண்கள் பள்ளியில் கவனமாய் படித்து .வந்தனர்.  .தாயார் ஆண்பிள்ளை என்று  அவனில் மிகுந்த பாசம் வைத்தது இருந்தார். வேண்டியதெல்லாம் எப்டியாவது காசு சேர்த்து வாங்கி கொடுப்பார்.அவனுக்கு துணி துவைப்பது , அக்கா மார்தான். சில சமயம் வெளி வேளைகளில் உதவி செய்வான். அவனும் உயர் கல்வி முடித்தும் மேற மேற் படிப்புக்காக செல்ல காத்திருந்தான் . அப்போது  தான்  தாயகத்தில் போரின் ஆரம்ப காலம் . இயக்கங்களுக்கு ஆட  சேர்ப்பு செய்துகொண்டு இருந்தார்கள். குடும்ப் உறவுகள் அவனை விடத் தயாராக் இல்லை. வெளி நாட்டுக்கு ஆட்களை அனுப்பும் முகவர் நிலையம் மூலம் அவன் நாட்டை விட்டு வெளியேறி  னான்.  காலம் தன் பாட்டுக்கு   ஓடிக் கொண்டே சென்றது. ஐரோப்பிய நாடோன்றுக்கு சென்றவன் அந்நாடடு பாஷை  படிக்க வேண்டிய  நிர்பந்தம்  பாஷை படிப்பதும் பகுதி நேர வேலை செய்வதுமாய் ...இருந்தான். அந்நிலையில் மூத்த சகோதரிக்கு திருமணம் செய்ய வேண்டிய நிலை. இவன் வருவதற்காய் அடைமானம் வைத்த வீடு சீராக்  கொடுக்க வேண்டி இருந்தது. உழைத்த் காசெல்லாம் ..அனுப்பி அவள் காரியம் முடித்தான்.
 இந்த நிம்மதியில் தந்தையார் மூன்றாம் மாதம் காலமாகி  விட்டார் . 

குடும்ப் சுமை இவன் மேல் விழுந்தது. இரண்டாவ்து மூன்றாவ்து சகோதரிகளுக்கு திருமணம் செய்து நிமிர்கையில் இவனுக்கு வயது முப்பத்தைந்து ஆகி விட்டது .பின் தாயார் தான் முதுமையை எண்ணி இவனை திருமணம் செய்ய வற்புறுத்தினார். ஊரில் இருந்து ஒரு  பெண்ணை பேசி  .அவளும் அவனுடன் இணைந்து இல் வாழ்வை ஆரம்பித்தனர். வருடங்கள் உருண்டோடின. அவர்களுக்கு குழந்தை ப் பாக்கியம் கிடைக்கவில்லை . பத்து வருடங்கள் ஓடி விட்டன. ஒரு தடவை அவனை பார்க்க நோயுற்ற தாயார் ஆசைப்பட்டார் .ஊர் போய் சேர்ந்ததும் தனக்கு காலம் இன்னும் அதிகம் காத்திராது மகன் வழிப் பேரனைக் காண  வேண்டும் என் தாயார்  ஆசைப் பட்டார். அவர்களுக்குமட்டும் ஆசை இல்லையா என்ன? அந்தப் பாக்கியம் அதுவரை அவர்களுக்கு கிட்ட் வில்லியே என உள்ளூரக் கவலை பட்டாலும் தெய்வ நம்பிக்கையோடு இருந்தார்கள். 

