Followers

Friday, October 28, 2011

மண்ணாசை ....................


அந்த சின்ன ஊரின் அழகு  கம்பீரமாய்  வளர்ந்து நிற்கும் பனை மரங்கள் வேப்ப மரங்கள் ஆல மரங்கள் போன்றவை தான்.......இந்த ஊரில் தாமசு பிள்ளையும் மனவல் பிள்ளையும் அயல வீடுக்காரர் . வழக்கம் போலவே அன்றாட பணிகள். தாமசு அந்த ஊரில் கிராமசேவகர் பிரிவின் எழுத்தாளர் .மனவல்.. பெருந்தெரு மேற்பார்வையாளர் .  அயல வீடு அவர்கள் குழந்தைகளும்  இவர் குழந்தைகளும்  விளை யாடுவர்கள் ஒன்றாக   பள்ளிசெல்வார்கள். காலம் விரைவாய் போய் கொண்டு ......இருந்த்து.  குழந்தைகள் வளர்ந்து கல்லூரி சென்றார்கள் . தாமசின் மூத்தவள் தனக்கு ஒரு  கோழிக்கூடு   அமைத்துத்ரும்படி கேட்டாள். தன் மகளின் விருப் பை  தட்டாது அமைத்து கொடுத்தார். அங்கு ஒருகாணியில்  எல்லையை சில பனை மரங்கள் பிரித்து நிற்கும் .
தாமசுக்கும் மனவல் காணிக்கும் எல்லையாக வரிசையாக  பனை மரங்கள் நின்றன. அந்த இடத்தை தாமசு ..நிலையமாக் தெரிந்து அதில் அலுமீனிய   தகரம் கொண்ட கோழிக்கூடு தயாராகியது ... காலம் சென்றது ... பனை மரங்கள் ..குலை தள்ளி நொங்கு ...வரும் காலம்... 

ஒருநாள் தாமசு மனைவி ,   மனுவல் மனைவியை கூப்பிட்டு .. அந்த பனை மரங்கள் ..நுங்கு முற்றும் முன் வெட்டும்படி கேட்டாள். அதை   மனுவலிடம் சொன்ன தும் அவருக்கு கோபம். ஏனெனில்  பனை மரங்களின் பழங்கள் அவரது  கோழிக் கூட்டு கூரை  மீது விழுந்ததால் ..அவை சேதமாகி விடும் கூரை மாற்ற  வேண்டிவரும் ..தன்னால் முடியாது கோழிகூடு முதல் வந்ததா?  பனை மரம் முன் வந்ததா? என  வாக்கு வாதப் பட்டனர் .இருவீடும் பகை யானது ஆனால் .......மனிவிமார் ரகசியமாய் பேசிக்கொள்வர். ..குழந்தைகளும் வளர்ந்து மேற்படிப்புக்காக ....... வெளி நாடு சென்று விட்ட்னர். அவ்வூரில் போர் தொடங்கியது ...வெளி நாடு போக  கூடியவர்கள் எல்லோரும் ..சென்று விட்டனர். ...........  கோழிக் கூடும் கள்வரால் . சூறையடபட்ட்து ...மண்ணாசை பிடித்த் தாமசும்.......... மனுவலும் ...வயோதிபம் கண்டு .. முதியோர் இல்லம் சென்றனர். கோழிக் கூடு இருந்த  இடம்  தெரியாமல் போனது ...இன்றும் பனை மரம் மட்டும் ..பல  வடலிகள் கண்டு .............தன்னை சூழ காவோலைகளால் நிறைந்து சடைத்து நிற்கிறது .............

 மண் ஆசையாலும்   புரிந்துனர் வில்லாமளும்     வந்த பகை,  ...இந்த வாழ்வே நிஜம் என்னும் நிலை .......மனிதர்களை ஆட்டி ப்படைக்கிறது . மனிதம்  செத்து ரொம்ப நாளாகி விட்டது ..என்று திருந்தும் இந்த மானிடம் .

9 comments:

arasan said...

உணரனும் அக்கா..
அனைவரும் உணரனும் அக்கா ..

'பரிவை' சே.குமார் said...

மண்ணாசையும் பண ஆசையுமே இன்று மனித்த்தை மரிக்க்ச் செய்துவிட்டது. அனைவருக்கும் அவசியமான கதை.

அம்பலத்தார் said...

இந்த ஆசைதான் பல பிரச்சனைகளின் ஆரம்பம். நல்லதொரு கருப்பொருளைக் கையாண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

கவி அழகன் said...

வாங்க வாங்க

முற்றும் அறிந்த அதிரா said...

நீண்ட நாட்களின் பின்பு ஒரு அழகான ஊர்க்கதை... நான் தான் சற்று தாமதமாகிட்டேன்...

நம்பிக்கைபாண்டியன் said...

கதை போலவும் இருக்கு, அனுபவம் போலவும் இருக்கு, நல்ல கருத்து!

கலை said...

nalla kathai akkaa..anavarum unara vaeniyathu akkaa

சிவகுமாரன் said...

அந்த ஒற்றைப் பமைமரம் போல் தான் பலரது வாழ்க்கையும் போய்விட்டது . சுயநலம் என்னும் தீயால் கருகிப் போன காடாய் .. மனிதம்

Unknown said...

ஆசைகள் தரும் நிலை
மானிடம் மரணம்
http://vazeerali.blogspot.com/