Followers

Tuesday, September 1, 2009

யாரை நம்பி ..................

யாரை நம்பி ..............


.......கடந்த வாரம் ஒரு மரண வீடுக்கு சென்று இருந்தேன். ஒரு பெண்மணி எழுபது வயது இருக்கும் . ஊரில் பாலர் வகுப்பு ஆசிரியராக இருந்தவர் . காலம் தன் வேலையை செய்ய நானும் வளர்ந்து பெரியவளாகி என் படிமுறைகளை கடந்து இன்று ஒரு அம்மா வாக புலம் பெயர்ந்து உலகின் குளிர் iகூடிய நாட்டில்.


என் எண்ண aஅலைகள் மீளவும் தாயகம் நோக்கி ...........நான் பிறந்து வளர்ந்தது அமைதியான் ஒரு கிராமம் . அங்கு அந்தரீச் சர் தன் மூன்று ஆண் குழந்தைகளுடன் வாழ்ந்தார் .கணவன் ஒரு புடவைகடையில் வேலை பார்த்து வந்தார் . மூன்று ஆண் குழந்தைகள். வீட்டு வேலை , பாடசாலை வேலை என என்ன கஷ்ட பட்டு இருப்பார் அவர்களை வளர்க்க. மூத்தவன் , ஏ எல் (பன்னிரண்டாம் வகுப்பு )படித்து முடிய பல் கலை கழகம் செல்ல புள்ளிகள் போதவில்லை , ஒரு மாமன் முறையானவர் துணையுடன் , பிரித்தானியா அனுப்பி வைத்தார் . அங்கு அவன் படித்து பட்டம் , நல்ல உயர் தொழிலும் செய்வதாக ஊரில் பேசிக்கொள்வார்.

இரண்டாவது மகனும் படித்து நாட்டுப் பிரச்சினையால் மேற்படிப்பு படிக்க முடியாமல் ,ஜெர்மனிக்கு புறப்பட்டான். மூன்றாவது கடைக்குட்டி , குட்டி யானை போல. எந்நேரமும் தாயின் (கைக்குள் )சீலைக்கு பின் திரிவான். நம்ம ஊரில் ராணுவகக்கெடு பிடி . இளம் பையன்களை பிடிப்பதும் , ஆட்காட்டி முன் காட்டி கொடுப்பதுமாய் இருந்த காலம் . பல பிரச்சினைகளுக்கு மத்தியில் தற்போது நான் வசிக்கும் குளிர் நாட்டுக்கு அனுப்பி வைத்தார் . காலம் ஓடிக்கொண்டே இருந்தது , நானும் திருமணமாகி என ஊரில் வாழ்த்து கொண்டிருந்தேன். ஒரு நாள் ஒரு துயர செய்தி .அவரது மகன் மாரடைப்பால் காலமாகி விடார் என்று . அதை அங்கு வசிக்கும் வெள்ளைக்கார பெண் ஒருவர் தான் அறிவித்து இருந்தார். இவரும பல கஷ்டங்களுக்கு மத்தியில் , லண்டனுக்கு சென்று , மகனின் கிரிகைகளில்பங்கெடுத்தார் . . இறந்த அதிர்ச்சியுடன் மேலும் அதிர்ச்சி இவருக்கு அறிவித்த பெண் , வெள்ளைக்காரி, மருமகள் என்பது , அவனுக்கு ஆணும் பெண்ணுமாக் இரு வாரிசுகள் வேறு. என்ன செய்வது . இவர் தாயகம் திரும்பி விடார். இருப்பினும் அவள் இவருடன் தொடர்புகளை வைத்திருந்தார்.

பின் சில காலம் கணவனும் வலிப்பு நோய் காரணமாகஇறந்து விட்டார். இவர் தனித்து வாழும் காலத்தில் இரண்டாவது மகனுக்கு பெண் பேசி அனுப்பி விட்டார். அங்கு சென்றவள் அவனின் கோலத்தை பார்ர்த்து மணமுடிக்க மறுத்து விடாள், இவருக்கு துன்பத்தில் மேல் துன்பம் , இறுதியாக மூன்றாவது மகன் , பொறுபேற்று நான் வசிக்கும் குளிர் கூடிய நாடுக்கு வந்து விட்டார். சில காலம் இன்பமாய் வாழ்ந்தார். பின்பு மகன் இவரை கவனிப்பதில்லை . நேரத்துக்கு வீட்டுக்கு வருவதில்லை , இப்படியாக இருக்கும் காலத்தில் அவனுக்கும் ஒரு பெண் சிநேகிதியாம். அவள் சரித்திரம் அறிந்தால்........... ஏற்கனவே இரண்டு பிள்ளைகளை பெற்ற வளாம் .கணவன் கை விட்டு சென்று விடானாம் . இவருக்கு அவளுடனும் ஒத்து வரவில்லை . நம்ம ஊரவார்களை கண்டால் பேசமாடார்.


