நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Tuesday, August 11, 2009

அவளுக்கு ஒரு "வாரிசு " .......

அவளுக்கு ஒரு "வாரிசு " ..........

அமைதியான அந்த கிராமத்தின் ....இளங்கதிரவன் மெல்ல ஒளி பரப்ப் தொடங்கிய அந்த காலை வேளையில் குயிலினமும் பறவைகளின் ஆர்ப்பரிப்புகளுடனும் பொழுது புலர்ந்தது . காலை பஸ் பயணத்துக்கு மகனை எழுப்ப தேநீர்க்குவளையுடன் செல்லம்மா .அவன் கணேசு அண்மையில் உள்ள நகரத்தில் மரக்கறி வியாபாரம் செய்பவன். எழுந்து காலை க்கடனை முடித்து தேநீரை குடித்து தாயிடம் விடைபெற்றான். அவள் தானும் தேநீர் பருகி ,கூட்டு மாறு எடுத்து முன் முற்றத்தை நீர் தெளித்து கூட்டுகையில் அவள் நினைவு ...கடந்த காலம் நோக்கி சென்றது .

செல்லம்மா , ஆசைப்பிள்ளை தங்கம்மா தம்பதியருக்கு மூத்த பெண் . இரண்டாவது பெண்ணியே எல்லோரும் திருமணதுக்காய் கேட்டனர் .
ஏன் எனில் இவள் செல்லம்மா மூத்தவள் பிறவி ஊமை . இரண்டாவது மகளின் கணவர் தலை நகரில் வேலை பார்த்து கொண்டிருந்தார். செல்லம்மா முழு வேலையும் செய்யும் . தந்தை ஆசை பிள்ளையாருக்கு மூத்தவள் இருக்க இரண்டாவது மகளை கட்டி கொடுக்க விருப்பமில்லை இருபினும் அவளுக்கும் வயது வந்து விட்டது . தங்கையின் கணவர் பயணத்தால் வரும் பொது கிணற்றில் தண்ணீர் அள்ளி கொண்டு இருந்தாலும் ஓடி வந்து தங்கைஇடம் மீசையை முறுக்கி காட்டி ,கையில் பயணப்பையை காட்டி சேதி சொல்வாள் தங்கைக்கு .

கால ஓட்டத்தில் அவர்களது தோட்ட வேலைக்கு வரும் செல்லக்கண்டு இவளின் உற்ற நண்பனானான் . ஊராரும் பேசிக்கொண்டனர்.அவனும் இவளுடன் சைகையிலே ஆயிரம் கதை பேசிக்கொள்வர்.இப்படியாக் தொடர்ந்த நட்பு ஒரு நாள் எல்லை மீறி சென்று விட்டது.சில நாட்களாக செல்ல கண்டு தோட்டத்துக்கு வருவதும் நின்றது . அவன் தலை நகரம் போய் விடதாக சொன்னார்கள். ஒருநாள் அவள் காலை வேளை...வாந்தி எடுக்கவே தாய் தங்கம்மா திகைத்து விடாள். வற்புறுத்தி கேட்ட பின் அதற்கு காரணம் செல்லக்கண்டு என்று சொனாள்.

காலம் தான் யாருக்காகவும் காத்திருபதிலையே . பத்தாம் மாதம் ஆண் குழந்தையை பெற்று எடுததாள். ஊராரின் வசை பேச்சுகள் தாங்காமல்..
ஒருவர் பின் ஒருவராக ஆசைப்பிள்ளையும் ..தங்கம்மாவும் போய் சேர்ந்து விட்டனர். தங்கையும் கணவருடன் தலை நகரம் சென்று விடாள். செல்லக்கண்டு ஊருக்கு வரவே இல்லை. தலை நகர் சென்ற ஊரவர்கள் சிலர் அவனை ஒரு ஆட்டோ சாரதியாக கண்டனர். சிறுவன் கனேசுவும் , சாதாரணமாய் பள்ளி சென்றான். சில கர்வம் பிடித்த சிறுவர்கள் அவனை எள்ளி நகையாடினர். இதனால் பத்தாம் வகுப்புடன் பாடசாலையை விடான்.


