அந்தச் சின்னஞ் சிறு கிராமம் ........காலை யில் மிகவும் சுறுசுறுப்பாக
இயங்கும் ..... பட்டணத்துக்கு போக பஸ் வண்டிக்கு விரைவோர்....காலை,ஆலயமணியின் பக்தி மிகு எழுப்புதல்கள் .. பள்ளிச் சிறார்கள் ..என்று வீதி ...போக்குவரத்தால் நிறைந்து இருக்கும்..
கலைவாணி அந்த ஊரின் பாட்டு வாத்தியார் பொண்ணு ...கல்லூரியின்
இறுதி யாண்டு படித்துக் கொண்டிருந்தாள் ......பெணகள் கல்லூரி அது .எந்நேரமும் சிரிப்பொலிக்கு பஞ்சமில்லை .....பெண்கள் என்றாலே மகிழ்ச்சி தானகவே வரும்.
ஆண்டு இறுதிகளில் ...வகுப்பேற்றம் நிகழும்..பன்னிரண்டாம்வகுப்பு, முடிவில் ( பிளஸ் டூ போன்று ) . பல்கலை யின் நுழைவு தேர்வு இருக்கும்.
பாட்டுவாத்தியாரின் மகள் என்பதாலோ என்னவோ கலை வாணிக்கு நன்றாக பாட்டு வந்தது .மேடைகளில் கல்லூரியின் விசேடங்களில் பாடுவாள். .கர்நாடக சங்கீதம் மட்டுமன்றி ...சினிமா பாடல்களையும் வகுப்பு பெண்கள் பாடச் சொல்லி கேட்பார்கள். வாழ்வை சினிமா ஆட்கொண்டிருந்த காலம்.
உயர்கல்லூரி மாணவிகளுக்கு வருட முடிவிலே பிரியாவிடை நடைபெறும் .
அயலிலுள்ள சகோதர பாட சாலையும் அழைக்க படுவர்.விழா முடிவில் விருந்துபசாரம் நடக்கும்.ஆசிரியைகள் தலைமை யாசிரியர் தம்பதியர் .சகிதம் .அயல்பாடசாலை அதிபர் குடும்ப ..சகிதம் விழா களை கட்டும். இதற்காகவே உள்ளவற்றில் நல்ல ஆடை உடுத்து ......அன்று பெண்களை சேலையிலும் பையன்கள் கோட் சூட் ஆங்கில உடையிலும் காணப்படுவர் .
.கேசவன் , அந்த ஊரின் ஆண்கள் கல்லூரி அதிபரின் மகன் .ஒரே ஒருபையன் ..இருவருடங்களுக்கு முன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப் படிப்புக்காக சென்றவன் . தலை நகரில் படித்துக் கொண்டிருந்தான் ....தந்தையின் விருப்புக்காக ...விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தான் ....
.கேசவன் , அந்த ஊரின் ஆண்கள் கல்லூரி அதிபரின் மகன் .ஒரே ஒருபையன் ..இருவருடங்களுக்கு முன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப் படிப்புக்காக சென்றவன் . தலை நகரில் படித்துக் கொண்டிருந்தான் ....தந்தையின் விருப்புக்காக ...விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தான் ....
கடந்த காலங்களில் ...பள்ளிமாணவிகளால் . கலைவாணியோடு
இணைத்து பேசப் பட்டவன் . இருவருக்கும் ஈர்ப்பு இருந்தாலும் ........கேசவனின் தந்தையின் கண்டிப்புக் கருதி ......இலைமறை காயாக..இருந்தது.காதல் ...விழாவின் இடையே ....கலை வாணி குழுவினரின் இன்னிசைக் கச்சேரி மேடையில் நிறைவடைந்ததும் ..மேடையில் ஒரே கூச்சல் .கலைவாணியை ...சினிமா பாடல் பாடும் படி ....அன்று கலை வாணி அழகான பொன் மஞ்சள் சேலையில் தேவதையாக காட்சியளித்தாள். கல்லூரியின் இறுதி நாள் சக .மாணவிகளின் அன்புக் கட்டளையை தட்ட முடியவில்லை ...
...என்ன பாடல் பாடுவது என்பது தான் அவளது உள்ளக் குமுறல் ...........கரவொலி மத்தியில் .......ஒலி வாங்கியை பிடித்து .............மேடையில் .......பாடினாள் ........http://www.youtube.com/watch?v=ம்ஹ௮ஏழ்ஷ்ப்கக்
" நீ..................தானே நாள் தோறும் நான் பாடக் காரணம் ."...........
............பாடலையும் கேட்டுப்பாருங்கள் ............
இதன் அர்த்தங்கள் ஆயிரம். உரியவர்களுக்கே புரியும். இது கேசவனுக்கு சொல்லும் காதலா .......கேசவனுக்கே புரியும். காலம் கை கூடினால் காதல்
கை கூடும். .விழா இனிதே முடிவடைந்தது .......கேசவனுக்கு அன்றிரவு நித்திரையே இன்றி புரண்டு கொண்டிருந்தான் .......
பள்ளி நினைவுகள் ஓராயிரம் கதை சொல்லும் . பள்ளிக்காலம் கடந்த பின் நினைவுகள் தரும் சுகமே தனியானது . பாடலின் சுவைக்காக பதியப்பட்ட் சிறு பதிவு.
உங்கள் நினைவுகளும் பள்ளிக் காலம் சென்றனவா ?
7 comments:
உண்மைதான் பள்ளிக்காலத்துக்கு அழைத்துப் போயிட்டுது கதை.
கதையோடு பாட்டு இணைஞ்சு ஊருக்குக் கொண்டு போயிட்டுது ஒருக்கா !
akka superb ponga..naanum pallikki poittu vanthuttaen... antha pattum sema akkaa ..enakku romba romba pudichchirukkua akka
பொன் வச்ந்தமாய் அருமைய்யான பகிர்வு..
பராட்டுக்கள்..
பாடல் வரிகளுக்கும் நீங்கள் சொல்லிப் போகும்
கதைக்கும்தான் எத்தனை எத்தனைப் பொருத்தம்
தொடர வாழ்த்துக்கள்
அருமையான பதிவு
எங்களையும் பள்ளிக்கால ஞாபகங்களை மீட்கவைத்ததற்கு நன்றி. ஒன்றா இரண்டா ஒரு பஸ் போனால் அடுத்த பஸ் என்பதுபோல எத்தனைபேர் பின்னாடி ஓடியிருப்பம்.
நினைவுகள் கிழிக்கப்பட்டும்
கழிக்கப்பட்டும் நம்மோடு ...
மேத்தாவின் வரிகளும்
உங்கள் கதைக்கு பலமாய்
பழமாய் இருப்பது உண்மை..
பாராட்டுக்கள்...
http://vazeerali.blogspot.com/
Post a Comment