நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Saturday, August 15, 2009

"போத்தலை தொடமாடேன் ".......

"போத்தலை தொடமாடேன் "........

அந்தக் காலை வேளையின் அமைதியை க லைத்தது ......சளீர் " என்ற சத்தம். என்னம்மா என்றபடி ராகவன் குசினியில் இருந்து வந்தான் . நிலாக்குட்டி ...யின் பால் போத்தல் தரையில் ...சிதறி பாலும் ...சிந்தி இருந்தது . வீரிட்டு அழுதாள். நிலாக்குட்டி . "இனி போத்தலில் குடிக்க மாடேன்."என்று மழலையில் ....கண்ணீர் வழிய நின்றாள். தந்தை ராகவன் அவளை தேற்றிய வாறு பிள்ளைக்கு வேறு போத்தல் மம்மி வாங்கி வருவா . என்று சொன்னாலும் திரும்ப திரும்ப "நான் போத்தலில் குடிக்க மாடேன்." என்றாள்


ஒரு வயதான நிலாக்குட்டிக்கு போத்தல் மறந்து " கப் " (கோப்பையில்)இல் குடிக்க முயற்சி எடுத்து கொண்டார்கள் ராகவனும் மதியும்.
இரவில் சிந்தாமல் குடிப்பாள் என்ற ஆதங்கத்தில் மதியும் அசட்டையாய் இருந்தாள். இன்று ராகவனுக்கு ஒரு நல்ல அனுபவம்

.மாமியார் காய்ச்சல் காரணமாக குழந்தையை பராமரிக்க முடியாததால் வேலைக்கு விடுமுறை (லீவு) எடுத்து இருந்தான் . மதியும் வருட இறுதி என்பதால் விடுமுறை எடுக்க முடியவில்லை. இருவரும்
கலந்து பேசி ராகவன இன்று வீடில் நின்றான..மாலை ஆகியது

மதி யின் வரவை மூவரும் எதிபார்த்தார்கள். ராகவன் நால்வருக்குமாக தேநீர்கலந்தான். மதியோ ...நிலாக்குட்டி கோப்பையில் தேநீர் பருகுவதை ...அதிசயமாக பார்த்தாள்.

அவளுக்கு புரியவில்லை . ராகவன் சொல்லும் வரை.

ஆதிர்ச்சி வைத்தியம் சில சமயம் தேவை படுகிறது ...............

குறிப்பு . "வேறு போத்தல் " என்று ஏமாந்தால் அத்ற்கு நான் பொறுப்பல்ல .....

6 comments:

சப்ராஸ் அபூ பக்கர் said...

போத்தலை தொட மாட்டேன்.... போதையோடு வாசிக்க ஆரம்பித்தேன்... ஆனால் சிறு பிள்ளைகளின் போத்தலால் கதை மெருகு படுத்தப் பட்டிருந்தது.

நல்ல கற்பனை... வாழ்த்துக்கள் நிலாமதி......

தேவன் மாயம் said...

நல்ல வட்டாரத் தமிழில் எழுதுகிறீர்கள் நிலாமதி!!!

நிலாமதி said...

அபூபக்கார் .............உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி . கதை உண்மை பெயர்கள் கற்பனை.

நிலாமதி said...

தேவன் .........உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி . என் இனிய தமிழ் ரொம்ப பிடிக்கும். என் தாய் மொழி . தாயை நேசிப்பது போல தமிழை நேசிக்கிறேன்.

யோ (Yoga) said...

நான் கூட குடிக்க ஏதோ போதையா தர போறீங்கலோன்னு தப்பா வந்து ஏமாந்துட்டேன்.

ஆமா இப்படியே கதை எழுதி நீங்க சிறுகதை தொகுப்பு பிரசுரிக்கலாம். முயற்சி செய்யுங்கள்.

பின்குறிப்பு மெகா சீரியல் மட்டும் எழுத போய்டாதீங்க. உங்கள எல்லாரும் வெறுத்திடுவாங்க..

நிலாமதி said...

வரவுக்கும் பதிவுக்கும் நன்றி நண்பா.காலப்போக்கில் உங்கள் எண்ணத்தை செயலாக்குவேன்.