Followers

Friday, September 18, 2009

நான் என் வரலாறு கூறுதல்.



நண்பர் ராஜராஜன் என்னை நான் பதிவர் உலகுக்கு  வந்த வரலாறு பற்றி
எழுத  சொல்லியதற்கிணங்க. இதோ சில வரிகள். 

எனக்கு படிக்கும் காலத்தில் ஆடல்... பாடல் ...நாடகம்.... நாட்டுக் க்கூத்து மேடை பேச்சு என்பன நன்றாக வரும் . எனது முதலாவது  கலைத் திறமை ஒன்பது வயதில் என் ஒன்றுவிட்ட சகோதர பையன் களுடன் ஆண் வேடம் போட்டு வில்லுபாட்டு நடத்தியது என் ஊரவாரின் பாராட்டை பெற்றேன். எனக்குள்ளே கலையுலகவாழ்வு உள்ளடங்கி இருந்தது . இளம் வயதில் சின்ன் கதைபுத்தகங்கள். வாசிப்பேன். எனது மூத்த சகோதரி வாங்கும் குமுதம் கல்கி  ஆனத்தவிகடன் என்பன் எழுத்துக்கூட்டி வாசிப்பேன் . எனக்கும் அவருக்கு பத்து வயது வித்தியாசம் இடையில் ஆண் சகோ தரன்கள். பின்பு உயர்வகுப்பு முடிந்து  ஆசிரிய பயற்சிக்கு சென்று ஆசிரியையாக கடமையாற்றியபின் திருமணம் வந்தது. என் வெளியுலகவாழ்வு குறைந்து  இருகுழந்தைகள் வீடு.... வேலை என்று ஒரு முற்று புள்ளி வந்தது . ஓய்வு நேரங்களில் முன்பு கற்று இருந்த தட்டெழுத்து பயிற்சி கைகொடுக்க் அதை மாணவ மாணவிகளுக்கு சொல்லி கொடுத்தேன். பொழுது போக்காகவும் , பயனுள்ளதாகவும் இருந்தது .திடீரென ஒரு நாள் நம் நாட்டு ப  பிரச்சினை உச்சக்கட்ட்மடைய ..என் இரு கைக்குழந்தை  தைகளுடனும் .இடம்பெயர்ந்தேன். எதுவுமே என் வீட்டில்  எடுக்கவில்லை அன்று தொடங்கிய ஓட்டம் ஒவ்வொரு ஊராக சென்று புலம் பெயர்ந்து கனடா மண்ணிலே காலடி பதிக்கவைத்து . என்னவனுக்கு எங்கள் உயிரை தவிர வேறெதுவுமே வேண்டி  இருக்கவில்லை. சில காலங்களில் சற்று நோய்வாய் படேன். வெளியுலகமும் குறைவாக இருந்தது. என் பிள்ளைகளும்  வளர்ந்து வர அவர்களுக்கு கணனி வாங்கி கொடுத்தார்.

நான் மீளவும் கணணி  கற்று ஒரு தடவை "யாழ் இணையம் "எனும் ஒரு தளத்தின் அறிமுகம் கிடைத்து தமிழ் எழுத கற்று கொண்டேன். சில தடவை தமிழ் எழுத தனி விசைபலகை வாங்கவேண்டுமோ என் நினைத்ததுண்டு. அங்கும் சிலர் அறிமுகமாகி கூகிள் வழி மொழி மாற்றி மூலம் (.google transliterte ............) தமிழ் எழுதுகிறேன் இடையில் தமிழிச் போன்ற தளங்களும் வாசிப்பேன். ஒரு நாள் சில மாதங்களுக்கு முன் .blogger....wordpress ..... .என்பதை ஆராய்கையில் இதனுள் நுழைந்தேன். பகலில் மருந்து மாத்திரைகளினால் தூங்கி  எழுந்த நான் கண்ணியில் நுழைந்த பின்பகல் தூக்கம் மறந்தேன் என் னுள்ளே ஒரு உற்சாகம் ஒருவகை மலர்ச்சி .......கணணி ஒரு கடல் என்று கண்டு கொண்டேன். இதன் மூலம் ஆரம்பத்தில் சந்துரு, கிருத்திகன்  அபூ யோ சீமான் கனி  கதிர் ....எனும் நண்பர்கள்  அறிமுகமாகி(யாராவது விடுபடால்   மன்னிக்கவும் )  இன்று நாற்பத்தியேழு நட்புகளை கொண்ட ஒரு குழுவே உண்டு . தமிழ் நாட்டு  உறவுகள் கருத்து எழுதும் போது தொப்புள் கொடி உறவுகளின் அருகாமையை உணர்கிறேன்.அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கூட எழுதுகிறார்கள் என்று என்னும்போது என் இறக்கைகளால் வானில் பறப்பது போன்ற உணர்வு. இந்த வலைப்பதிவுக்கு வந்து சில அதாவது ஒரு சில மாதங்கள் மட்டுமே இடையில் சில் நுணுக்கங்களை இணைக்க தெரியாமல் தி ண்டாடியதும் உண்டு.

மீண்டும் பாடசாலை வாழ்க்கை போன்ற ஒரு உணர்வு.  நட்புக்கள் ....மடல்கள் ....பாராட்டுக்கள். வலை உலகம் ஒரு தனி உலகம். இணைந்திருப்போம் நண்பர்களாக.நீங்காத நினைவுடனும் மாறாத அன்புடனும். காலமெல்லாம்
கணனி நீடூழி வாழ்க .

16 comments:

Romeoboy said...

