அத்தை மகளே ...போய் வரவா ?
மேகங்களுள் நீந்தி வந்த விமானம் தரை தட்ட ஆயத்தமாக விமானப்பணிப்பெண் இருக்கை பட்டிகளை சரி செய்யும் படி சைகை மூலம் காட்டினாள் கனவி லிருந்து விடுபட்டவன் போன்று பாஸ்கரன் தன பட்டியை சரி செய்து கொண்டான். விமானம் மத்திய கிழக்கு நாடொன்றில் தரை இறங்கியது. எல்லாம் கனவு போலானது அவனுக்கு. தன தாய் நாட்டை விட்டு புறப்பட்டு கிட்ட தட்ட பதினொரு மணித்தியாலங்கள் ஆகி விட்டன. இங்கு ஒரு கம்பனியில் ஒப்பந்த அடிப்படையில் கட்டிட நிர்மாணம் ச ம்பந்தமாக வேலை செய்வதற்கு அனுமதி கிடைத்து வந்திருந்தான். முகவரின் , வரவுக்காக காத்திருந்தவனின் சிந்தனை தாயகம் நோக்கி ............
கொழும்பிலே ஒரு பிரபல கட்டிட நிர்மாண காரியாலயத்தில் வேலையில் இருந்த போது அன்றாட தேவைகளுக்கும் விலை வாசிகளுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் வெளி நாட்டு வேலை வாய்ப்புக்காக விண்ணபித்து இருந்தான் பாஸ்கரன். அவனுக்கு இவ்வளவு விரைவில் கிடைக்கும் என எண்ணவே இல்லை. மகிழ்ச்சி ஒரு புறம் அவளது பிரிவு ஒருபுறமாக் புறப்பட்டு விட்டான் . பாஸ்கரன் தந்தையை இழந்து ஒரு வருடமே ஆகியிருந்தது தன் இரு தங்கைகளையும் ஒரு நல்ல நிலைக்கு வைக்கும் பணியும் வீட்டுப் பொறுப்பும் அவனி டம் ஒப்படைத்து விட்டு , தந்தை காலமாகி விடார். அவருக்கு அதிக வயது இல்லய் என்றாலும் , வருத்தமும் துன்பமும் சொல்லிக்கொண்டா வரும் . தலைக்குள் விறைப்பு என்று படுத்தவர் பின் அது மூளைக் கட்டியாக்கி சத்திரசிகிச்சை வரை போய் சென்ற வருடம் , அவரை காலன் கவர்ந்து சென்று விடான். பாஸ்கரன் முடிந்த வரை வீடு பொறுப்பையும் தங்கைகளின் பாடசாலை தேவைகளையும் அவனே பார்த்து கொண்டான். இதுவரை தந்தையின் சேமலாப பணம் கை கொடுத்தது கடந்த மூன்று மாதங்களாக் தான் மிகவும் கஷ்ட படான். இதற்கிடையில் அவனது தந்தையின் ஒன்று விட்ட சகோதரி குடும்பம் நாட்டு பிரச்சினையால் கொழும்பு வந்து சேர்ந்தார்கள். அவர்களின் ஒரே மகள் சந்தியா , ஆசிரியையாக வவுனியாவுக்கு அண்மையில் ஒரு சிறு கிராமத்தில் படிப்பித்து கொண்டு இருந்தாள். அங்கு பிரச்சினையால் மாற்றல் வாங்கி கொண்டு கொழும்புக்கு வந்திருந்தார்கள். இடமும் புதிது ,அவர்களுக்கு தேவையான் உதவிகளை செய்து கொடுத்தான் பாஸ்கரன். அவர்கள் இவர்களையே நம்பி வந்திருந்தார்கள். இவனது நட்பு அண்மையில் தான் காதலாகியிருந்த்து .
முறை மாமா ஏதும் சொல்ல மாட்டார் என்ற தைரியத்தில் ஆழமாக் இறங்கி விடான் காதலில் . ஆனால் தன் தங்கைகளின் நல் வாழ்வையும் மறக்க வில்லை இரு வீட்டு பெற்றவர்களுக்கும் தெரியாது. அதற்கிடையில் இப்படி வெளி நாட்டு அழைப்பு வரும் என எண்ண வில்லை அவன். விடை பெறும் நாளும் வந்தது
.எல்லோருக்கும் பயணம் சொல்லி புறபட்டு விட்டான் . வவனியா மாமா தான் விமான நிலையம் வரை வந்தார். முதல் நாள் இரவு , சந்தியா கோவிலுக்கு சென்று வரும் வழியில் ,. சந்தியாவை கண்டு சத்தியம் வாங்கி இருந்தான். தான் வரும் வரை தனக்காக் காத்திருக்கும் படியும் ....வந்ததும் பெற்றவர்களிடம் சம்மதம் வாங்கி திருமணம் செய்வதென்று உறுதியுடன் கூறியிருந்தான். காலம் இவர்களுக்காக காத்திருக்குமா ? காதல் திருமணத்தில் முடியுமா? குடும்பத்தில் ஒரே பெண்ணான சந்தியாவை இவனுக்கு கொடுப்பார்களா ? ...........ஏக்கங்களுடன் காத்திருக்கிறான் பாஸ்கரன்.
காலம் தான் இவர்களை சேர்த்து வைக்க வேண்டும்.
Followers
Subscribe to:
Post Comments (Atom)
-
மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்...
-
என் இதயம் கவர்ந்தவளே கண்கள் கண்டதால் கவரபட்டதால் காதல் கொண்டதால் கருத்து ஒன்றி அதனால் இணைந்து கொண்ட இருவர் கருத்து வேறு பட்டாலும் ...
-
அஸ்தமனத்தில் ஓர் உதயம் ............. அதிகாலை பனிக்குளிர் மெல்ல வாட்ட .........இன்னும் சற்று நேரம் உறங்கலாம் போலிருந்தது ராஜரத்னம் ஐயாவுக்க...
5 comments:
நிலா...
புதினாமா? உண்மையா?
உண்மையாக இருப்பின் வாழ்த்துகள்
கதை உண்மையுடன் சிறு கற்பனையும் சேர்ந்தது.
கதை நல்லாயிருக்கிறது அக்கா
பயப்பிடாதிர்கள் கட்டாயம் பெண் கொடுப்பார்கள்
காரணம் வெளிநாடு
ஆனால்
அவன் உள்நாட்டில் இருந்திருந்தால்
கொடுப்பது சந்தேகம்தான் இதுதான் இந்தக்காலம்
நன்றி தீயா ...உங்கள் வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றிகள்.
நன்றாக உள்ளதுர சித்தேன் அக்கா
Post a Comment