பின்ப வீட்டில் வரும் காய் கறி களை விற்க தொடங்கியவன் , சற்று பணம் சேரவே , தாய்க்கு தேவையானவைகளை வாங்கி கொடுப்பான். செல்லம்மாவும் சிக்கனமாய் சேமித்து , ஒரு பெரிய தொகையை ,வங்கியில் மரக்கறி கடை வைத்திருக்கும் ஊர் பெரியவர் , இவனின் பண்புகளை கண்டு , தன்னுடன் சேர்த்து கொண்டார். இடையில் தன் தந்தையை பற்றி கேட்க மனம் வந்தாலும் தாயின் நிலை கண்டு , மனதுக்குள் வரும் கேள்வியை , அடக்கி கொள்வான்.

முற்றத்தை கூட்டி முடித்தவள் ,காலை உணவை முடித்து மதிய உணவுக்காக தயாரானாள். வாசலில் தபாறகாரனின் மணிச்சத்தம் கேட்க , சென்று பார்த்தவளுக்கு அதர்ச்சி ........ஒரு தந்தி அவள் பெயருக்கு வந்து இருந்தது . செல்லக்கண்டு விபத்து ஒன்றில் காலமாகி விடான் என்று அந்த ஊர் வாசி ஒருவர் அறிவித்து இருந்தார். இருந்த போதும் தன்னை கவனிக்க வராதவன் . இறந்தென்ன இருந்தென்ன . கிணரடிக்கு சென்றவள் தலையில் நான்கு வாளி நீரை அள்ளிக்கொட்டியவள் , மாலையில் வர இருக்கும் தன் வாரிசுக்காக,மகனுக்காக சமைக்க தொடங்கினா. இனி எல்லாமுமே அவன் தான்.

தன் தள்ளாத காலத்திலும் , தன்னை தாங்குவான் என்ற மன உறுதியுடன் , விரைவாக செயல் படாள். தான் பிறவி ஊமையாய் இருந்தாலும் ...தன்னை திருமணம் செய்ய யாரும் முன் வராத போதும்....தனக்கு கிடைத்த வாரிசு .....தன்னை காப்பான் என்ற நிம்மதியில் அவன் வரும் பாதை நோக்கி ,பஸ் வண்டி வரும் வேளை நோக்கி ....

காத்து கொண்டிருக்கிறாள். .

7 comments:

யோ (Yoga) said...

நன்றாக இருந்தது உங்கள் கதை, மென்மையான சோகம் இழைந்தோடியது உங்கள் கதையில், நகரத்தில் என இட வேண்டியது நரகத்தில் என மாறி உள்ளது என நினைக்கிறேன்.

ஈழத்து நிலவு said...

கதை நன்றாக உள்ளது.
இப்படி நிறைய பேர் இருப்பினம் பல பெண்களுடைய வாழ்க்கை சீரழியக்காரணம் இந்த சமூகமே..கேலிப்பேச்சுக்களும்,நக்கல்களும் மீண்டும் தவறு செய்யவே தூண்டும்.

சந்ரு said...

உங்கள் கதை அருமை, சொல்லும் விதம் கவரக்கூடியதாக இருக்கிறது தொடருங்கள் வாழ்த்துக்கள்..

நிலாமதி said...

ஈழத்து நிலவே .........இந்த நிலாமதியின் தளத்துக்கு வருகை தந்தமைக்கும் பதிவிட்டமைக்கும் நன்றி .

நிலாமதி said...

நன்றி யோ .........உங்கள் வருகைக்கு . நகரத்தில் உள்ள மரக் கறிக் கடை என்று தான் எழுதினேன்.

நிலாமதி said...

மன்னிக்கவும் யோ .....திருத்தி விடேன்.

நிலாமதி said...

சந்துரு உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி ...........l