சோகத்தின் மேல் சோகம் , பின்பு தனியாக ஒரு இல்லிடம் எடுத்து வாழ்ந்து வந்தார். ஆசிரியரின் பிள்ளைகளே இப்படி செய்து விடார்கள் எனறு ஊரார் பேசிகொண்டார்கள் . பின்பு நோயும் மூப்பும் வாட்ட ஒரு பராமாரிப்பு நிலையத்தில் வாழ்ந்தார். இடையில் மகன் மட்டும் வந்து பார்த்து செல்வதாக கேள்வி பட்டோம். அந்தஆசிரியரின் வாழ்வை நினைக்கவே கண் கலங்கு கிறது. பெற்ற பிள்ளைகள் இப்படி செய்து விடார்கள்.

புலம் பெயார் நாடுகளில் என்ன வாழ்கை என்று வாழ்வே வெறுத்து போகிறது . இயந்திரங்களோடு இயந்திரமாக் வாழவேண்டிய வாழ்வு .

இந்த நேரம் என என நினைவில் நிழலாடும் பாடல்.........


..தென்னையை பெற்றால் இளநீரு ,
பிள்ளயை பெற்றால் கண்ணீரு ,
பெற்றவள் மனமோ பித்தம்மா ,
பிள்ளை மனமோ கல்லம்மா ...............

...இப்படி எத்தனை பிள்ளைகள் கல் மனமாய் வாழ்கின்றனரோ ?

17 comments:

கவி அழகன் said...

..தென்னையை பெற்றால் இளநீரு ,
பிள்ளயை பெற்றால் கண்ணீரு ,
பெற்றவள் மனமோ பித்தம்மா ,
பிள்ளை மனமோ கல்லம்மா ...............
ரொம்ப நல்லாயிருக்கு

ஈரோடு கதிர் said...

//புலம் பெயார் நாடுகளில் என்ன வாழ்கை என்று வாழ்வே வெறுத்து போகிறது . இயந்திரங்களோடு இயந்திரமாக் வாழவேண்டிய வாழ்வு .//

நல்லது நடக்கட்டும்

ரெட்மகி said...

பெற்றவர்களை பிள்ளைகள்
இப்படி நடத்துவது எக்காரணம்
கொண்டும் மன்னிக்க முடியாத
குற்றம்...

இப்படி பட்ட மனிதர்கள் வாழத்
தகுதி அற்றவர்கள்

நிலாமதி said...

யாழவன் உங்கள்வருகைக்கு நன்றி .நட்புடன் நிலாமதி

நிலாமதி said...

கதிர் உங்க வருகைக்கும் பதிவுக்குமென் நன்றிகள்.

நிலாமதி said...

ரெட்மகி ...உங்கள்வருகைக்கு
நன்றி .இப்படி எத்தனையோ
பெற்றவர்கள் வேதனையில். காவோலை விழ குருத்தோலை சிரிக்குமாம்.

சீமான்கனி said...

இப்படி பட்ட சுயநல வாதிகள் வாழவே தகுதி அற்றவர்கள்....
வினை விதைதவனும் வினைதான் அருத்தகவேண்டும் என்றாவது ஒருநாள்...

SUMAZLA/சுமஜ்லா said...

பல இடங்களில் அப்படித்தான் நடக்கிறது. இதுவும் நாகரிகத்தின் வளர்ச்சியின் விளைவோ?!

SUMAZLA/சுமஜ்லா said...
This comment has been removed by a blog administrator.
Admin said...

இன்று மனசாட்சி மாயமாகிவிட்டது. இன்று எல்லாமே மாறிவிட்டது. மனிதன் மனிதனாக இல்லை.

Admin said...

வெளிநாடுகளில் இருந்து பதிவிடும் இலங்கைப் பதிவர்களை தொகுக்கும் "சொந்தங்கள்"

http://sonthankal.blogspot.com வலைப்பதிவில் உங்கள் வலைப்பதிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

நிலாமதி said...

சீமான்கனி.......உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி

நிலாமதி said...

சுமளா நாகரிகம் வளர்ந்தாலும் ,பிள்ளைகள் பெற்றோர் பாசம் ஏன் மறைய வேணும் வரவுக்கு நன்றி ..

நிலாமதி said...

சுமளா இரண்டு தடவை பதிந்த்ததால் நீக்கப்பட்டது .

நிலாமதி said...

சந்துரு நலமா? உங்க வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

கரவைக்குரல் said...

எம்மவரகள் எந்த வழியில் இப்போது சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது ரொம்ப கவலையளிக்கிறது

சிறுகதை வடிவில் பகிர்விற்கு நன்றி நிலாமதி

நிலாமதி said...

வணக்கம்கரவைக்குரல்....

......உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் என் நன்றிகள்.