//என் வெளியுலகவாழ்வு குறைந்து இருகுழந்தைகள் வீடு.... வேலை என்று ஒரு முற்று புள்ளி வந்தது//

கல்யாணம் என்கிற கூடு எவ்வளவு கொடுமையான ஒரு .. கல்யாணத்து பிறகு பெண்கள் தங்களில் குடும்பத்தை பார்த்து கொள்ள வேண்டும் அதை தவிர ஒன்றும் இல்லை என்கிற கட்டுபாடு.

//பகலில் மருந்து மாத்திரைகளினால் தூங்கி எழுந்த நான் கண்ணியில் நுழைந்த பின்பகல் தூக்கம் மறந்தேன் என் னுள்ளே ஒரு உற்சாகம் ஒருவகை மலர்ச்சி//

உற்சாகம் எங்கு இருந்து பிறகும் என்று தெரியாது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் உங்களுக்கு கணிணி.


//கணிணி நீடூழி வாழ்க //

கோடான கோடி வாழ்த்துக்கள் .


அருமையான பதிவு ..

ஈரோடு கதிர் said...

அருமையான மனப்பகிர்வு

காற்றில் அலைந்து நம்மையெல்லாம் இணைக்கும் காந்த அலைகளுக்கு நன்றி

கவிக்கிழவன் said...

என்னவென்று சொல்வதம்மா உங்களின் முயற்சியை
இந்த கணணி மாடும் இல்லை என்றல் உங்கள் தாயாக உணர்வு உங்களுகுலேயே புதைந்து இருக்குமோ ????
தமிழன் எங்கு போனளும் புகுந்து விளையாடுவான் ஏல !!!!

Anonymous said...

//ஆடல்... பாடல் ...நாடகம்.... நாட்டுக் க்கூத்து மேடை பேச்சு என்பன நன்றாக வரும் ..///



என்னங்க இது ??வேற ஏதாவது கலை மிச்சம் இருக்குங்களா?



//என் இரு கைக்குழந்தை தைகளுடனும் .இடம்பெயர்ந்தேன். எதுவுமே என் வீட்டில் எடுக்கவில்லை அன்று தொடங்கிய ஓட்டம் ஒவ்வொரு ஊராக சென்று புலம் பெயர்ந்து கனடா மண்ணிலே காலடி பதிக்கவைத்து . என்னவனுக்கு எங்கள் உயிரை தவிர வேறெதுவுமே வேண்டி இருக்கவில்லை. //



கஷ்டம்தாங்க...கவலை படாதீங்க சீக்கிரம் ஒரு முடிவு வரும்..



ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க..



அன்புடன்,

அம்மு.

thiyaa said...

நல்ல பகிர்வு அக்கா

க.பாலாசி said...

அப்படின்னா பள்ளி நாட்களிலேயே ஆரம்பிச்சிட்டீங்க...நல்லது...

கலையார்வம்ங்கறது எல்லாருக்கும் அவ்வளவு சீக்கிரம் வரதில்லை. சின்ன வயசுலேயே உங்களிடம் அந்த ஆர்வம் இருந்தது பாராட்டுக்குறியது.

தொடருங்கள் வாழ்த்துக்கள்....

நிலாமதி said...

முதன் முதலாய் உங்கள் பதிவு .உங்கள் எதிர்பார்ப்பு ப்படியானால்நன்றி.எனக்கும் ஆத்மா திருப்தி வரவுக்கு நன்றி .

நிலாமதி said...

கதிர் உங்கள் கருத்துக்கு என் நன்றிகள். l

நிலாமதி said...

கணனியில் எழுத கிடைத்தது என் உள்ள உணர்வுகளின் வடிகால் போல. வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி .......

நிலாமதி said...

அம்மு நான் பள்ளிக்காலத்தில் சகல கலாவல்லி...ங்க. உங்க வரவுக்கு நன்றிகள்.

நிலாமதி said...

தியா உங்க வரவுக்கு நன்றி ......உங்களையும் இதில் இணைத்திருக்க வேண்டும் தவறிவிடேன். மன்னிக்கவும். வரவுக்கும் பதிவுக்கும் நன்றி.

நிலாமதி said...

ஆமாம் பாலாஜி .......பள்ளிக்காலத்தில் என் கலைத்தாகம் தொடங்கிவிட்டது. உங்க வரவுக்கு நன்றிகள்.

யோ வொய்ஸ் (யோகா) said...

வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா. தொடர்ந்து எழுதுங்கள்..

M.Thevesh said...

நல்ல பகிர்வு தொடருங்கள் வாழ்த்துக்கள்

நிலாமதி said...

யோ ...........உங்கள் வரவுக்கு நன்றி

CS. Mohan Kumar said...

நேர்மையாக மிகைபடுத்தல் இன்றி உங்களை பற்றி எழுதி உள்ளீர்கள். நன்றாக உள்ளது.

இணையம் என்ற மாபெரும் உலகில் நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவுவதும் (குறிப்பாக நீங்கள் எழுதியது போல் சில விஷயங்களை எப்படி கையாள்வது போன்ற தகவல்கள்), பாராட்டுவதும் நடக்கிறது. இது மிக நல்ல விஷயமே. தொடர்ந்து எழுதுங்கள்.

உங்கள் எழுத்துக்கள் உங்களுக்கும் எங்களுக்கும் மகிழ்வை தரட்டும்.

மோகன் குமார்
குறிப்பு: என் வலை மனைக்கு தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இயலும் போது எட்டி பாருங்கள்.