Followers

Saturday, August 1, 2009

மனிதன் ....இறைவன் ஆகலாம். .

மனிதன்.....மிருகமாகலாம். அவன் மனிதன் ஆகலாம். அந்த மனிதன் இறைவன் ஆகலாம்.

நாற்புறமும் கடலால் சூழபட்ட அந்த தீவினிலே ஒரு ஒதுக்கு புறமான சிறு கிராமம் காலத்தின் கோலம்,அரக்கர் ஆட்சியில் ,அக்கிராமத்தில் இருந்தவர் எல்லோரும் வெளியேறி விட்டார்கள். ஒரு விறகு வெட்டியும் அவன் குடும்பத்தினரும் மட்டும் அங்கு வாழ்ந்தார்கள். கிராமத்தவர் எல்லாம் போய்விட ,அவனுக்கு போக்கிடமும் இல்லை.

அருகிலிருந்த சிறு கொட்டிலில் அமைக்க பட்ட வைரவர் சிலைக்கு தினமும் பூசை செய்து வருவதால் அதை விட்டு போகவும் மனமில்லை,கடவுள் காப்பாறுவார் என்ற அசைக்காத நம்பிக்கை அவன் எங்கும் போகவில்லை .

காலமும் ஓடிக்கொண்டு இருந்தது ,ஒருநாள் அவர்கள் வீட்டு நாய் ,சிறுசல சலப்பு கண்டு குரைக்க தொடங்கியது .இரவானதால்..... அவன் இரு சிறு குழந்தைகளுடன் ,வெளியில் செல்ல அஞ்சி ,பயத்துடன் இருந்தான் . விடிய எழும்பி பார்த்த பொது சில சப்பாத்து கால் தடயங்கள் தெரிந்தன .மறுநாள் வழக்கம் போல அவன் விறகு வெட்ட சென்றான்.

மனைவியும் ,தன் வீட்டு வேளையில் இருந்தாள். சிறுசுகள் இரண்டில்,ஒன்று ஏணையில் ( தொட்டிலில்) மற்றையது முற்றத்து மணலில் விளையாடிக்கொண்டு இருந்தது. மீண்டும் நாய் குரை்கவே அவள் எட்டி பார்த்தாள், இரு படை வீரர், நின்றனர். தண்ணீர் கேட்டனர் அவள உள் செல்லவே தொடர்ந்து சென்று , வீட்டில் யாரும் இல்லையா ? கணவன் எங்கே என்று கேட்டு ,வீடின் அறைக்கதவை திறக்க சொனார்கள் . அவள் திறந்ததும் , ஒருவன் அவள் வாயை துணியால் அடைத்தான் மற்றவன் அவளை சீரழித்தான், இப்படியே அவர்கள் வெறி தீர்ந்தும் ,யாருக்கும் சொல்ல கூடாதென எச்சரித்து சென்று விட்டனர்

சற்று நேரத்தில் விறகு வெட்டி வந்த போது சில அடையாளங்களை கண்டு ,மனைவியை கூப்பிடான் ,அவள் அழுதுகொண்டு ,கலைந்த தலையும் ,கிழிந்த ஆடைகளுடனும் விசும்பிக்கொண்டு இருந்தாள் ,அவனுக்கு விளங்கி விட்டது .அவளை தர தரவென்று இழுத்து சென்று வீட்டின் எல்லையிலுள்ள கிணற்றில்,நீரை அள்ளி கொட்டினான் .
நடந்ததை மறந்துவிடு,அரக்கர்கள் ஆட்சி செய்தால்,மனிதம் வாழாது என்று கூறி,வீட்டு சாமி படத்தின் குங்குமத்தை நெற்றியில் இட்டான் .இந்த கடவுள் கூட காப்பாற்ற வில்லையே என்று வீடின் முகட்டை வெறித்த படியே இருந்தான் .

பின்பு அவன் வைரவ சாமிக்கு பூசை செய்வதே இல்லை .அவள் யோசித்தாள்.உயிரை மாய்த்து கொள்ள நினைத்தாள். தான் அவமானத்தால் இறந்தால் பிஞ்சுகள் ,ஏங்கி விடுவார்கள் ,அவன் நடைபிணமாகி விடுவான் பிள்ளைகளை வளர்க்க கஷ்டபடுவான் . ஒரு தாய் வளர்ப்பது போல வருமா?அவனை எப்படி தேற்றுவது என்று எண்ணியவாறு கண்னயர்ந்தவள், தூரத்தே சேவலின் கூவல் கேட்டு ,இயற்கையுடன் போராட,அன்றாட கடமைகள் செய்ய புறப்படாள் . ...

பிஞ்சுகளுக்கும் அவனுக்கும்,காலை தேநீர் வைக்க ....

அவன் தான் இறைவன்(கடவுள் )அவளுக்கு


அவள் ?.......... .

3 comments:

சப்ராஸ் அபூ பக்கர் said...

அருமையான கதை.....

வாழ்த்துக்கள்..... தொடருங்கள்...
அப்படியே எங்க ஏரியாவுக்கும் வந்து போங்க.......

நிலாமதி said...

நன்றி உங்கள் வருகைக்கும் பதிவுக்கும். உங்க தளத்தின் பெயரை அறிய தரவும்.

Admin said...

உங்கள் கதைகளுக்கு ஒரு தனி இடம் இருக்கிறது... தொடருங்கள் வாழ்த்துக்கள்...