Followers

Wednesday, August 19, 2009

(தொடர்ச்சி )...பட்டமும் பெறப்பட்ட வேளை

(தொடர்ச்சி )...........பட்டமும் பெறப்பட்ட வேளை .

இடி போல வந்த செய்தி எனை அதிர வைத்தது
இரக்கம் சிறிதும் இல்லாத வான் குண்டு
என் தாயை சிதைத்தது என்று

விம்மி வெடித்தேன் விழுந்து புரண்டேன்
காலனே உனக்கு கண் இல்லையா
அயல் உறவு ஊரோடு புலம் பெயர
என் தாயை ஏன் மண் மூடியது

மாறாது மாறாது மனதில் உள்ள பாரம்
மண் கொண்டு சென்றாலும்
மலர் தூவ நான் வருவேன் ........


.என் தாயின் இறப்பு நாள் அண்மிக்கிறது
தினமும் நினைக்கும் கவிதைகளில் ஒன்று

4 comments:

ஈரோடு கதிர் said...

//மாறாது மாறாது மனதில் உள்ள பாரம்//

உங்கள் வலி புரிகிறது நிலா

நிலாமதி said...

நன்றி கதிர ......... உங்க வரவுக்கும் பதிவுக்கும் .

என்தாயின் உடலை பார்க்க கிடைக்கவில்லை.நான் இறக்குமட்டும்
தீராத சோகம்.தினமும் நினைக்கிறேன்.

சீமான்கனி said...

படிக்கும் பொது ஈழத்து நண்பன் ஒருவன் நியாபகம் வருகிறது நிலா...
வலிகளும்.....

நிலாமதி said...

வணக்கம் சீமான் கனி என் வலியின் பதிவை நீங்களும் பக்ர்ந்துகொண்டதில் ஆறுதல் அடைகிறேன். நன்றி.