அவர்கள் மீண்டும் ஐரோப்பா வந்ததும் சோமுவின் மனிவி  கர்ப்பமுற்றாள் . சோமு மிகவும் மகிழ்ந்து போனான். இந்த சுப செய்தி கேட்ட் தாயார் இருவாரங்களில்  கண்ணை மூடி விடார். முன்பெல்லாம் சோமுவின் மனைவி  சில சுப விசெடங்களுக்கு போக , முன் நிற்க,   தயங்குவாள். உறவுகள் ஏதும் சொல்லிவிடுவார்களோ என்று .
.தன் சாபம் குறை நீங்கியதாக் மகிழ்ந்தாள். எண்ணி பத்தாம் மாதம்  அழகான் பெண குழந்தைக்கு தாயானாள் . சோமு மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தான். அவர்களிடையே ஒரு புதுப்  பிணைப்பு உணர்வு ஏற்பட்டது. சோமுவின் மனிவி மிகவும் கண்ணுங் கருத்துமாக் குழந்தை ஜானுவை  பராமரி த்தாள் .  சோமுவின் வேலை முடிந்ததும் வந்த களை தீர்வது மழலையின் சிரிப்பினால் தான். ஓர் சொர்க்கமே கண்டது போல் இரு வரும் மகிழ்ந்தனர் .. குழல் இனிது யாழ் இனிது மழலைச்சொல் கேளாதவர் என்பார்கள்.  ஒவ்வொரு பிறந்த தினமும் அழகாக அலங்கரித்து கொண்டாடுவார்கள். தங்கள்  கவலை போக்க வந்த செல்வம் . என களிப்போடு வாழ்கின்றனர்.

   இப்போ போதெல்லாம் சோமு தன் மகளை சரியான் முறையில் வளர்க்க தன்னால் முடியுமா தனக்கு  வயதாகிறதே என் எண்ணிக்கலங்குவான். அவளுக்காக என சேமிக்கிறான்.  இன்னும் வாழ வேண்டும் மகளின் சுப கார்யம் வரையாவது தேக ஆரோக்கியத்துடன் வாழ்ந்து அந்த மகிழ்வைக் காணவேண்டும் என ஆசைப் படுகிறான். மகளுக்காக  வாழ வேண்டும் . மனிவிக்கு நாற்பத்தி மூன்றும் அவனுக்கு நாற்பத்தி எட்டுமாகிறது. நாமும் அவர்களுக்கு சுக நலனும் நீடிய ஆயுளும் கொடுக்க  வேண் டுவோம். 

10 comments:

அம்பலத்தார் said...

எங்கள் தாயகத்தின் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் எத்தன எத்தனை சோமுக்கள். அவர்களிற்கெல்லாம் சமர்ப்பணமாக நல்லதொரு பதிவு.

Chitra said...

இது சிறுகதையா? உண்மை சம்பவமா? அருமையான பகிர்வுங்க.

கவி அழகன் said...

இப்பட்டி எத்தனை உறவுகள் எல்லாம் போர் செய்த விளையாட்டு

ஆமினா said...

அருமையான பதிவு....

சுயநலமில்லாமல் தன் குடும்பத்திற்காகவே பாடுபட்டு தன் சுய நிம்மதியை இழந்தவர்கள் எத்தனை எத்தனை பேர்...........

நல்லதொரு படைப்பு

நிலாமதி said...

அம்பலத்தார்..........கவி அழகன் ....சித்திரா ....ஆமினா உங்கள் வருகைக்கு என் நன்றிகள்.

மாலதி said...

நல்ல ஆக்கம் பாராட்டுகள் சிறுகதை உண்மை சம்பவமாக இருப்பதால் மனதை தொடுகிறது நன்றி.

Muruganandan M.K. said...

இவ்வாறுதான் எமது சமூகம் குடும்பத்தி்றாக வாழும் மெழுகுவர்திகளாக.
எரிந்து அழியும் காலம் வரை....

தமிழ்த்தோட்டம் said...

அருமையான படைப்பு பாராட்டுக்கள் அக்கா

Yaathoramani.blogspot.com said...

மனம் உருகச் செய்து போகும் பதிவு

சீனுவாசன்.கு said...

சோமு குடும்பம் நலமோடும் வளமோடும் வாழ இறைவனை வேண்டுகிறேன்!