Followers

Tuesday, August 18, 2009

சில ஞாபகம் தாலாட்டும் ..........

சில ஞாபகம் தாலாட்டும் ..........

அம்மா கை பிடித்து நான் நடந்தது ஞாபகம்
அப்பா முதுகில் செய்த சவாரி  ஞாபகம்
படுக்கையில் சிறுநீர் கழித்த மறு நாள்
என்னையும் படுக்கை போர்வையும்
துவைத்து காலில் செல்ல அடி ஞாபகம்,
 ,அப்பம்மா,பாட்டி , விலக்கு பிடித்த ஞாபகம்.
அம்மாவின்  செருப்பும், குடையும் பிடித்து
முற்றத்து ,வெய்யிலில் உலா வந்த ஞாபகம்
அயல் வீட்டு தம்பியை காட்டி எனக்கும
ஒரு தம்பி வேணுமென்று அடம் பிடித்த ஞாபகம்
மூணு வயதிலே புத்தக பையை சுமந்து காட்டிய ஞாபகம்
பாலர் பள்ளிக்கு தாத்தாவுடன் சவாரி சென்ற ஞாபகம்
முற்றத்து மாமரத்தில் பழமும் காயும் சுவைத்த ஞாபகம்.
கோமதியின் (பசு) பாலுக்காய் , இரவில் விழித்த ஞாபகம்
கோவில் விழாவில் , அப்பா மடியில் கச்சான் ( நிலக்கடலை )
கடலை கொறித்து தின்ற ஞாபகம் .
பக்கத்து வீடு பாமாவுடன் டூ ........விட்டு நான் வென்ற ஞாபகம்.
தொட்டித் தண்ணீரில் நீச்சல் போட்ட ஞாபகம் .
தூங்கும்  பாப்பாவை விளையாட கூப்பிட்ட  ஞாபகம் ...
வளர்ந்ததும் அவனுடன் சண்டை போட்ட ஞாபகம் .
அவன் புளியங்காய்க்கு எறிந்த கல் என் தலையில் பட
என்னை கட்டி அணைத்து , கண்ணீர் துடைத்து
"சொல்லாதே" என சத்தியம் வாங்கிய ஞாபகம் .........

இத்தனை ஞாபகங்களை என் தாயகத்தில்
விட்டு வந்த ஞாபகமாய் .......என் செல்ல மகள்
என் பிறந்த நாளுக்கு எழுதிய பதிவுகளாய் .....

..உங்களுடன் நான். .

10 comments:

யோ வொய்ஸ் (யோகா) said...

ஞாபகங்கள் அருமையாக இருந்தன. இவற்றில் சில எனக்கும் பொருந்தும்.

சப்ராஸ் அபூ பக்கர் said...

ஞாபகங்கள் அருமை.....

///அவன் புளியங் காய்க்கு எறிந்த கல் என் தலையில்
என்னை கட்டி அணைத்து , கண்ணீர் துடைத்து
"சொல்லாதே" என சத்தியம் வாங்கிய ஞாபகம் ///

இது நல்ல ஞாபகம் தான்......

வாழ்த்துக்கள்....

நிலாமதி said...

யோ ..........உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி .

நிலாமதி said...

நன்றி அபூ..........அண்ணாவாக இருந்து கல் எரிந்த்துண்டா ?
மாங்காய் .....புளியங்காய்.........?

சீமான்கனி said...

//படுக்கையில் சிறுநீர் கழித்த மறு நாள்
என்னையும் படுக்கை போர்வையும்
துவைத்த// ஞாபகம்....
நானும் முழ்கிபோகிறேன்.....

நிலாமதி said...

நன்றி சீமான் கனி ..........ஒரு இடத்தில உங்கக் பெயரை செம்மாங்கனி என் எழுதி விடேன் மன்னிக்கவும் . நன்றி உங்க பதிவுக்கும் வரவுக்கும். தொடர்ந்து இணைந்து இருங்கள். அப்படியே நம்ம நட்பு வட்டத்திலும் உங்க தலையை காடுங்க.நன்றி.

Anonymous said...

//முற்றத்து மாமரத்தில் பழமும் காயும் சுவைத்த ஞாபகம்.//

எனக்கும் இது உண்டு..

அன்புடன்,
அம்மு.

நிலாமதி said...

அம்மு மது உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றிகள்

Unknown said...

ஹும்....பழைய ஞாபகங்களைக் கிளறிவிட்டீர்கள்

நிலாமதி said...

நன்றி கீத் உங்க வரவுக்கு. தொடர்ந்திருங்கள்